ஆசிய கோப்பை 2022 : கழற்றி விடப்பட்ட ஷமி, அவரை விட இவர் குறைந்தவரா? – 2 முன்னாள் வீரர்கள் கேள்வி

shami
- Advertisement -

ஐக்கிய அரபு நாடுகளில் வரும் ஆகஸ்ட் 27 முதல் வரலாற்றின் 15ஆவது ஆசிய கோப்பை துவங்குகிறது. வரும் அக்டோபரில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் இம்முறை 20 ஓவர் தொடராக நடைபெறும் இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான் உட்பட ஆசியாவின் டாப் 6 அணிகள் களமிறங்குகின்றன. இந்த தொடரில் இந்தியா தனது முதல் போட்டியில் வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதியன்று பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. அந்த நிலைமையில் இத்தொடரில் பங்கேற்கும் ரோகித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ நேற்று வெளியிட்டது. அதில் காயத்திலிருந்து குணமடைந்துள்ள கேஎல் ராகுல் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஃபார்மின்றி தவிக்கும் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி அணிக்குத் திரும்பியுள்ளார்.

IND

- Advertisement -

அவர்களுடன் சூரியகுமார் யாதவ், தினேஷ் கார்த்திக், தீபக் ஹூடா, அர்ஷிதீப் சிங் போன்ற சமீபத்திய டி20 தொடர்களில் அசத்திய இளம் வீரர்களும் சீனியர் வீரர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும் சஞ்சு சாம்சன், இஷான் கிசான் ஆகிய திறமையான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதேசமயம் முதன்மை வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோர் கடைசி நேரத்தில் சந்தித்த காயத்தால் இந்த தொடரிலிருந்து வெளியேறியுள்ளனர்.

கழற்றிவிடப்பட்ட ஷமி:
இந்த தொடரில் எதிர்பார்க்கப்பட்டது போலவே சீனியர் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இடம்பெறவில்லை. கடைசியாக கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற 2021 டி20 உலக கோப்பையில் முழுமையாக விளையாடிய அவருக்கு ஹர்ஷல் படேல் போன்ற அடுத்த தலைமுறை பந்துவீச்சாளர்கள் வந்ததால் மேற்கொண்டு ஒரு போட்டியில் கூட விளையாடும் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இருப்பினும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் முதன்மை பந்துவீச்சாளராக விளையாடி வரும் அவர் 31 வயதை கடந்து விட்ட காரணத்தால் இனிமேல் டி20 கிரிக்கெட்டுக்கு சரிப்பட்டு வரமாட்டார் என்ற கோணத்தில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க முடிவு செய்துள்ள தேர்வுக்குழு அதை அவரிடம் நேரடியாகவே தெரிவித்து விட்டதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்திகள் வெளியானது.

shami 1

தற்போது அந்த செய்திகளை உண்மையாக்கும் வகையில் ஆசிய கோப்பையில் இடம் பெறாத அவர் இனிமேல் எப்போதுமே இந்தியாவுக்காக டி20 கிரிக்கெட்டில் விளையாட போவதில்லை என்பது அதிகாரப்பூர்வமாக தெரியவந்துள்ளது. ஆனால் ஐபிஎல் தொடரில் இப்போதும் சிறப்பாக செயல்பட்டு வரும் அவர் இந்த வருடம் குஜராத் அணியில் 16 போட்டிகளில் 20 விக்கெட்டுகளை 8.00 என்ற நல்ல எக்கனாமியில் எடுத்து கோப்பையை வெல்ல உதவிய போதிலும் தேர்வுக்குழு கழற்றிவிடும் முடிவெடுத்துள்ளது பல ரசிகர்களை ஆதங்கப்பட்ட வைக்கிறது.

- Advertisement -

ஆவேஷை விட மோசமா:
அதிலும் காயமடைந்த பும்ரா மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோருக்கு பதிலாக சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ரன்களை வாரி வழங்கிய ஆவேஷ் கானை விட முகமது சமி திறமையிலும் அனுபவத்திலும் குறைந்து போய் விட்டாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

chopra

இந்நிலையில் தாமாக இருந்தால் கண்ணை மூடிக்கொண்டு ஆவேஷ் கானுக்கு பதில் ஷமியை தேர்வு செய்வேன் என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தும் முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா ஷமியும் திறமையை அனைவரும் மறந்து விட்டதாக வேதனை தெரிவித்துள்ளார். இதுபற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“என்னை தவிர்த்து அனைவரும் ஏன் முகமது ஷமியை மறந்து விட்டார்கள் என்றே தெரியவில்லை. சிறப்பாக செயல்படக்கூடிய அவர் ஐபிஎல் தொடரிலும் அசத்தியுள்ளார். ஆவேஷ் கான் மற்றும் முகமது சமி ஆகியோரை தேர்வு செய்ய போட்டி ஏற்பட்டால் நான் கண்ணை மூடிக்கொண்டு ஷமியை தேர்ந்தெடுத்தேன். அதற்காக நான் ஆவேஷ் கானுக்கு எதிரானவன் அல்ல. ஆனால் பும்ரா இல்லாத சமயத்தில் ஷமிக்கும் வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும் என்று கருதுகிறேன். என்னுடைய அணியில் அவர் நிச்சயமாக இருப்பார். அதேபோல் அக்சர் படேலும் இடம் பிடிக்க தகுதியானவர்” என்று கூறினார்.

Srikkanth

ஸ்ரீகாந்த் அதிருப்தி:
அதேபோல் தாம் தேர்வுக்குழு தலைவராக இருந்தால் ஷமியை நிச்சயம் தேர்வு செய்திருப்பேன் என்று முன்னாள் இந்திய தமிழக வீரர் ஸ்ரீகாந்த் தெரிவித்துப் பேசியது பின்வருமாறு. “என்னுடைய அணியில் ஷமி நிச்சயமாக இருப்பார். நான் தேர்வுக்குழு தலைவராக இருந்தால் அவர் நிச்சயமாக இடம் பெற வேண்டுமென்று நினைப்பேன்.

இதையும் படிங்க : ஆசிய கோப்பை 2022 : அவங்க 2 பேருக்கும் காயம் அதனாலதான் அவங்கள செலக்ட் பண்ணல – பி.சி.சி.ஐ விளக்கம்

ஆனால் ரவி பிஷ்னோயை தேர்வு செய்திருக்க மாட்டேன். அவருக்கு பதில் அக்சர் படேல் இடம் பிடித்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த அணியில் அக்ஷர் பட்டேல் மற்றும் அஷ்வின் ஆகியோருக்கிடையே தேர்வு செய்யும்போது மிகப்பெரிய போட்டி ஏற்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன்” எனக்கூறினார்.

Advertisement