கார் விபத்தில் சிக்கி அகால மரணமடைந்த ரசிகர்களின் மனதை கவர்ந்த அம்பயர் – வெளியான துக்கசெய்தி

Rudi-Koertzen
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் போட்டிகளை களத்தில் நின்று கணித்து முடிவுகளை அறிவிக்கும் அம்பயர்களின் பணி என்பது இன்றளவும் இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. நவீன கிரிக்கெட்டில் எத்தனையோ தொழில்நுட்பங்கள் தற்போது வந்தாலும் இரு அணிகளும் விளையாடுகையில் மைதானத்தில் இருந்து எவ்வித அணிக்கும் சாதகமாக இல்லாமல் சரியான தீர்ப்புகளை வழங்கும் நடுவர்களின் மீது இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பெரிய மதிப்பு உள்ளது.

Rudi Koertzen 1

- Advertisement -

அந்த வகையில் இதுவரை எத்தனையோ அம்பயர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் செயல்பட்டு வந்தாலும் ஒரு சில அம்பயர்கள் ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்திருப்பார்கள். அந்த வகையில் தென் ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த ரூடி கொயர்ட்சன் ரசிகர்களின் மனதை வென்ற சிறப்பான அம்பயராக இருந்து வந்தார்.

இந்நிலையில் அவர் இன்று கார் விபத்தில் பலியான செய்தி வெளியாகி ரசிகர்களின் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 73 வயதான ரூடி கொயர்ட்சன் தென் ஆப்பிரிக்க நாட்டில் நடைபெற்ற ரயில்வே கிரிக்கெட்டில் 1981 ஆம் ஆண்டு முதல் முறையாக அம்பயராக பணியாற்றினார்.

Rudi Koertzen 2

அதன் பின்பு 11 ஆண்டுகள் கழித்து இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே போர்ட் எலிசபத்தில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட்டில் அம்பயராக அறிமுகம் ஆகினார். அப்படி அறிமுகமானதிலிருந்து தனது சிறப்பான முடிவுகளின் மூலம் ரசிகர்களின் மனதை வென்ற அம்பயர் ரூடி கொயர்ட்சன் தனது கெரியரில் சிறப்பான அம்பயராக திகழ்ந்து ஓய்வு பெற்றார்.

- Advertisement -

ஒட்டுமொத்தமாக 331 சர்வதேச போட்டிகளில் அம்பயராக செயல்பட்டுள்ள அவர் கடந்த 2010 ஆம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெற்றார்.

இதையும் படிங்க : ஆசிய கோப்பை 2022 : கழற்றி விடப்பட்ட ஷமி, அவரை விட இவர் குறைந்தவரா? – 2 முன்னாள் வீரர்கள் கேள்வி

இந்நிலையில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அவர் தனிப்பட்ட வாழ்க்கையில் கவனம் செலுத்தி வந்த வேளையில் 73 வயதான அவர் தென் ஆப்பிரிக்காவில் கோல்ப் விளையாட்டினை முடித்து வீடு திரும்பும் போது நடந்த கார் விபத்தில் அகால மரணம் அடைந்தார் என்ற செய்தி வெளியாகி தற்போது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement