19 வயசுல கோலி செய்த அட்டகாசம் பற்றி உங்களுக்கு தெரியுமா ? அவர் ரொம்ப மோசம் – வங்கதேச வீரர் குற்றச்சாட்டு

Rubel

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மூன்று வகை கிரிக்கெட்டுக்கும் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். அவரின் கேப்டன்சியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வந்தாலும், அவரது ஆக்ரோஷமான கேப்டன்சி சிலரால் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் அவரது பலமே அவரது ஆக்ரோஷம் தான் என்றும் பலரும் கூறி வருகின்றனர்.

kohli 2

இப்படி கோலி களத்தில் தனது உணர்ச்சிகளை பல்வேறு போட்டிகளில் தனது கோபத்தின் மூலம் வெளிக்காட்டி உள்ளதை நாம் பார்த்திருக்கிறோம். இந்நிலையில் தற்போது கோலி கோபப்பட்டால் பந்துவீச்சாளர்களை கெட்டவார்த்தையில் திட்டவும் செய்வார் என்று ஒரு தகவலை வங்கதேச வீரர் அல் அமீன் என்பவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ஃபேஸ்புக் நேரலையில் பேசியதாவது :

நான் சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த பேட்ஸ்மேன்களான ரோகித் சர்மா, தவான் மற்றும் கெயில் என பல்வேறு வீரர்களுக்கும் பந்துவீசி உள்ளேன். ஆனால் கோலியைப் போல அதிக கோபப்படுபவர்களை பார்த்தது இல்லை என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில் : விராட் கோலிக்கு எதிராக ஒவ்வொரு முறையும் டாட் பால் வீசும் போதும் அவர் நம்மை வம்புக்கு இழுப்பார் மேலும் ரசிகர்களின் முன்னிலையில் சொல்ல முடியாத அளவு அசிங்கமான வார்த்தைகளால் திட்டுவார்.

amin

ஒவ்வொரு முறையும் பந்துவீச்சாளர்களுக்கு தனது வார்த்தைகளின் மூலம் நெருக்கடி அளிப்பார் மனதளவிலும் அவர் தொந்தரவு செய்வார் என்று கூறியுள்ளார். மேலும் கிறிஸ் கெயில், ஷிகர் தவான், ரோகித் சர்மா போன்றவர்களுக்கு பௌலிங் செய்துள்ளதாகவும் ஆனால் அவர்கள் யாரும் இப்படி ஆக்ரோஷபட்டோ, கோபப்பட்டோ நான் பார்த்தது இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

நான் பொதுவாக பேட்ஸ்மேன்களுக்கு எதிராக நல்ல பந்து வீசினால் தடுத்து ஆடுவார்கள் எதுவும் பேச மாட்டார்கள் ஆனால் கோலி அப்படி இல்ல உடனடியாக வம்புக்கு இழுத்து சீண்டுவார் என்றும் அவர் கூறியுள்ளார். முன்னதாக கடந்த வாரம் பேசிய மற்றொரு வங்கதேச வீரர் ரூபல் ஹுசைன் கோலி குறித்த கருத்தினை தெரிவித்திருந்தார்.

rubel

அதில் கோலி களத்தில் எப்படி நடந்து கொள்வார் என்பது அனைவருக்கும் தெரியும். இந்திய கிரிக்கெட் அணிக்காக ஆடும் போது அவர் கொஞ்சம் கோபத்தை குறைத்துள்ளார். ஆனால் 19 வயதுக்குட்பட்டோர் அணியில் கோலி எப்படி இருந்தார் என அனைவருக்கும் தெரியும் என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது. அவர் குறிப்பிட்டதில் இருந்து அண்டர் 19 அணியில் மிகுந்த கோபத்துடன் ஆவேசப்படும் வீரராக கோலி நடந்துகொண்டார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அப்போது அவரின் கோவம் வெளியில் தெரியாமல் இருந்தது. இப்போது சர்வதேச போட்டியில் ஆடுவதால் அவரது செயல்பாடுகள் வெளியில் தெரிகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.