2024 டி20 உ.கோ ஃபைனலில் அவங்க தான் பவுண்டரியை நகர்ந்துனாங்க.. சூரியகுமார் கேட்ச் சர்ச்சை.. பற்றி ராயுடு பேட்டி

Ambati Rayudu
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வென்றதை மறக்க முடியாது. அத்தொடரில் ஆரம்பம் முதலே அசத்திய இந்தியா தோல்வியை சந்திக்காமல் கோப்பையை வென்றது. குறிப்பாக இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை தோற்கடித்த இந்தியா 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் சந்தித்து வந்த தொடர்ச்சியான தோல்விகளை உடைத்து சாம்பியன் பட்டம் வென்றது.

பார்படஸ் மைதானத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் 177 ரன்கள் இலக்கைத் துரத்திய தென்னாப்பிரிக்காவுக்கு கடைசி ஓவரில் 16 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அப்போது ஹர்திக் பாண்டியா வேகத்தில் முதல் பந்திலேயே டேவிட் மில்லர் சிக்ஸர் பறக்க விட்டார். அதை பவுண்டரி எல்லையில் நின்ற சூரியகுமார் யாதவ் அபாரமாக பிடித்த போது பேலன்ஸ் இழப்பதை உணர்ந்தார்.

- Advertisement -

நகர்ந்த பவுண்டரி எல்லை:

அதனால் களத்திற்குள் பந்தை தூக்கி போட்ட அவர் பவுண்டரி எல்லைக்குள் சென்று விட்டு மீண்டும் உள்ளே வந்து கேட்ச் பிடித்தார். கடைசியில் அந்த கேட்ச் 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெறுவதற்கு முக்கிய பங்காற்றியது. அதனால் சூரியகுமார் பிடித்தது கேட்ச் அல்ல உலகக் கோப்பை என்று பலரும் பாராட்டினார்கள். ஆனால் அதை இலங்கை மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த ரசிகர்கள் விமர்சித்தனர்.

குறிப்பாக இந்தியாவை சேர்ந்தவர்கள் வேண்டுமென்றே பவுண்டரி எல்லையை சில அடிகள் பின்னோக்கி நகர்த்தி வைத்திருந்ததாக பாகிஸ்தான் ரசிகர்கள் விமர்சித்தனர். அதைப் பயன்படுத்தி சூரியகுமார் கேட்ச் பிடித்ததாகவும் அவர்கள் விமர்சித்தது அச்சமயத்தில் பெரிய பேசு பொருளானது. இந்நிலையில் அப்போட்டியின் இடைவேளையில் வர்ணையாளர்கள் அமர்ந்து பேசுவதற்காக ஒளிபரப்பு குழுவினர் பவுண்டரி எல்லையை பின்னோக்கி நகர்த்தியதாக அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார்.

- Advertisement -

ராயுடு விளக்கம்:

கடைசியில் அது மீண்டும் பழைய இடத்துக்கு நகர்த்தப்படாமல் அப்படியே விடப்பட்டதாகவும் ராயுடு கூறியுள்ளார். கடவுளின் ஆசிர்வாதத்தால் கடைசியில் அது இந்தியாவின் வெற்றிக்கு உதவியதாக தெரிவிக்கும் ராயுடு இது பற்றி பேசியது பின்வருமாறு. “அங்கே உலக (ஆங்கில) மொழி வர்ணனையாளர்கள் இருந்தார்கள். பொதுவாக அங்கே இடைவெளியின் போது ஒளிபரப்பு குழுவினருக்காக நாற்காலி மற்றும் ஸ்கீரின் போடுவார்கள்”

இதையும் படிங்க: ஆசிய கோப்பையில் துபே அவுட்டாகி ஸ்ரேயாஸ் வருவாரு.. இந்திய அணியின் பிளேயிங் 11 இது தான்.. அஸ்வின் பேட்டி

“அதனாலேயே பவுண்டரி ரோப் கொஞ்சம் பின்புறமாக நகர்த்தப்பட்டது. ஆனால் ஸ்க்ரீன் மற்றும் இருக்கை எடுக்கப்பட்ட பின் அந்த ரோப் அப்படியே விடப்பட்டது. கடைசியில் அதன் காரணமாக நமக்கு பவுண்டரி எல்லை கொஞ்சம் பெரிதாக மாறியது. நாங்கள் அதை மைதானத்தின் மேல் அறையிலிருந்து தெளிவாக பார்த்தோம். அது கடவுளின் திட்டமாகும்” என்று கூறினார்.

Advertisement