டி20யை தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட்டிலும் மாபெரும் சறுக்கலை சந்தித்த விராட் கோலி – வெளியான தரவரிசை

Kohli-3
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி அவ்வப்போது நடைபெற்று முடியும் தொடர்களுக்கு பின்னர் தரவரிசைப் பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது ஆஷஸ் தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த வேளையில் டெஸ்ட் கிரிக்கெட்டின் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் எப்பொழுதுமே டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் மூன்று இடங்களுக்குள் ஆதிக்கத்தை செலுத்தி வந்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மிகப்பெரிய சறுக்கலை சந்தித்துள்ளார்.

இந்த புதிய டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த முன்னணி வீரரான மார்னஸ் லாபுஷேன் 912 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் 897 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். அவரைத் தொடர்ந்து மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோர் பிடித்துள்ளனர்.

- Advertisement -

இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தை இந்திய அணியின் துவக்கவீரர் ரோகித்சர்மா பிடித்துள்ளார். இதில் வருத்தமான விடயம் யாதெனில் ஏற்கனவே டி20 கிரிக்கெட்டில் டாப் 10-ல் இருந்து வெளியேற்றப்பட்ட கோலி தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டிலும் முதல் ஐந்து இடங்களில் தனது இடத்தை இழந்துள்ளார்.

தற்போது வெளியான புதிய தரவரிசைப் பட்டியலில் டேவிட் வார்னருக்கு பின்னால் 7-வது இடத்தை விராட் கோலி பிடித்துள்ளார். அதுமட்டுமின்றி எப்போதுமே 900 புள்ளிகளுக்கு மேல் வைத்திருக்கும் விராட்கோலி இம்முறை 756 புள்ளிகள் மட்டுமே வைத்துள்ளார். கடைசியாக நடைபெற்ற 21 ஒரு டெஸ்ட் இன்னிங்ஸ்களில் அவர் சதம் அடிக்காமல் விளையாடி வருவதால் இந்த சறுக்கலை சந்தித்துள்ளார் என்று தெரிகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : இரண்டு நாட்கள் நடைபெறயிருக்கும் ஐ.பி.எல் மெகா ஆக்சன். இதுதான் தேதி. இதுதான் இடம் – பி.சி.சி.ஐ தகவல்

டெஸ்ட் கிரிக்கெட் பந்து வீச்சாளர்களின் பட்டியலில் பேட் கம்மின்ஸ் முதலிடத்திலும், ரவிச்சந்திரன் அஷ்வின் இரண்டாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று ஆல்ரவுண்டர் வரிசையிலும் அஷ்வின் இரண்டாவது இடத்திலும், ஜடேஜா மூன்றாவது இடத்திலும் நீடித்து வருகின்றனர்.

Advertisement