73/7 டூ 207 ரன்ஸ்.. தொல்லையாகி ஆஸிக்கு மாஸ் கம்பேக் கொடுத்த ஸ்டார்க்.. 21 வருட சரித்திரம் படைக்குமா தெ.ஆ

Mitchell starc 2
- Advertisement -

ஐசிசி 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதிப்போட்டி ஜூன் 11ஆம் தேதி இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியாவை 212 ரன்களுக்கு சுருட்டியது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 66, வெப்ஸ்டார் 72 ரன்கள் எடுத்த நிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு அதிகபட்சமாக ரபாடா 5 விக்கெட்டுகளை எடுத்தார்.

அடுத்து விளையாடிய தென்னாப்பிரிக்காவை அபாரமாக பௌலிங் செய்த ஆஸ்திரேலியா 138 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கி நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்தது. அதிகபட்சமாக கேப்டன் பவுமா 36, டேவிட் பேடிங்கம் 45 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக கேப்டன் கமின்ஸ் 6 விக்கெட்டுகள் எடுத்து 74 ரன்கள் முன்னிலை பெற முக்கிய காரணமாக அமைந்தார்.

- Advertisement -

தொல்லையான ஸ்டார்க்:

அடுத்து விளையாடிய ஆஸ்திரேலியாவுக்கு லபுஸ்ஷேன் 22, உஸ்மான் கவாஜா 6, கேமரூன் க்ரீன் 0, ஸ்டீவ் ஸ்மித் 13, டிராவிஸ் ஹெட் 9, வெப்ஸ்டர் 9, கேப்டன் கமின்ஸ் 6 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். அதனால் 73/7 என தடுமாறிய ஆஸ்திரேலியாவை விரைவில் தென்னாப்பிரிக்கா சுருட்டும் என்று நம்பப்பட்டது. ஆனால் அப்போது மிட்சேல் ஸ்டார்க் நங்கூரமாக விளையாடி தென்னாப்பிரிக்காவுக்கு சாவலைக் கொடுத்தார்.

அவருடன் சேர்ந்து 8வது விக்கெட்டுக்கு 61 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அலெக்ஸ் கேரி 43 ரன்னில் பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த நேதன் லயன் 2 ரன்னில் அவுட்டானார். ஆனால் இந்தப் பக்கம் தொடர்ந்து நகரமாக விளையாடிய ஸ்டார்க் தென்னாப்பிரிக்காவுக்கு பெரிய தொல்லையாக மாறி அரை சதத்தை அடித்தார்.

- Advertisement -

தென் ஆப்பிரிக்கா வெல்லுமா:

அவருடன் சேர்ந்து விளையாடிய ஹேசல்வுட் 10வது விக்கெட்டுக்கு 59 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 17 ரன்களில் அவுட்டானர். இறுதியில் ஆஸ்திரேலியாவை 207 ரன்களுக்கு போராடி சுருட்டிய தென்னாப்பிரிக்காவுக்கு அதிகபட்சமாக லுங்கி நிங்கி 3, ககிஸோ ரபாடா 4 விக்கெட்டுகளை சாய்த்தனர். மறுபுறம் ஆஸ்திரேலியாவை காப்பாற்றிய ஸ்டார்க் கடைசி வரை அவுட்டாகாமல் 58* (136) ரன்கள் எடுத்து கம்பேக் கொடுக்க வைத்தார்.

இதையும் படிங்க: 3 ஆம் இடத்தில் யாரை விளையாட வைப்பது? கம்பீர் மற்றும் சுப்மன் கில் இடையே வாக்குவாதம் – என்ன நடந்தது?

அதனால் இப்போட்டியில் தென்னாபிரிக்கா வெற்றி பெற 282 என்ற பெரிய இலக்கை ஆஸ்திரேலிய நிர்ணயித்துள்ளது. லார்ட்ஸ் மைதானத்தில் கடைசியாக 2004ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக இங்கிலாந்து 282 ரன்களை வெற்றிகரமாக சேசிங் செய்தது. தற்போது 21 வருடங்கள் அதே இலக்கை சேசிங் செய்தால் மட்டுமே தென்னாபிரிக்கா கோப்பையை வெல்ல முடியும் என்று நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

Advertisement