ஆசியகோப்பையில் இந்தியா விளையாடும். ஆனா பாகிஸ்தான்ல ஆட மாட்டாங்க – முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பி.சி.சி.ஐ நிர்வாகி

IND vs PAK Babar Azam Rohit Sharma
- Advertisement -

பாகிஸ்தானில் இந்த ஆண்டு நடைபெறயிருக்கும் ஆசியக்கோப்பை தொடரில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தான் நாட்டிற்கு செல்லாது என்று ஏற்கனவே இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ அறிவித்திருந்தது. மேலும் மொத்த போட்டிகளும் பாகிஸ்தானில் நடைபெற்றால் அதில் பங்கேற்க மாட்டோம் என்று இந்தியா தெரிவித்திருந்த வேளையில் தற்போது சில திருத்தங்களுடன் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Asia Cup Trophy

- Advertisement -

அதன்படி ஆகஸ்டு 31-ஆம் தேதி துவங்கும் இந்த தொடரானது செப்டம்பர் 17-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய அணிகள் பங்கேற்று விளையாட இருக்கின்றன.

இந்நிலையில் இந்த ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி பங்கேற்கும் என்றும் ஆனால் இந்திய அணி விளையாடும் போட்டிகள் அனைத்தும் இலங்கை நாட்டில் நடைபெறும் என அருண் துமால் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

INDvsPAK-1

ஆசிய கோப்பைக்கான அட்டவணை இறுதி செய்யப்பட்டு விட்டது. அதன்படி பாகிஸ்தானில் நான்கு ஆட்டங்களும், இலங்கையில் இந்தியா-பாகிஸ்தான் போட்டி உட்பட ஒன்பது ஆட்டங்கள் நடைபெறும் என்று அருண் துமால் தெரிவித்துள்ளார். மேலும் ஒருவேளை இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதினால் மற்றும் ஒரு போட்டி இலங்கையில் நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

கடந்த 2010-ஆம் ஆண்டு இலங்கையில் உள்ள தம்புலாவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஆசிய கோப்பை போட்டியில் விளையாடின. அதேபோன்று இம்முறையும் அங்கேயே அந்த போட்டி நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த தொடரில் நடப்பு சாம்பியனாக இலங்கை அணி விளையாடயிருக்கிறது.

இதையும் படிங்க : “அதை சொல்ல வார்த்தைகளே இல்ல” தோனியை முதல் முறையாக நேரில் பார்த்த அனுபவத்தை – பகிர்ந்த யாஷஸ்வி ஜெய்ஸ்வால்

பாகிஸ்தானில் அந்த அணி நேபாளத்திற்கு எதிரான ஒரு போட்டியில் விளையாட இருக்கிறது. அதோடு ஆப்கானிஸ்தான்-வங்கதேசம், வங்கதேசம்-இலங்கை, இலங்கை-ஆப்கானிஸ்தான் என நான்கு போட்டிகள் அங்கு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement