த்ரில் வெற்றியில் உலக சாதனை.. 23 வருடம் கழித்து பாகிஸ்தானை வீழ்த்திய தெ.ஆ.. இந்தியாவை மிஞ்சி மிரட்டல்

PAK vs RSA 2
Advertisement

இந்தியாவில் பரபரப்பாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 27ஆம் தேதி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தானை வெறும் 1 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த தென்னாப்பிரிக்கா திரில் வெற்றி பெற்றது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் சுமாராக விளையாடி 271 ரன்கள் மட்டுமே வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

பாகிஸ்தானுக்கு அதிகபட்சமாக பாபர் அசாம் 50, சவுத் ஷாக்கில் 52 ரன்கள் எடுக்க தென்னாபிரிக்கா சார்பில் தப்ரிஸ் சம்சி 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து சேசிங்கை துவக்கிய தென்னாப்பிரிக்காவுக்கு ஐடன் மார்க்கம் 91 ரன்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்தார். இருப்பினும் இதர வீரர்கள் கைகொடுக்க தவறியதால் பரபரப்பு ஏற்பட்ட அப்போட்டியில் கடைசி நேரத்தில் கேசவ் மகாராஜ் மற்றும் சம்சி ஆகிய டெயில் எண்டர்கள் தென்னாப்பிரிக்காவை போராடி வெற்றி பெற வைத்தனர்.

- Advertisement -

அசத்தும் தென்னாபிரிக்கா:
அதன் காரணமாக பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக சாகின் அப்ரிடி 4 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. சொல்லப்போனால் இதன் வாயிலாக வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு உலகக் கோப்பையில் தொடர்ந்து 4 தோல்வியை பதிவு செய்து மோசமான சாதனை படைத்துள்ள பாகிஸ்தான் லீக் சுற்றுடன் வெளியேறுவது 90% உறுதியாகியுள்ளது.

மறுபுறம் போராடி 1 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற தென்னாப்பிரிக்கா உலகக்கோப்பை வரலாற்றில் 2 முறை 1 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற அணி என்ற தனித்துவமான உலக சாதனையையும் படைத்துள்ளது. இதற்கு முன் கடந்த 2007 உலகக் கோப்பையில் கயானா நகரில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான போட்டியிலும் இதே போல தென்னாப்பிரிக்கா 1 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பதிவு செய்திருந்தது.

- Advertisement -

இருப்பினும் தென்னாப்பிரிக்காவை தவிர்த்து இந்தியா உட்பட உலகின் வேறு எந்த அணியும் உலக கோப்பையில் 2 முறை 1 விக்கெட் வித்தியாசத்தில் வென்றதில்லை. இதை விட 50 ஓவர், 20 ஓவர் உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய அனைத்து வகையான ஐசிசி தொடர்களிலும் சேர்த்து 23 வருடங்கள் கழித்து முதல் முறையாக பாகிஸ்தானை ஒரு போட்டியில் தோற்கடித்து தென்னாப்பிரிக்கா அசத்தியுள்ளது.

இதையும் படிங்க: அவங்க தோத்தது கஷ்டமா தான் இருக்கு.. அடக்க முடியாத சிரிப்புடன் சோகத்தை வெளிப்படுத்திய கமின்ஸ்

அதாவது 2009, 2010, 2012 ஆகிய டி20 உலக கோப்பைகளில் தென்னாபிரிக்காவை தொடர்ந்து தோற்கடித்த பாகிஸ்தான் 2015 மற்றும் 2019 உலக கோப்பையிலும் வீழ்த்தியது. அத்துடன் 2022 டி20 உலக கோப்பையிலும் தென்னாபிரிக்காவை தோற்கடித்த பாகிஸ்தான் கடந்த 23 வருடங்களில் சந்தித்த 6 போட்டிகளிலும் தொடர்ச்சியாக வென்று வந்தது. ஆனால் அதை இப்போட்டியில் நிறுத்தியுள்ள தென்னாப்பிரிக்கா 5வது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் ரன் ரேட் அடிப்படையில் இந்தியாவையே மிஞ்சி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

Advertisement