தொடரின் இடையே வீரர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டால் என்ன நடக்கும்? – தெ.ஆ வாரியம் விளக்கம்

IND
- Advertisement -

கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்னும் சில தினங்களில் இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது துவங்க உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியானது 26-ஆம் தேதி துவங்க உள்ள நிலையில் தற்போது தென் ஆப்பிரிக்க நாட்டில் ஓமைக்கிரான் வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதன் காரணமாக இந்த தொடரானது திட்டமிட்டபடி நடைபெறுமா? என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

IND

- Advertisement -

ஏனெனில் ஆரம்பத்தில் குறைவான எண்ணிக்கையில் வைரஸ் பரவ ஆரம்பித்த வேளையில் தற்போது நாளொன்றுக்கு 15 ஆயிரத்துக்கும் மேல் தொற்று பரவி வருவதாக அங்குள்ள செய்திகள் தெரிவிக்கின்றன. இப்படி வைரஸ் தொற்று தீவிரம் அடையும் பட்சத்தில் இந்த இந்தியா-தென்னாப்பிரிக்கா தொடரானது திட்டமிட்டபடி நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் அதற்கு பதிலளித்துள்ள அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகம் : இந்த தொடரானது என்ன நடந்தாலும் திட்டமிட்டபடி நடக்கும் என்று உறுதி அளித்துள்ளது .மேலும் தங்களது மருத்துவ குழுவை பலப்படுத்தி உள்ள அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகம் நாள் தோறும் இரு அணி வீரர்களுக்கும் பரிசோதனை நடத்தவும் உத்தரவிட்டுள்ளது.

Practice

அதுமட்டுமின்றி இந்த தொடரின் இடையே ஏதாவது ஒரு வீரர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படும் பட்சத்தில் அவர் மட்டும் தனிமைப்படுத்தப் படுவார் என்றும் எக்காரணம் கொண்டும் இந்த தொடரானது நிறுத்தி வைக்கப்படாது என மருத்துவ குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்தடுத்து வீரர்கள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் பட்சத்தில் அவர்கள் மட்டுமே தனிமைப் படுத்தப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : டி20யை தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட்டிலும் மாபெரும் சறுக்கலை சந்தித்த விராட் கோலி – வெளியான தரவரிசை

குறிப்பிட்ட பயோ-பபுள் விதிமுறைப்படி இந்தப் தொடரானது தொடர்ந்து நடைபெறும் என்று தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் நிர்வாகம் உறுதியளித்துள்ளது. மேலும் வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த தொடரானது பார்வையாளர்கள் இன்றி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement