123 ரன்ஸ்.. பாகிஸ்தானை சொந்த மண்ணில் வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்த டீ காக்.. தெ.ஆ பதிலடி

Quinton De Kock
- Advertisement -

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்கா முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2 – 1 (3) என்ற கணக்கில் தோற்றது. அடுத்து நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் வென்றது. 2வது போட்டி நவம்பர் 6ஆம் தேதி பாகிஸ்தானில் உள்ள ஃபைஸ்லாபாத்தில் நடைபெற்றது.

அந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் 50 ஓவரில் போராடி 269/9 ரன்கள் குவித்தது. ஏனெனில் அந்த அணிக்கு ஃபகார் ஜமான் 0, பாபர் அசாம் 11, முகமது ரிஸ்வான் 4 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். அதனால் 23/3 என திணறிய பாகிஸ்தானுக்கு அதிகபட்சமாக சல்மான் ஆகா 69, முஹம்மது நவாஸ் 59, சாய்ம் ஆயுப் 53 ரன்கள் அடித்து ஓரளவு காப்பாற்றினர்.

- Advertisement -

டீ காக் அபாரம்:

தென்னாப்பிரிக்கா அணிக்கு அதிகபட்சமாக நன்ரே பர்கர் 4, நக்ப்பயோம்சி பீட்டர் 3, கோர்பின் போஸ்க் 2 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்கள். அடுத்ததாக 270 ரன்களை சேசிங் செய்த தென்னாப்பிரிக்காவுக்கு நட்சத்திர வீரர் குவிண்டன் டீ காக் நங்கூரமாகவும் அதிரடியாகவும் விளையாடினார். சில வருடங்களுக்கு முன்பு திடீரென ஓய்வை அறிவித்த அவர் அந்த முடிவை திரும்ப பெற்று மீண்டும் விளையாடத் துவங்கியுள்ளார்.

அந்த வாய்ப்பில் இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய அவர் அரை சதத்தை அடித்தார். அவருடன் இணைந்து 81 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த டிரே பிரிட்டோரியஸ் 46 (40) ரன்கள் குவித்து அவுட்டானார். அடுத்து வந்த டோனி டீ ஜோர்சி பாகிஸ்தான் பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்டு 9 பவுண்டரி 3 சிக்சருடன் அரை சதத்தை அடித்து 76 (63) ரன்கள் குவித்து விக்கெட்டை இழந்தார்.

- Advertisement -

வரலாற்று சாதனை:

இந்தப் பக்கம் தொடர்ந்து அசத்தலாக விளையாடிய டீ காக் தன்னுடைய 22வது ஒருநாள் சதத்தை அடித்து 123* (119) ரன்கள் குவித்து அசத்தினார். அவருடன் கேப்டன் மேத்யூ பிரீட்ஸ்கே 17* ரன்கள் எடுத்ததால் 40.1 ஓவரிலேயே 270/2 ரன்களை குவித்த தென்னாப்பிரிக்கா 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. அதனால் 1 – 1* (3) என்ற கணக்கில் இத்தொடரை சமன் செய்த தென்னாப்பிரிக்க அணி பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தது.

இதையும் படிங்க: பாகிஸ்தான் பற்றி இந்திய கேப்டன் சூரியகுமார் சொன்னது உண்மை தான்.. ரெகார்ட்டை பாருங்க.. அசாம் கான்

இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய டீ காக் ஆட்டநாயகன் விருதை வென்றார். அத்துடன் ஒருநாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த தெனாப்பிரிக்க வீரர் என்ற வரலாற்று சாதனையும் அவர் படைத்தார். அந்தப் பட்டியல்:
1. குவிண்டன் டீ காக்: 123*, ஃபைசாலாபாத் (2025)
2. ஹச் டிப்பெனெர்: 110*, லாகூர் (2003)
3. ஏபி டீ வில்லியர்ஸ்: 103*, லாகூர் (2007)

Advertisement