IPL 2023 : கப் வாங்கலாம்னு கனவு காணாதீங்க, டீம்ல ஏகப்பட்ட ஓட்டை இருக்கு – வெற்றிகரமான அணியை எச்சரிக்கும் டாம் மூடி

- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் மும்பை இந்தியன்ஸ் தன்னுடைய முதல் போட்டியில் பெங்களூருவிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. கடந்த வருடம் வரலாற்றிலேயே முதல் முறையாக 6 தொடர் தோல்விகளை சந்தித்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்து பெரிய அவமானத்தை சந்தித்த அந்த அணி இந்த வருடம் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியுள்ளது. ஆனால் முதல் போட்டியில் சூரியகுமார் யாதவ், இசான் கிசான், ரோகித் சர்மா உள்ளிட்ட டாப் பேட்ஸ்மேன்கள் தடவலாக செயல்பட்டது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

Kohli

- Advertisement -

ஏனெனில் திலக் வர்மா தனி ஒருவனாக போராடி 84* ரன்கள் குவித்ததால் ஓரளவு தப்பிய மும்பை நிர்ணயித்த 172 ரன்களை துரத்திய பெங்களூருவுக்கு விராட் கோலி மற்றும் டு பிளஸிஸ் ஆகியோர் 148 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் விளாசி எளிதான வெற்றியை பெற்றுக் கொடுத்தனர். அதனால் கடந்த 2013 முதல் தொடர்ந்து தன்னுடைய முதல் போட்டியில் தோற்று வரும் மும்பை 11வது முறையாக இந்த சீசனிலும் முதல் போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளது. ஆனால் அதே காலகட்டத்தில் 5 கோப்பைகளை வென்ற காரணத்தால் நிச்சயமாக அடுத்து வரும் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு இந்த சீசனில் 6வது கோப்பையை வெல்வோம் என்று மும்பை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கெத்தாக பேசி வருகிறார்கள்.

கனவு காணாதீங்க:
இருப்பினும் சமீபத்தில் ஹாட்ரிக் கோல்டன் டக் அவுட்டான சூரியகுமார், ரோஹித் சர்மா, இஷான் கிசான் ஆகியோர் தற்போது சுமாரான ஃபார்மில் தவிக்கும் மும்பைக்கு பந்து வீச்சு துறையில் எதிர்பார்க்கப்பட்டது போலவே பும்ரா இல்லாத சூழ்நிலையில் ஜோப்ரா ஆர்ச்சர் உள்ளிட்ட இதர பவுலர்களும் சுமாராகவே செயல்பட்டு வருகிறார்கள். அதனால் முதல் போட்டியில் வென்றாலும் கோப்பையை வெல்வோம் என்று பேசி பேசியே கடந்த வருடம் முதல் 6 போட்டிகளில் தோல்வியை சந்தித்தது போல் இம்முறையும் மும்பை மோசமாக செயல்படுவதற்கான அறிகுறிகள் முதல் போட்டியில் தோற்ற விதத்திலிருந்து தெரிகிறது எனலாம்.

MI Jaspirt Bumrah

இந்நிலையில் தரமான உள்ளூர் இந்திய வீரர்கள் மற்றும் நட்சத்திர வெளிநாட்டு வீரர்கள் இடங்களில் சமமற்ற நிலையை கொண்டுள்ள மும்பை இந்த சீசனில் ஃபைனலுக்கு கூட செல்லாது என்று முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டாம் மூடி வெளிப்படையாக தெரிவித்துள்ளார். மும்பை அணியில் நிலவும் சில பிரச்சனைகளை விவரிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “இந்த ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பே நான் அதை அழைத்ததால் மும்பை அணிக்காக நான் கவலைப்படுகிறேன். ஏனெனில் அவர்கள் ஃபைனலை நெருங்கி செல்வார்கள் என்று நான் நினைக்கவில்லை”

- Advertisement -

“காரணம் அவர்களது அணியில் அதிகப்படியான ஓட்டைகள் இருப்பதாக நான் கருதுகிறேன். குறிப்பாக அவர்களது அணியில் சமநிலை தன்மை இருப்பதாக எனக்கு தெரியவில்லை. அதிலும் குறிப்பாக அவர்களின் பந்து வீச்சுத் துறையில் இருக்கும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வீரர்களிடம் நல்ல ஆழமான திறமை இல்லை. அவர்களுடைய வெளிநாட்டு வீரர்களில் சமநிலைத் தன்மை இல்லை. மாறாக அவர்களிடம் டிம் டேவிட், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ், தேவாலட் ப்ரேவிஸ் போன்ற அதிகப்படியான இளம் பவர் ஹிட்டர்கள் இருக்கிறார்கள்”

” 3 இடங்களில் அவர்கள் மட்டுமே 3 இடத்தை எடுத்துக் கொள்கிறார்கள். அதே போல் மும்பை அணியின் அணி தேர்வும் எனக்கு சரியாக புரியவில்லை. மறுபுறம் அனுபவம் எவ்வளவு முக்கியமானது என்பதை ஆர்சிபி அணியில் பாருங்கள். அவர்களைப் போல் மும்பை இந்தியன்ஸ் அணியில் அனுபவம் எங்கே இருக்கிறது” என்று கூறினார்.

இதையும் படிங்க:IPL 2023 : எதிரணிக்கு இம்பேக்ட் வீரராக செயல்படும் அவரை ட்ராப் பண்ணுங்க, இளம் வீரர் மோசமான சாதனை – ரசிகர்கள் அதிருப்தி

அதாவது மும்பை அணியின் மிடில் ஆர்டரில் முழுக்க முழுக்க இளம் பவர் ஹிட்டர்களாக இருப்பதாக தெரிவிக்கும் டாம் மூடி பந்து வீச்சுத் துறையிலும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பவுலர்களிடம் சமநிலை தன்மை இல்லை என்று கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து வரும் ஏப்ரல் 8ஆம் தேதியன்று தன்னுடைய 2வது போட்டியில் சென்னையை மும்பை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

Advertisement