125 ரன்களுக்கு சுருண்டது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, சன் சன்ரைசர்ஸ் அணி அபார வெற்றி !

Sunrisers
- Advertisement -

11வது ஐபிஎல் சீசனில் இன்று ஹைதராபாத் சன் சன்ரைசர்ஸ் அணி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினர் முதல் லீக் போட்டியில் மோதினர்.

ஹைதராபாத் ராஜீவ்காந்தி மைதானத்தில் நடைபெற்ற இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

- Advertisement -

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரஹானே மற்றும் ஷாட் களமிறங்கினர்.
ராஜஸ்தான் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது. ஷாட் நான்கு ரன்களை எடுத்திருந்தபோது கேன்வில்லியம்சிடம் ரன் அவுட் ஆனார்.

அடுத்தபடியாக ரஹானேவுடன் ஜோடி சேர்ந்தார் சஞ்சய் சாம்சன். 13ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹைதராபாத் ரஹானே கௌல் பந்தில் ஆட்டமிழக்க அடுத்து வந்த வீரர்களும் சீரான இடைவெளியில் ஒருவர் பின் ஒருவராக பெவிலியன் திரும்ப ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20ஓவர்களின் முடிவில் 9விக்கெட்டுகளை இழந்து 125 ரன்களுக்கு சுருண்டது.

- Advertisement -

ராஜஸ்தான் அணி சார்பில் அதிகபட்சமாக அந்த அணியின் சாம்சன் 42பந்துகளில் 5பவுண்டரிகள் உட்பட 49ரன்கள் எடுத்தார்.

ஹைதராபாத் அணி தரப்பில் ஷாகிப் அல் அசேன் மற்றும் கௌல் தலா இரண்டு விக்கெட்டுகளையும், புவனேஷ் குமார், ரஷீத்கான் மற்றும் ஸ்டேன்லேக் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

- Advertisement -

பின்னர் 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலகுவான இலக்குடன் களமிறங்கியது ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணி.

சன்ரைசர்ஸ் தரப்பில் ஷிகர் தவான் மற்றும் விருதிமான் சாஹா தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்க
சாஹா 5ரன்கள் எடுத்திருந்தபோது ஜெயதேவ் உனட்கட் பந்துவீச்சில் பென் லாஃப்லினிடம் கேட்ச் தந்து அவுட்டானார்.

- Advertisement -

பின்னர் ஷிகர் தவானுடன் ஜோடி சேர்ந்தார் கேன் வில்லியம்சன். இருவரும் அதிரடியாக விளையாடி ஹைதராபாத் அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச்சென்றனர்.

சிறப்பாக விளையாடிய ஷிகர்தவான் ஆட்டமிழக்காமல் 57 பந்துகளில் 13 பவுண்டரிகள் 1சிக்ஸர் உட்பட 77 ரன்களை குவிக்க கேன் வில்லியம்சன் 35 பந்துகளில் 3பவுண்டரிகள் ஒரு சிக்ஸருடன் 36 ரன்களை சேர்த்தார்.

இருவரது சிறப்பான ஆட்டத்தினால் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணி 15.5 ஓவர்களிலேயே 127 ரன்களை எடுத்து 9விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

சிறப்பாக விளையாடி 53 பந்துகளில் 77 ரன்களை குவித்த ஷிகர்தவான் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Advertisement