- Advertisement -
உலக கிரிக்கெட்

மழை வந்தால் கோப்பை யாருக்கு? 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் – வெதர் ரிப்போர்ட், ரூல்ஸ் இதோ

ஐசிசி 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதிப்போட்டி ஜூன் 11ஆம் தேதி நடைபெறுகிறது. அந்தப் போட்டியில் தென்னாபிரிக்கா மற்றும் நடப்புச் சாம்பியன் ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன. ஐசிசி வரலாற்றில் மிகச்சிறப்பாக செயல்படும் தன்மையைக் கொண்டுள்ள ஆஸ்திரேலியா இம்முறையும் தென்னாப்பிரிக்காவை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை தக்க வைக்க தயாராக உள்ளது.

மறுபுறம் வலுவான ஆஸ்திரேலியாவை வீழ்த்தி முதல் முறையாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்று சாதனை படைக்க தென்னாப்பிரிக்காவும் தயாராக உள்ளது. அதனால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்போட்டி இங்கிலாந்தின் லண்டனில் இருக்கும் லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு துவங்குகிறது. வரலாற்றில் தென்னாபிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 101 டெஸ்ட் போட்டிகளில் மோதியுள்ளன.

- Advertisement -

லார்ட்ஸ் மைதானம்:

அதில் ஆஸ்திரேலியா 54 வெற்றிகளைப் பெற்ற நிலையில் தென்னாப்பிரிக்கா 26 வெற்றிகள் பெற்றது. 21 போட்டிகள் டிராவில் முடிந்தது. இந்நிலையில் இந்தப் போட்டியில் மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கை தெரிவிக்கிறது. அதன் படி முதல் நாளில் மழை பெய்வதற்கு பெரியளவில் வாய்ப்பில்லை என்பதால் போட்டி வழக்கம் போல துவங்கி நடைபெறும் என்று நம்பலாம்.

துவக்க நாளில் வானம் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் இருக்கும் என்று தெரிய வருகிறது. இருப்பினும் 2 மற்றும் 3வது நாட்களில் 65% மற்றும் 60% மழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை அறிக்கை தெரிவிக்கிறது. அதே சமயம் 4வது நாளில் மழை பெய்வதற்கான வாய்ப்பில்லை என்று தெரிய வருகிறது.

- Advertisement -

கோப்பை யாருக்கு:

கடைசி நாளில் 20 – 30% மழை பெய்வதற்கு வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. இது போன்ற சூழ்நிலைகளை சமாளிப்பதற்காக ஜூன் 16ஆம் தேதி ரிசர்வ் நாள் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது. அதனால் 5 நாட்களிலும் எவ்வளவு ஓவர்கள் மழையால் பாதிக்கப்படுகிறதோ அவ்வளவு ஓவர்களை ரிசர்வ் நாளில் நடத்தி போட்டியை முடிக்க நடுவர்கள் முயற்சி செய்வார்கள்.

இதையும் படிங்க: விராட் கோலி சொன்ன மாதிரி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை இப்படி மாத்துங்க.. ஐசிசி’க்கு ஸ்மித் கோரிக்கை

ஒருவேளை அதையும் தாண்டி மழை பெய்தால் சாம்பியன் பட்டம் இரு அணிகளுக்கும் பகிர்ந்து கொடுக்கப்படும். வரலாற்றில் ஐசிசி தொடர்களில் முக்கிய நேரத்தில் மழை வந்து தென்னாப்பிரிக்காவின் கோப்பை வெல்லும் கனவை பலமுறை உடைத்துள்ளது. எனவே லண்டனில் நிலவும் வானிலை தென்னாப்பிரிக்கா ரசிகர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது.

- Advertisement -