226/6 டூ 242 ஆல் அவுட்.. அடக்கிய நியூஸிலாந்துக்கு மெகா ட்விஸ்ட் கொடுத்த தெ.ஆ இளம் படை

NZ vs RSA 3
- Advertisement -

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. குறிப்பாக எஸ்ஏ டி20 தொடரில் ரபாடா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் விளையாடியதால் இத்தொடரில் நெய்ல் ப்ராட் தலைமையில் இரண்டாவது தர இளம் தென்னாபிரிக்க அணி விளையாடுகிறது. அதில் முதல் போட்டியில் 6 அறிமுக வீரர்களுடன் களமிறங்கிய தென்னாபிரிக்கா எதிர்பார்த்ததைப் போலவே படுதோல்வியை சந்தித்தது.

அந்த நிலையில் இத்தொடரின் இரண்டாவது போட்டி பிப்ரவரி 13ஆம் தேதி ஹமில்டன் நகரில் துவங்கியது. அதில் ஒய்ட் வாஷ் தோல்வியை தவிர்க்க வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு போர்ட்சூன் கோல்டன் டக் அவுட்டானார்.

- Advertisement -

ட்விஸ்ட் கொடுத்த தென்னாப்பிரிக்கா:
அதே போல கேப்டன் நெய்ல் பிராண்ட் 25, வேன் டோண்டர் 32, ஜூபைர் ஹம்சா 20, டேவிட் பேடிங்கம் 39 என முக்கிய வீரர்கள் போராடி குறைந்த ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 150/6 என தடுமாறிய அந்த அணி 200 ரன்கள் தாண்டாத என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 7வது விக்கெட்டுக்கு 77 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ருவன் டீ ஸ்வார்ட் அரை சதமடித்து 64 ரன்களும் வோன் பெர்க் 38 ரன்களும் எடுத்தனர்.

அதனால் சரிவிலிருந்து மீண்ட தென்னாப்பிரிக்கா 226/6 என்ற நல்ல நிலையில் இருந்தது. இருப்பினும் அவர்களை மீண்டும் அவுட்டாக்கிய நியூஸிலாந்து அதற்கடுத்ததாக வந்த வீரர்களை ஒற்றை இலக்க ரன்களில் காலி செய்து தென்னாபிரிக்காவை 242 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தனர். நியூசிலாந்துக்கு அதிகபட்சமாக வில்லியம் ஓரெளர்கே 4, ரச்சின் ரவீந்திரா 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.

- Advertisement -

அதைத்தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்துக்கு டேவோன் கான்வே டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுக்க டாம் லாதம் 40, கேன் வில்லியம்சன் 43 ரன்களில் டேன் பீய்ட் சுழலில் ஆட்டமிழந்தனர். அதே போல அடுத்ததாக வந்த ரச்சின் ரவீந்தரா போராடி 29 ரன்களிலும் வில் எங் 36 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள். அதை பயன்படுத்திய தென்னாப்பிரிக்கா பவுலர்கள் லோயர் மிடில் ஆர்டரில் டாம் ப்ளெண்டல் 4, கிளன் பிலிப்ஸ் 4, மாட் ஹென்றி 10 ரன்களில் அவுட்டாக்கி திருப்புமுனையை உண்டாக்கினர்.

இதையும் படிங்க: இங்கிலாந்துக்கு எதிரான நாளைய 3 ஆவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச பட்டியல் இதோ

கடைசியில் நெய்ல் வாக்னர் 33 ரன்கள் எடுத்தும் நியூசிலாந்தை 211 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கி அசத்திய தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக டேன் பீய்ட் 5, டேன் பாட்டர்சன் 3 விக்கெட்களை எடுத்தனர். அந்த வகையில் தங்களை முதல் இன்னிங்ஸில் 242 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கிய நியூசிலாந்தை 211 ரன்களுக்கு சுருட்டிய இளம் வீரர்களை கொண்ட தென்னாப்பிரிக்கா இப்போட்டியில் புதிய ட்விஸ்ட் கொடுத்துள்ளது என்றே சொல்லலாம். தற்போதைய நிலையில் இரண்டாவது நாள் முடிவில் நியூசிலாந்தை விட 31 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள தென்னாப்பிரிக்கா இப்போட்டியில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

Advertisement