13 வருடத்துக்கு ஈடான சம்பளத்துக்காக கூண்டோடு ஐபிஎல் தொடரில் கமிறங்கும் வெளிநாட்டு வீரர்கள் – விவரம் இதோ

ipl trophy
- Advertisement -

ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 26-ஆம் தேதி முதல் மே 29-ஆம் தேதி வரை கோலாகலமாக 2 மாதங்கள் நடைபெறுகிறது. மொத்தம் 74 போட்டிகள் கொண்ட பிரமாண்ட ஐபிஎல் தொடராக நடைபெறும் இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

IPL
IPL Cup

இந்த நேரத்தில் தென்ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணி அங்கு அந்த அணிக்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்க உள்ளது. மார்ச் 18-ஆம் தேதி முதல் ஏப்ரல் 12-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் பங்கேற்க ஏற்கனவே வங்கதேசம் அந்நாட்டிற்கு சென்றுள்ளது.

- Advertisement -

ஐபிஎல் தொடரை தேர்வு செய்த வீரர்கள்:
இதே நேரத்தில் ஐபிஎல் நடைபெற உள்ளதால் தென் ஆபிரிக்காவைச் சேர்ந்த ககிஸோ ரபாடா, அன்றிச் நோர்ட்ஜெ போன்ற நட்சத்திர வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்க மாட்டார்கள் என செய்திகள் வெளியாகின. அந்த நேரத்தில் ஐபிஎல் தொடர் துவங்குவதற்கு முன்பாகவே முதலில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்காக அறிவிக்கப்பட்ட தென்னாபிரிக்க அணியில் அவர்களின் பெயர் இடம் பெற்றது.

Rabada 1

ஆனால் அதன்பின் வரும் மார்ச் 31 மற்றும் ஏப்ரல் 8 ஆகிய தேதிகளில் நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான தென்ஆப்பிரிக்க அணியில் விளையாடிகிறீர்களா? அல்லது ஐபிஎல் தொடரில் விளையாடிகிறீர்களா? என்ற முக்கியமான கேள்வியை ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் தென்ஆப்பிரிக்க வீரர்களிடம் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் எழுப்பியது. அதற்கு ஐபிஎல் தொடரில் விளையாட விரும்புவதாக தென்ஆப்பிரிக்க வீரர்கள் பதிலளித்து தேர்வு செய்ததன் காரணமாக அவர்களை வங்கதேச டெஸ்ட் தொடருக்கான தென்னாபிரிக்க அணியில் தேர்வு செய்யாத அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் ஐபிஎல் தொடரில் விளையாட முழுமையான அனுமதியை அளித்துள்ளது.

- Advertisement -

தாய்நாட்டை புறக்கணித்த தென்ஆப்பிரிக்க வீரர்கள்:
அதிலும் குறிப்பாக வங்கதேச டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் தென் ஆப்பிரிக்க அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் எந்த ஒரு வீரரின் பெயரும் இடம் பெறவில்லை. இதுபற்றி தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் கூறியது பின்வருமாறு. “ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் வீரர்களின் வாய்ப்பை தடுக்க நாங்கள் விரும்பவில்லை. வீரர்கள் மற்றும் தேசத்திற்காக ஆற்றவேண்டிய கடமைக்காக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் மற்றும் தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரிய வீரர்கள் சங்கத்தின் இடையே இருக்கும் புரிந்துணர்வை நாங்கள் மதிக்கிறோம்” என அறிவித்துள்ளது.

rabada

அதாவது ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக அந்நாட்டு கிரிக்கெட் வாரிய வீரர்கள் அடங்கிய சங்கம் ஏற்கனவே அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்திடம் அனுமதி கேட்டு ஒப்புதல் பெற்றதை தற்போது மதிப்பதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இது பற்றி தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரிய தேர்வு குழு தலைவர் விக்டர் பிட்சங் கூறியது பின்வருமாறு. “ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக எங்களின் வீரர்களை இழப்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றல்ல. இருப்பினும் தற்போதைய அணியில் நாங்கள் தேர்வு செய்துள்ள வீரர்களை வருங்கால மன்னர்களாய் வளர்ப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என கூறினார்.

- Advertisement -

13 வருடத்துக்கு ஈடான சம்பளம்:
இதை அடுத்து ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் தென்ஆப்பிரிக்க வீரர்கள் எந்த தடையுமின்றி முழுமையாக விளையாடுவார்கள் என தெரிய வருகிறது. இதில் குயின்டன் டி காக், டேவிட் மில்லர் பிட்டர், ட்வயன் ப்ரிட்டோரிஸ் ஆகிய 3 வீரர்கள் ஏற்கனவே தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் அணியில் விளையாடுவதில்லை. ககிஸோ ரபாடா, ஐடன் மார்க்ரம், மேக்ரோ யான்சென், ராசி வேன் டேர் டுஷன், அன்றிச் நோர்ட்ஜெ, லுங்கி நிகிடி ஆகிய 6 வீரர்கள் தான் தாய்நாட்டுக்காக விளையாட வேண்டிய டெஸ்ட் தொடரை புறக்கணித்துவிட்டு ஐபிஎல் தொடரில் விளையாட உள்ளார்கள்.

nortje1

முன்னதாக தென் ஆப்பிரிக்காவுக்குக்காக ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடியதன் காரணமாகவே இன்று ஐபிஎல் தொடரில் விளையாடுகிறோம் என்பதை தென்ஆப்பிரிக்க வீரர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என அதன் கேப்டன் டீன் எல்கர் சமீபத்தில் தெரிவித்திருந்தார். மேலும் இந்த விஷயத்தில் தாய்நாட்டின் மீது அவர்கள் எவ்வளவு விஸ்வாசம் வைத்திருக்கிறார்கள் என்பதை பார்க்கப்போகிறேன் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க : திருமண தேதிக்கு 9 நாளுக்கு முன்னரே திடீரென கல்யாணம் முடித்த மேக்ஸ்வெல் – எதற்கு தெரியுமா?

ஆனால் தற்போது தாய்நாட்டை விட ஐபிஎல் தான் முக்கியம் என தென்னாபிரிக்க நட்சத்திர வீரர்கள் முடிவெடுத்துள்ளது அதன் கேப்டன் டீன் எல்கர் மற்றும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இருப்பினும் தென்ஆப்பிரிக்காவுக்காக மத்திய ஒப்பந்த அடிப்படையில் 13 வருடங்கள் விளையாடினால் கூட கிடைக்காத சம்பளம் ஒரு ஐபிஎல் தொடரில் விளையாடினால் கிடைக்கும் என்பதன் காரணமாகவே அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரியவருகிறது.

Advertisement