வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா பங்கேற்கும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஜூலை 12ஆம் தேதி துவங்குகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் இந்த தொடரில் யசஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கைக்வாட் ஆகிய இளம் வீரர்கள் தேர்வாகியுள்ளனர். அதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 2020இல் அறிமுகமாகி சிறப்பாக செயல்பட துவங்கிய ருதுராஜ் 2021 சீசனில் 635 ரன்கள் அடித்து ஆரஞ்சு தொப்பியை வென்று 4வது கோப்பையையும் வெல்ல உதவி இந்தியாவுக்காகவும் அறிமுகமானார்.
மேலும் 2022 சீசனில் சற்று சுமாராக செயல்பட்டாலும் இந்த வருடம் மீண்டும் அசத்திய அவர் சென்னை 5வது கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்றியதுடன் விஜய் ஹசாரே கோப்பை உள்ளூர் தொடரில் ஒரே ஓவரில் 7 சிக்ஸர்கள் அடித்து அசத்தியதால் இந்தியாவுக்கு தேர்வாகியுள்ளார். மறுபுறம் பானி பூரி விற்பவரின் மகானாக ஏழை குடும்பத்தில் பிறந்தாலும் உழைப்பால் உயர்ந்த ஜெய்ஸ்வால் 2020 அண்டர்-19 உலக கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரராக சாதனை படைத்து இந்தியா ஃபைனல் வரை செல்வதற்கு முக்கிய பங்காற்றி ரஞ்சிக்கோப்பை போன்ற உள்ளூர் தொடர்களிலும் அசத்தினார்.
கொடுத்து வெச்சுருக்கணும்:
அதனால் ஐபிஎல் தொடரிலும் அறிமுகமான அவர் இந்த வருடம் உச்சகட்டமாக 625 ரன்கள் குவித்து ஒரு சீசனில் அதிக ரன்கள் அடித்த சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத வீரர் என்ற சாதனை படைத்து இந்தியாவுக்காக விளையாட தேர்வாகியுள்ளார். முன்னதாக 2020 சீசனில் தோனியை முதல் முறையாக பார்த்த போது தம்மையே அறியாமல் ஜெய்ஸ்வால் கையெடுத்து மரியாதையுடன் கும்பிட்டதை. யாராலும் மறக்க முடியாது. இந்நிலையில் அந்த தருணத்தில் தோனியிடம் பேசுவதற்கு வார்த்தைகள் இல்லாமல் தடுமாறியாக தெரிவிக்கும் ஜெயஸ்வால் இது பற்றி பிசிசிஐ இணையத்தில் பேசியது பின்வருமாறு.
“தோனி சாரை முதல் முறையாக பார்த்த போது நான் வார்த்தைகளியின்றி தடுமாறினேன். அப்போது வணக்கம் சார் என்று மட்டுமே சொல்லி அவரை பார்த்தது எனக்கு பெரிய ஆசீர்வாதமாக அமைந்தது. அதை இப்போதும் சொல்வதற்கான வார்த்தைகள் என்னிடம் இல்லை” என்று கூறினார். மறுபுறம் 3 விதமான உலக கோப்பைகளை வென்று வரலாற்றின் மகத்தான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும் கேப்டனாகவும் சாதனை படைத்து விராட் கோலி, ரோஹித் சர்மா, ரெய்னா போன்ற பல மகத்தான வீரர்களை வளர்த்த தோனி தலைமையில் சென்னை அணியில் விளையாடுவது தம்முடைய அதிர்ஷ்டம் என்று ருதுராஜ் நெகிழ்ச்சியுடன் பேசினார்.
இது பற்றி ஜெய்ஸ்வாலுடன் நிகழ்த்திய உரையாடலில் அவர் பேசியது பின்வருமாறு. “அவருடன் நிறைய நேரங்கள் செலவழிப்பதற்கான வாய்ப்பு பெற்றுள்ள என்னை மிகவும் அதிர்ஷ்டசாலியாக கருதுகிறேன். குறிப்பாக ஒவ்வொரு போட்டி முடிந்ததும் அனுபவமிக்க அவரை இளம் வீரர்கள் எப்படியாவது சந்தித்து கிரிக்கெட்டை பற்றிய மதிப்பான ஆலோசனைகளை கேட்க விரும்புவதை நான் பார்த்து வருகிறேன். அப்படிப்பட்ட நிலையில் எனக்கு ஒரு வருடத்தில் 2 – 3 மாதங்கள் அவருடன் தொடர்ந்து இணைந்து விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது அதிர்ஷ்டமாகும்”
“மேலும் நீங்கள் உங்களுடைய கேரியரில் எப்படி செயல்பட்டாலும் ரன்கள் அடித்தாலும் இல்லையென்றாலும் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்ற மிகப்பெரிய பாடத்தை அவர் எனக்கு கற்றுக் கொடுத்துள்ளார்” என்று கூறினார். அந்த வகையில் தங்களுடைய ரோல் மாடலான தோனியை பாராட்டிய இந்த இளம் வீரர்கள் முதல் முறையாக இந்தியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் வாய்ப்பை வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் பெறுவதற்காக காத்திருக்கிறார்கள்.
இதையும் படிங்க:ஆசியகோப்பையில் இந்தியா விளையாடும். ஆனா பாகிஸ்தான்ல ஆட மாட்டாங்க – முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பி.சி.சி.ஐ நிர்வாகி
இருப்பினும் ஏற்கனவே ரோஹித் சர்மா – கில் ஆகிய ஓப்பனிங் ஜோடி தயாராக இருக்கும் நிலையில் இருவருமே தொடக்க வீரர்களாக இருப்பதால் அவர்களில் யாரிடம் ஒருவருக்கு மட்டுமே கழற்றி விடப்பட்ட புஜாராவுக்கு பதிலாக 3வது இடத்தில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில் ருதுராஜை விட (41) அதிக சராசரியில் (82) ரஞ்சிக்கோப்பையில் ரன்களை குவித்த ஜெய்ஸ்வாலுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.