விராட் கோலி கொஞ்சம் அவசரப்பட்டு தப்பு பண்ணிட்டாரு.. ஆனாலும் அவர் புகழ் 100 ஆண்டுகள் இருக்கும் – அம்பத்தி ராயுடு கருத்து

Rayudu and Virat
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், முன்னாள் கேப்டனுமான விராட் கோலி கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடருக்கு பின்னர் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். அதன் பின்னர் இங்கிலாந்து அணிக்கு எதிராக அண்மையில் நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடருக்கு முன்னதாக டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் வெளியேறுவதாக திடீர் அறிவிப்பை வெளியிட்டு ரசிகர் ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தினார். இருப்பினும் தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் அவர் விளையாட இருக்கிறார்.

விராட் கோலி அவசரப்பட்டு தப்பு பண்ணிட்டாரு : அம்பத்தி ராயுடு

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர் ஆகியோருக்கு அடுத்து மிகப்பெரிய ஜாம்பவான் வீரராக பார்க்கப்படும் விராட் கோலி பல்வேறு இளம் வீரர்களுக்கு முன்னுதாரணமாக இருந்து வரும் வருகிறார். இருப்பினும் 36 வயதிலேயே அவர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றது பலரது மத்தியிலும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரான அம்பத்தி ராயுடு கூறுகையில் : விராட் கோலி அடுத்த 100 ஆண்டுகள் பேசும் அளவிற்கு இந்திய கிரிக்கெட்காக தனது பங்களிப்பை வழங்கியுள்ளார். அதிலும் குறிப்பாக அவருடைய பிட்னஸ் வியக்க வைக்கும் அளவிற்கு உள்ளது. இப்படி ஒரு மாற்றத்தை இந்திய அணிக்குள் கொண்டு வந்த அவர்தான் தற்போதைய நிலையிலும் கூட சிறந்த வீரர்.

அணியில் உள்ள பாதி வீரர்களை காட்டிலும் உண்மையிலே பிட்டான வீரர் விராட் கோலி தான். அவர் இந்திய அணியின் வீரர்களை ஃபிட்னஸில் அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றுள்ளார். அவருடைய பேட்டிங் திறன் மற்றும் பிட்னஸ் ஆகியவை இன்றளவும் மிகச் சிறப்பாக இருந்து வருகிறது. என்னை பொருத்தவரை 100% அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து முன்கூட்டியே ஓய்வு பெற்று தவறு செய்து விட்டார்.

- Advertisement -

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் நிச்சயம் அவர் விளையாடி இருக்க வேண்டும். அதுமட்டும் இன்றி இன்னும் சில ஆண்டுகள் அவரால் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிருக்க முடியும். ஆனாலும் அவர் தனிப்பட்ட வகையில் ஓய்வினை அறிவித்துள்ளார். அது நிச்சயம் அவருக்கு மகிழ்ச்சி அளிக்கும் ஒன்றாகவே இருக்கும். ஆனால் தனிப்பட்ட முறையில் என்னை பொறுத்தவரை அவர் நான் எதிர்பார்த்ததை விட விரைவாகவே டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வை அறிவித்து விட்டார் என அம்பத்தி ராயுடு வருத்தம் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : 2024 டி20 உ.கோ ஃபைனலில் அவங்க தான் பவுண்டரியை நகர்ந்துனாங்க.. சூரியகுமார் கேட்ச் சர்ச்சை.. பற்றி ராயுடு பேட்டி

டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து விராட் கோலி ஓய்வு பெற்றாலும் 2027 ஆம் ஆண்டு ஒருநாள் உலக கோப்பை வரை தொடர்ந்து சர்வதேச போட்டிகளில் விளையாடுவார் என்று தெரிகிறது. அடுத்ததாக விராட் கோலி இந்திய அணிக்காக அக்டோபர் 19-ஆம் தேதி ஆஸ்திரேலியா அணிக்கு துவங்க இருக்கும் ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement