- Advertisement -
உலக கிரிக்கெட்

இந்தியாவுக்கு அடுத்து 2 ஆவது அணியாக சாம்பியன்ஸ் டிராபியில் சாதனை நிகழ்த்திய தென்னாப்பிரிக்கா – விவரம் இதோ

நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டியானது நேற்று கராச்சி நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் தெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணியும், ஹஸ்மதுல்லா ஷாஹிதி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும் மோதினர். இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தென்னாப்பிரிக்க அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தியிருந்தது.

தென்னாப்பிரிக்க அணி நிகழ்த்திய சாதனை :

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 315 ரன்கள் குவித்தது.

- Advertisement -

பின்னர் 316 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணியானது தென்னாப்பிரிக்கா அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 43.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 208 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக 107 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி இந்திய அணிக்கு அடுத்து சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஒரு குறிப்பிட்ட முக்கிய சாதனையை நிகழ்த்திய இரண்டாவது அணியாக சாதனை நிகழ்த்தியுள்ளது.

- Advertisement -

அந்த வகையில் நேற்றைய போட்டியில் தெனனாப்பிரிக்க அணி விளையாடுகையில் துவக்க வீரராக களமிறங்கிய ரிக்கல்டன் 106 பந்துகளை சந்தித்து 7 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் என 103 ரன்கள் அடித்தார். அவரை தவிர்த்து தெம்பா பவுமா 58 ரன்களையும், வான்டர்டுசைன் 52 ரன்களையும், மார்க்ரம் 52 ரன்களையும் குவித்தனர்.

இதையும் படிங்க : ரோஹித், கோலி போதும்.. இந்தியா அந்த உ.கோ ஜெய்க்க புதிய அணியை உருவாங்குங்க.. கம்பீருக்கு கும்ப்ளே அட்வைஸ்

இதன் மூலம் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் ஒரு போட்டியில் ஒரே இன்னிங்ஸில் நான்கு வீரர்கள் 50 ரன்களுக்கு மேல் அடித்த 2 ஆவது அணியாக தென்னாப்பிரிக்கா சாதனை நிகழ்த்தியது. இதற்கு முன்னதாக 2017-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணியின் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, ஷிகர் தவான், யுவராஜ் சிங் ஆகிய நால்வரும் ஒரே இன்னிங்சில் 50 ரன்களை கடத்திருந்தனர்.

- Advertisement -