திருமண தேதிக்கு 9 நாளுக்கு முன்னரே திடீரென கல்யாணம் முடித்த மேக்ஸ்வெல் – எதற்கு தெரியுமா?

Maxwell
- Advertisement -

ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான கிளன் மேக்ஸ்வெல் கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடி வருகிறார். அதிரடியான பேட்டிங் மற்றும் பகுதிநேர சுழற்பந்து வீச்சு என அசத்தும் இவருக்கு சர்வதேச கிரிக்கெட் மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் நடைபெறும் டி20 லீக் போட்டிகளிலும் பெரிய வரவேற்பு உள்ளது. அந்த வகையில் ஐபிஎல் தொடரிலும் பல ஆண்டுகளாக மேக்ஸ்வெல் விளையாடி வருகிறார்.

கடந்த ஆண்டு பெங்களூரு அணிக்காக ஏலம் எடுக்கப்பட்ட அவர் அந்த தொடரில் தனது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் தற்போது இந்த 15-ஆவது சீசனுக்கான பெங்களூரு அணியில் மூன்று வீரர்களில் ஒருவராக தக்கவைக்கவும் பட்டார். இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடர் தொடங்கும் நாளுக்கு அடுத்த நாள் அதாவது மார்ச் 27-ஆம் தேதி திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு எடுத்திருந்தார்.

- Advertisement -

அதன்படி தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த வினி இராமன் என்பவரை கடந்த பல ஆண்டுகளாக காதலித்து வந்த மேக்ஸ்வெல் இருவீட்டாரின் சம்மதத்துடன் இந்திய முறைப்படி 2020 ஆம் ஆண்டு நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். அதன் பின்னர் அவர்களுக்கு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்ட போது கொரோனா அச்சுறுத்தல், லாக் டவுன் என அடுத்தடுத்து ஏற்பட்ட நெருக்கடியால் திருமணம் தள்ளிப்போனது.

இந்நிலையில் மார்ச் 27-ஆம் தேதி அவர்களுக்கு திருமணம் என்று தமிழில் ஒரு பத்திரிகையும் வெளியாகி இணையத்தில் வைரலாகி இருந்தது. ஆனால் தற்போது மார்ச் 27-ஆம் தேதிக்கு முன்னதாக 9 நாட்களுக்கு முன்னதாகவே மேக்ஸ்வெல் மார்ச் 18-ஆம் தேதி தனது திருமணத்தை நடத்தி முடித்துள்ளார்.

- Advertisement -

இதனை வினி ராமன் தனது சமூக வலைதளம் மூலமாக வெளியிட்டு இந்த தகவலை உறுதி செய்துள்ளார். மேக்ஸ்வெல் இப்படி திடீரென திருமணம் செய்து கொள்வதற்கு காரணமாக கூறப்படுவது யாதெனில் 27-ஆம் தேதி அவர் திருமணம் செய்து கொண்டால் அதன் பிறகு பெங்களூர் அணியில் இணைய தாமதமாகும்.

இதையும் படிங்க : ஐபிஎல் 2022 : டெல்லி அணிக்கு ஏற்பட்டுள்ள மும்முனை பிரச்சனை! சமாளித்து வெற்றி பெறுமா? – விவரம் இதோ

இதன்காரணமாக தற்போது முன்கூட்டியே திருமணத்தை முடித்து விட்டு அவர் இந்த தொடரில் பெங்களூர் அணிக்காக விளையாட ஆர்வமாக இருக்கிறார் என்று கூறப்படுகிறது. ஒரு சில நாட்கள் குடும்பத்துடன் இருக்கும் மேக்ஸ்வெல் விரைவில் பெங்களூர் அணியில் இணைவார் என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement