194 ரன்ஸ் சேசிங்கில் 76/5 என சரிந்தும் பயத்தை காட்டிய அமெரிக்கா.. ஒரே ஓவரில் வெற்றியை மாற்றிய ரபாடா

RSA vs USA
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையின் முதல் சூப்பர் 8 போட்டி ஜூன் 19ஆம் தேதி ஆன்ட்டிகுவா நகரில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு நடைபெற்றது. அதில் குரூப் 2 பிரிவில் இடம் வகிக்கும் தென்னாப்பிரிக்கா மற்றும் அமெரிக்கா கிரிக்கெட் அணிகள் மோதின. அப்போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்காவுக்கு ரீசா ஹென்றிக்ஸ் 11 (11) ரன்னில் அவுட்டானார்.

ஆனால் மற்றொரு துவக்க வீரர் குவிண்டன் டீ காக் அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். அவருடன் அடுத்ததாக ஜோடி சேர்ந்த கேப்டன் ஐடன் மார்க்கம் தனது பங்கிற்கு அமெரிக்க பவுலர்களை வெளுத்து வாங்கினார். அந்த வகையில் 13 ஓவர்கள் வரை விளையாடிய இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 110 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து தென்னாப்பிரிக்காவை வலுப்படுத்தியது.

- Advertisement -

ரபாடா மேஜிக்:
அப்போது டீ காக் 7 பவுண்டரி 5 சிக்சருடன் 74 (40) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்ததாக வந்த டேவிட் மில்லர் கோல்டன் டக் அவுட்டான நிலையில் அடுத்த சில ஓவரில் மறுபுறம் அசத்திய மார்க்கம் 46 (32) ரன்களில் அவுட்டானார். இறுதியில் ஹென்ரிச் கிளாசின் 36* (22) ட்ரிஷ்டன் ஸ்டப்ஸ் 20* (16) ரன்கள் எடுத்து நல்ல ஃபினிஷிங் கொடுத்தனர்.

அதனால் 20 ஓவரில் தென் ஆப்பிரிக்கா 194/4 ரன்கள் எடுத்தது. அமெரிக்கா சார்பில் அதிகபட்சமாக ஹர்மீட் சிங் மற்றும் நேத்ராவல்கர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத்தொடர்ந்து 195 ரன்களை துரத்திய அமெரிக்காவுக்கு துவக்க வீரர் ஆண்ட்ரீஸ் கவுஸ் அதிரடியாக விளையாடினார். அவருடன் எதிர்ப்புறம் ஸ்டீபன் டைலர் அதிரடியாக விளையாட முயற்சித்து 24 (14) ரன்களில் அவுட்டாகி சென்றார்.

- Advertisement -

ஆனால் அடுத்ததாக வந்த நிதிஷ் குமார் 8 ரன்னில் அவுட்டான நிலையில் அதற்கடுத்ததாக வந்த கேப்டன் ஆரோன் ஜோன்ஸ் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து தென்னாப்பிரிக்காவுக்கு சவாலை கொடுத்த கவுஸ் அரை சதமடித்து வெற்றிக்கு போராடினார். ஆனால் இந்தப் பக்கம் கோரி ஆண்டர்சன் 12, ஜஹாங்கீர் 3 ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினர்.

அதனால் 76/5 என சரிந்த அமெரிக்கா மோசமாக தோற்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது களமிறங்கிய ஹர்மீத் சிங் அதிரடியாக 2 பவுண்டரி 3 சிக்சர்களை பறக்க விட்டு தென்னாபிரிக்காவுக்கு பயத்தை காட்டினார். குறிப்பாக கௌஸ் உடன் சேர்ந்து 6வது விக்கெட்டுக்கு 91 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அவர் அமெரிக்காவை வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்தார்.

- Advertisement -

ஆனால் முக்கியமான 19வது ஓவரில் அவரை 38 (22) ரன்களில் அவுட்டாக்கிய ரபாடா வெறும் 2 ரன்கள் மட்டுமே கொடுத்து போட்டியை தலைகீழாக மாற்றினார். ஏனெனில் அடுத்து வந்த டெயில் எண்டர் ஜஸ்தீப் சிங் 2* (6) ரன்கள் மட்டுமே எடுத்தது அழுத்தத்தை உண்டாக்கினார். அதனால் எதிர்ப்புறம் ஆண்ட்ரீஸ் கவுஸ் 5 பவுண்டரி 5 சிக்சருடன் 80* (47) ரன்கள் அடித்தும் 20 ஓவரில் அமெரிக்காவை 176/6 ரன்கள் கட்டுப்படுத்திய தென்னாப்பிரிக்கா 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.

இதையும் படிங்க: ஆப்கானிஸ்தான் சுழல் வலையில் விழுந்துடாதீங்க.. ரஷித் கானை அடிக்க இந்திய பேட்ஸ்மேன்களுக்கு.. ராயுடு ஆலோசனை

தென்னாபிரிக்காவுக்கு அதிகபட்சமாக ரபாடா 4 ஓவரில் 18 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகள் எடுத்து வெற்றியை பெற்றுக் கொடுத்தார். மறுபுறம் டி20 உலகக் கோப்பையில் தோல்வியை சந்தித்த போட்டியில் அதிகபட்ச ஸ்கோர் (80*) அடித்த துவக்க வீரர் என்ற பரிதாப சாதனையை கௌஸ் படைத்தார். இதற்கு முன் 2022 டி20 உலகக் கோப்பையில் இலங்கைக்கு எதிராக மேக்ஸ் ஓ’தாவுத் 71* ரன்கள் எடுத்தும் நெதர்லாந்து தோற்றத்தை முந்தைய சாதனையாகும்

Advertisement