என்னை விட இவரே பெரிய ஹிட்டர். அவரை வீழ்த்தியதில் எனக்கு மகிழ்ச்சி – ரஸ்ஸல் பேட்டி

Russel
- Advertisement -

நேற்று இரவு 8 மணிக்கு நடந்த 6 ஆவது போட்டியில் கொல்கத்தா அணியும், பஞ்சாப் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது பஞ்சாப் அணி அதனால் கொல்கத்தா அணி முதலில் களமிறங்கியது.

Kxip

- Advertisement -

அதன்படி முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் குவித்தது. இதனால் 219 ரன்கள் இலக்கு பஞ்சாப் அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து ஆடிய பஞ்சாப் அணி 190 ரன்களை மட்டுமே எடுத்து 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்த போட்டியில் 17 பந்துகளில் 48 ரன்கள் குவித்த ரஸ்ஸல் ஆட்டநாயகன் விருதினை பெற்றார். பிறகு பேசிய ரஸ்ஸல் : இந்த போட்டியில் நான் விளையாடிய விதம் எனக்கு மகிழ்ச்சியை தந்தது. மேலும், நான் அவுட் ஆகும்போது அனைவரும் வெளியில் இருந்து நோபால் என கூறினார்கள். நானும் காலை வெளியில் வைத்து பந்துவீசியதாக நினைத்து நோபாலாக இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு இருந்தேன். ஆனால் பிறகு தான் தெரிந்தது அது பீல்டர்கள் நிற்பதின் அடிப்படையில் கொடுக்கப்பட்டது என்று.

Russell

மேலும், கெயில் எனது சகோதரர் போல. அவரே என்னை விட பெரிய ஹிட்டர். ஆனால், இந்த போட்டியில் மறந்துவிட்டு நான் விளையாடினேன். அதனால் தான் என்னால் சிறப்பாக விளையாட முடிந்தது என்று ரஸ்ஸல் கூறினார்.

Advertisement