தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடரை 2 – 1 (3) என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வென்றது. அடுத்ததாக நடைபெறும் 3 போட்டிகள் ஒருநாள் தொடரின் முதல் போட்டி ஆகஸ்ட் 19ஆம் தேதி ஆஸ்திரேலியாவின் கைர்ன்ஸ் துவங்கியது. இந்திய நேரப்படி காலை 10 மணிக்கு துவங்கிய அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.
அதை அடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்காவுக்கு 92 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை கொடுத்த ரியான் ரிக்கல்ட்டன் 33 ரன்னில் டிராவிஸ் ஹெட் சுழலில் அவுட்டானார். மறுபுறம் அசத்திய ஐடன் மார்க்ரம் அரை சதத்தை அடித்து ஆஸ்திரேலியாவுக்கு சவாலைக் கொடுத்தார். அவருடன் எதிர்புறம் கேப்டன் தெம்பா பவுமா ஜோடி சேர்ந்தார்.
தென்னாப்பிரிக்கா அசத்தல்:
மறுபுறம் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய மார்க்ரம் 9 பவுண்டரியுடன் 82 (81) ரன்னில் விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த மேத்யூ பிரீட்ஸ்க் அதிரடியாக விளையாடி அரை சதத்தை அடித்து 57 (56) ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த ஸ்டப்ஸை டக் அவுட்டாக்கிய டிராவிஸ் ஹெட்டுக்கு எதிராக அதற்கடுத்ததாக வந்த தேவால்ட் பிரேவிஸ் முதல் பந்திலேயே சிக்ஸரை பறக்க விட்டார்.
ஆனால் அடுத்த பந்திலேயே அவரை 6 (2) ரன்னில் ஹெட் அவுட்டாக்கினார். இருப்பினும் மறுபுறம் நிதானமாக விளையாடிய கேப்டன் பவுமா அரை சதத்தை அடித்து 5 பவுண்டரியுடன் 65 (74) ரன்களில் ஆட்டமிழந்தார். லோயர் ஆர்டரில் கேசவ் மகாராஜ் 13 (12) ரன்னில் பெவிலியன் திரும்பினார். வியான் முல்தர் அதிரடியாக 31* (26) ரன்கள் குவித்து ஓரளவு நல்ல ஃபினிஷிங் கொடுத்தார்.
ஹெட் மேஜிக் பவுலிங்:
அதனால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் தென்னாப்பிரிக்கா 296/8 ரன்கள் குவித்து அசத்தியது. அதன் வாயிலாக ஆஸ்திரேலியாவின் கைர்ன்ஸ் மைதானத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோர் அடித்த அணி என்ற சாதனையை தென்னாப்பிரிக்கா படைத்துள்ளது. இதற்கு முன் 2022ஆம் ஆண்டு இங்கு நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா 267/5 ரணகள் அடித்ததே முந்தைய சாதனை.
இதையும் படிங்க: விராட் கோலி கொஞ்சம் அவசரப்பட்டு தப்பு பண்ணிட்டாரு.. ஆனாலும் அவர் புகழ் 100 ஆண்டுகள் இருக்கும் – அம்பத்தி ராயுடு கருத்து
ஆஸ்திரேலிய அணிக்கு அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 9 ஓவரில் 57 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். பகுதி நேர பவுலரான அவர் ஜெசல்வுட், ஜாம்பா போன்ற நட்சத்திர பவுலர்களை விட மேஜிக் பவுலிங் செய்தார் என்றே சொல்லலாம். இதைத் தொடர்ந்து 297 என்ற இலக்கை ஆஸ்திரேலிய அணி துரத்தி வருகிறது.



