CSK : மிக குறுகிய காலத்திலேயே ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டேவான் கான்வே ஆகியோர் சி.எஸ்.கே அணிக்காக – படைத்த சாதனை

Ruturaj-and-Conway
- Advertisement -

நடப்பு ஐபிஎல் தொடரின் ஆறாவது லீக் போட்டியானது நேற்று சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல் ராகுல் தங்களது அணி பந்துவீசும் என்று அறிவித்தார்.

ruturaj

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 217 ரன்களை குவித்தது. சென்னை அணி சார்பாக துவக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட் 57 ரன்களும் டேவான் கான்வே 47 ரன்களையும் குவித்து அசத்தினர்.

அதனை தொடர்ந்து 218 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய லக்னோ அணியானது 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் மட்டுமே குவித்து 12 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியிடம் தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் சென்னை அணியானது இந்த தொடரில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்ததோடு மட்டுமின்றி சொந்த மைதானத்தில் மிகச் சிறப்பான துவக்கத்தையும் கண்டுள்ளது.

Devon Conway

இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடிய சென்னை அணியின் துவக்க வீரர்களான ருதுராஜ் மற்றும் டேவான் கான்வே ஆகியோர் இணைந்து குறுகிய காலத்திலேயே வரலாற்றில் ஒரு மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

- Advertisement -

அதன்படி சென்னை அணிக்காக இதுவரை அதிக செஞ்சுரி பார்ட்னர்ஷிப்புகளை துவக்க வீரர்களாக எடுத்த ஜோடி என ருதுராஜ் மற்றும் கான்வே ஆகியோரது ஜோடி படைத்துள்ளது. நேற்றைய போட்டியில் சென்னை அணிக்காக முதல் விக்கெட்டுக்கு 110 ரன்கள் சேர்த்த அவர்கள் மூன்றாவது முறையாக நூறு ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து சாதனை படைத்துள்ளனர்.

இதையும் படிங்க : IPL 2023 : கப் வாங்கலாம்னு கனவு காணாதீங்க, டீம்ல ஏகப்பட்ட ஓட்டை இருக்கு – வெற்றிகரமான அணியை எச்சரிக்கும் டாம் மூடி

இதற்கு முன்னதாக முரளி விஜய் மற்றும் மைக்கேல் ஹஸ்ஸி ஆகியோர் இரண்டு முறை செஞ்சுரி பிளஸ் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளனர். அதே போன்று பிரண்டன் மெக்கல்லம் மற்றும் டுவைன் ஸ்மித் ஜோடி, டூப்ளிசிஸ் மற்றும் வாட்சன் ஜோடி, டூப்ளிசிஸ் மற்றும் ருதுராஜ் ஜோடி தலா இரண்டு முறை 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement