82 ரன்ஸ்.. மில்லர் உலக சாதனையால் தெ.ஆ வெற்றி.. ரிஸ்வான் தடவல்.. 5க்கு 5.. ஜிம்பாப்வே தாண்டி ஓட முடியாத பாகிஸ்தான்

- Advertisement -

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டி டர்பன் நகரில் டிசம்பர் 10ஆம் தேதி நடைபெற்றது. அப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதை அடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்காவுக்கு ரீஸா ஹென்றிக்ஸ் 8, வேன் டெர் டுஷன் 0, பிரட்ஸ்கே 8 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்கள்.

அதனால் 28-3 என ஆரம்பத்திலேயே தடுமாறிய தென் ஆப்பிரிக்க அணிக்கு மிடில் ஆர்டரில் களமிறங்கிய நம்பிக்கை நட்சத்திரம் டேவிட் மில்லர் அதிரடியாக விளையாடினார். அவருக்கு எதிர்ப்புறம் கை கொடுக்க முயற்சித்த கேப்டன் ஹென்றிச் க்ளாஸென் 12, பெராரியா 7 ரன்களில் அவுட்டாகி சென்றார்கள். ஆனால் அடுத்து வந்த ஜார்ஜ் லின்டே 3 பவுண்டரி 4 சிக்சருடன் 48 (24) ரன்கள் விளாசி அவுட்டானார்.

- Advertisement -

மில்லர் மிரட்டல்:

மறுபுறம் பாகிஸ்தான் பவுலர்களை தொடர்ந்து வெளுத்து வாங்கிய டேவிட் மில்லர் 4 பவுண்டர் 8 சிக்ஸருடன் அரை சதத்தை அடித்து 82 (40) ரன்களை 205 ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசினார். அவருடைய அதிரடியான ஆட்டத்தால் 20 ஓவரில் தென்னாப்பிரிக்கா 183-9 ரன்கள் குவித்தது. பாகிஸ்தானுக்கு அதிகபட்சமாக அப்ரார் அகமது, சாகின் அப்ரிடி தலா 3 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.

பின்னர் 173 ரன்களை துரத்திய பாகிஸ்தானுக்கு பாபர் அசாம் ஆரம்பத்திலேயே டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். மற்றொரு துவக்க வீரர் மற்றும் கேப்டன் முகமது ரிஸ்வான் அடித்து நொறுக்க வேண்டிய பவர்பிளேவில் 19 பந்துகளில் 15 ரன்கள் மட்டும் எடுத்து தடவலாக பேட்டிங் செய்தார். அதனால் எதிர்ப்புறம் அதிரடியாக விளையாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட சாய்ம் ஆயுப் 31 (15) ரன்களில் அவுட்டானார்.

- Advertisement -

பாகிஸ்தான் பரிதாபம்:

மிடில் ஆர்டரில் உஸ்மான் கான் 9, தாஹிர் 18, ஷாஹீன் அப்ரிடி 9, இர்பான் கான் 1 ரன்களில் அவுட்டாகி பெரிய ஏமாற்றத்தை கொடுத்தார்கள். அதனால் மறுபுறம் கடைசி வரை தடவலாகவே விளையாடிய முகமது ரிஸ்வான் 74 (62) ரன்களை 119.35 ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்து ஃபினிஷிங் செய்யாமல் பெவிலியன் திரும்பினார். இறுதியில் பாகிஸ்தானை 20 ஓவரில் 172-8 ரன்களுக்கு கட்டுப்படுத்திய தென்னாப்பிரிக்கா 11 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 1 – 0* என்ற கணக்கில் இத்தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

இதையும் படிங்க: முதல் பாகிஸ்தான் வீரராக மாபெரும் வரலாற்று சாதனையை நிகழ்த்திய ஷாஹீன் அப்ரிடி – விவரம் இதோ

தென்னாபிரிக்காவுக்கு அதிகபட்சமாக ஜார்ஜ் லிண்டே 4 விக்கெட்டுகளை எடுத்தார். இப்போட்டியில் அடித்த 82 ரன்களையும் சேர்த்து சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 2500 ரன்கள் குவித்த முதல் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் என்ற உலக சாதனையை டேவிட் மில்லர் படைத்துள்ளார். 2வது இடத்தில் இங்கிலாந்தின் இயன் மோர்கன் (2425 ரன்கள்) உள்ளார். சென்ற வாரம் ஜிம்பாப்வேவை 2 – 1 (3) என்ற கணக்கில் பாகிஸ்தான் தோற்கடித்தது. அந்த 2 வெற்றிகளை தவிர்த்து கடைசியாக விளையாடிய 7 டி20 போட்டிகளில் பாகிஸ்தான் 5 தோல்விகளை பதிவு செய்து ஜிம்பாப்வேவைவை தாண்டி வெற்றி பெற முடியாமல் தவிக்கிறது.

Advertisement