3 ஆம் இடத்தில் யாரை விளையாட வைப்பது? கம்பீர் மற்றும் சுப்மன் கில் இடையே வாக்குவாதம் – என்ன நடந்தது?

Gambhir and Gill
- Advertisement -

சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியானது ஜூன் 20-ஆம் தேதி லீட்ஸ் மைதானத்தில் துவங்க இருக்கும் வேளையில் தற்போது இந்திய அணி அங்கு தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது.

சுப்மன் கில் மற்றும் கம்பீர் இடையே ஏற்பட்டுள்ள வாக்குவாதம் :

ஏற்கனவே இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் அனுபவ வீரரான விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டதால் அவர்களது இடத்தில் எந்தெந்த வீரர்களுக்கு இடம் கிடைக்கும்? என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் அதிகரித்துள்ளது. அந்த வகையில் ரோகித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து வெளியேறிய வேளையில் அவரது துவக்க வீரருக்கான இடத்தில் கே.எல் ராகுல் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

ஏனெனில் ஏற்கனவே ஐபிஎல் தொடர் முடிந்த கையோடு நேரடியாக இங்கிலாந்து பயணித்த கே.எல் ராகுல் இங்கு வந்த முதல் பயிற்சி போட்டியிலேயே சதம் அடித்து தனது திறனை நிரூபித்து இருந்தார். அதேபோன்று விராட் கோலியின் நான்காவது இடத்தில் சுப்மன் கில் களமிறங்குவார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் மூன்றாம் இடத்தில் களமிறங்கிய அவர் தற்போது நான்காவது இடத்திற்கு மாற்றம் செய்யப்பட இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

அதேவேளையில் மூன்றாவது இடத்தில் யார் இறங்க வேண்டும்? என்கிற முடிவில் தான் தற்போது பயிற்சியாளர் கம்பீர் மற்றும் கேப்டன் சுப்மன் கில் ஆகியோருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளன.

- Advertisement -

அந்த வகையில் கௌதம் கம்பீர் மூன்றாவது இடத்தில் இந்திய ஏ அணியின் கேப்டனான அபிமன்யு ஈஸ்வரனை விளையாட வைக்கலாம் என்று சுப்மன் கில்லிடம் கூறியுள்ளார். ஏனெனில் பயிற்சி போட்டிகளில் சிறப்பாக அடிய அபிமன்யு ஈஸ்வரனுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கம்பீர் விரும்புகிறார். அதேவேளையில் கேப்டன் சுப்மன் கில்லோ தன்னுடன் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய சாய் சுதர்சனை மூன்றாம் இடத்தில் விளையாட வைக்கலாம் என்று பயிற்சியாளரிடம் கூறியுள்ளாராம்.

இதையும் படிங்க : சாய் சுதர்சனுக்கு தான் அந்த வாய்ப்பு கிடைக்கனும்.. அவர் நல்ல டேலன்ட்டான பிளேயர் – ஹர்பஜன் சிங் கருத்து

இதன் காரணமாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படி கம்பீர் அபிமன்யு ஈஸ்வரனையும், சுப்மன் கில் சாய் சுதர்சனை ஆதரிப்பதாலும் இருவரில் யாருக்கு இடம் கிடைக்கும்? என்பது போட்டியின் போது தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement