28/2 டூ 210/3.. இளம் வீரருக்கு நேர்ந்த பரிதாபம்.. ஹென்றிக்ஸ் அபார சாதனை.. பாகிஸ்தானின் 200 சாதனையை உடைத்த தெ.ஆ

- Advertisement -

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அங்கு 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா 11 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இரண்டாவது போட்டி டிசம்பர் 13ஆம் தேதி செஞ்சூரியன் நகரில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதை அடுத்து களமிறங்கிய பாகிஸ்தானுக்கு மீண்டும் தடவலாக விளையாடிய கேப்டன் முகமது ரிஸ்வான் 11 (13) ரன்களில் அவுட்டானார். ஆனால் மற்றொரு துவக்க வீரர் சாய்ம் ஆயுப் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். அவருடன் சேர்ந்து அதிரடியாக விளையாட முயற்சித்த பாபர் அசாம் 31 (20) ரன்களில் அவுட்டாகி சென்றார். அடுத்ததாக வந்த உஸ்மான் கான் 3, தாயப் தாஹிர் 6 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள்.

- Advertisement -

98 ரன்களில் பரிதாபம்:

இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து அதிரடி காட்டிய ஆயுப் அரை சதத்தை அடித்து சதத்தை நெருங்கினார். குறிப்பாக 18.3வது ஓவரில் அவர் 98 ரன்கள் எடுத்ததால் சதத்தை அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்புறம் அதிரடியாக விளையாடிய இர்பான் கான் அவருக்கு ஸ்ட்ரைக்கை கொடுக்காமல் 30 (16) ரன்களில் அவுட்டானார். அடுத்ததாக வந்த அப்பாஸ் அஃப்ரடியும் அவருக்கு வாய்ப்பை கொடுக்காமல் 11* (4) ரன்கள் குவித்து இன்னிங்ஸை முடித்தார்.

அதன் காரணமாக சதமடிக்கும் பொன்னான வாய்ப்பை நழுவ விட்ட ஆயுப் 11 பவுண்டரி 5 சிக்ஸருடன் 98* (57) ரன்களுடன் பரிதாபமாக வெளியேறினார். தென்னாப்பிரிக்காவுக்கு அதிகபட்சமாக டயன் காலியம், ஓட்னல் பார்ட்மேன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். பின்னர் 207 ரன்களை துரத்திய தென்னாபிரிக்காவுக்கு ரியான் ரிக்கள்டன் 2, மேத்தியூ பிரட்ஸ்கே 12 ரன்களில் அவுட்டானார்கள்.

- Advertisement -

ஹென்றிக்ஸ் அபாரம்:

அதனால் 28-2 என ஆரம்பத்திலேயே தடுமாறிய அந்த அணிக்கு மற்றொரு துவக்க வீரர் ரீஷா ஹென்றிக்ஸ் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார். அவருடன் அடுத்ததாக ஜோடி சேர்ந்த ராசி வேன் டெர் டுஷன் ஆகியோர் தம்முடைய பங்கிற்கு பாகிஸ்தான் பவுலர்களை அடித்து நொறுக்கினார். அந்த வகையில் 3வது விக்கெட்டுக்கு 163 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அந்த ஜோடியில் ஹென்றிக்ஸ் சதமடித்து 7 பவுண்டரி 10 சிக்ஸருடன் 117 (63) ரன்கள் விளாசி அவுட்டானார்.

அதன் வாயிலாக டி20 கிரிக்கெட்டில் 2வது அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த தென்னாப்பிரிக்க வீரர் என்ற ரிச்சர்ட் லெவியின் (2012இல் நியூஸிலாந்துக்கு எதிராக 117*) சாதனையை அவர் சமன் செய்தார். இறுதியில் டுஷன் 66* (38) ரன்கள் எடுத்ததால் 19.3 ஓவரிலேயே 210-3 ரன்கள் எடுத்த தென்னாபிரிக்கா 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அதனால் 2 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரை ஆரம்பத்திலேயே தென்னாப்பிரிக்கா வென்றது.

இதையும் படிங்க: சச்சினுக்கு பின் ஆஸியில் விராட் கோலி சாதனை.. காபா டெஸ்டில் இந்திய அணியில் 2 மாற்றம் செய்த ரோஹித் சர்மா

மேலும் டி20 கிரிக்கெட்டில் இதற்கு முன் 200+ ரன்கள் அடித்த 8 போட்டிகளில் பாகிஸ்தான் தொடர்ச்சியாக வென்று வந்தது. பாகிஸ்தானின் அந்த வெற்றி நடையை இன்று தென்னாப்பிரிக்கா தூளாக்கிள்ளது. பாகிஸ்தானுக்கு அதிகபட்சமாக ஜஹாதத் கான் 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.

Advertisement