113 ரன்ஸ்.. தோற்பதற்கு நடந்த போராட்டம்.. வங்கதேசத்தை வீழ்த்திய தெ.ஆ.. இந்தியாவை முந்தி புதிய உலக சாதனை வெற்றி

RSA vs BAN
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் ஜூன் 10ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 21வது லீக் போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் தென்னாபிரிக்கா மற்றும் வங்கதேசம் கிரிக்கெட் அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற தென்னாபிரிக்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு ரீசா ஹென்றிக்ஸ் முதல் ஓவரிலேயே கோல்டன் டக் அவுட்டானார்.

மறுபுறம் அதிரடியாக விளையாடிய குவிண்டன் டீ காக் 18 (11) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அடுத்த ஓவரிலேயே மறுபுறம் கேப்டன் ஐடன் மார்க்ரம் 4 (8) ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் அதற்கடுத்த ஓவரில் ட்ரிஷன் ஸ்டப்ஸ் டக் அவுட்டாகி மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தார்.

- Advertisement -

சொதப்பிய வங்கதேசம்:
அதனால் 23/4 என ஆரம்பத்திலேயே தடுமாறிய தென்னாப்பிரிக்காவுக்கு மிடில் ஆர்டரில் டேவிட் மில்லர் மற்றும் ஹென்றிச் க்ளாஸென் ஆகியோர் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினர். ஆனாலும் இந்த ஜோடி அதிரடி காட்ட முடியாத அளவுக்கு வங்கதேசம் மிகவும் துல்லியமாக பந்து வீசியது. அதனால் 5வது விக்கெட்டுக்கு 79 ரன்கள் பார்னர்ஷிப் அமைத்து தென்னாப்பிரிக்காவை காப்பாற்றிய இந்த ஜோடி கடைசி வரை அதிரடியாக விளையாடவில்லை.

அதில் க்ளாஸென் 46 (44) ரன்களில் அவுட்டான நிலையில் டேவிட் மில்லர் 29 38) ரன்களில் அவுட்டாகி ஃபினிஷிங் செய்ய தவறினார். கடைசியில் மார்க்கோ யான்சன் 5*, கேசவ் மகாராஜ் 4* ரன்கள் எடுத்தும் 20 ஓவரில் தென்னாபிரிக்கா வெறும் 113/6 ரன்கள் மட்டுமே எடுத்தது. வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக ஹசன் ஷாகிப் 3, தஸ்கின் அஹ்மத் 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அதைத்தொடர்ந்து 114 ரன்களை துரத்திய வங்கதேசத்துக்கு தன்ஜித் ஹசன் 9 ரன்னில் அவுட்டானார்.

- Advertisement -

அடுத்ததாக வந்து தடுமாறிய லிட்டன் தாஸ் 9 (13) ரன்களில் அவுட்டாகி சென்றார். அதைத்தொடர்ந்து வந்த ஷாகிப் அல் ஹசன் 3 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் மறுபுறம் திணறலாக விளையாடிய மற்றொரு துவக்க வீரர் மற்றும் கேப்டன் சாந்தோ 14 (23) ரன்களில் பெவிலியன் திரும்பினார். அதனால் 50/4 என தடுமாறிய வங்கதேசத்தின் வெற்றி கேள்விக்குறியானது.

ஆனால் அப்போது மஹ்மதுல்லாவுடன் சேர்ந்து அதிரடியாக விளையாடிய தவ்ஹீத் ஹ்ரிடாய் 2 பவுண்டரி 2 சிக்சருடன் முக்கியமான 37 (34) ரன்கள் எடுத்து அவுட்டானார். அதனால் வெற்றியை நெருங்கிய வங்கதேசத்துக்கு கேசவ் மகாராஜ் வீசிய கடைசி ஓவரில் வெறும் 11 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால் அந்த ஓவரில் ஜாகிர் அலியை 8 ரன்களில் காலி செய்த மகாராஜ் எதிர்ப்புறம் செட்டிலாகியிருந்த முகமதுல்லாவையும் 20 ரன்களில் அவுட்டாகி 6 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.

- Advertisement -

அதனால் 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்காவுக்கு கேசவ் மகாராஜ் 3, ரபாடா 2, அன்றிச் நோர்ட்ஜே 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். அந்த வகையில் தோற்பதற்கு போட்டியிட்ட இவ்விரு அணிகளில் கடைசி ஓவரில் சொதப்பிய வங்கதேசத்தை தோற்கடித்து தென்னாப்பிரிக்கா வெற்றி கண்டது.

இதையும் படிங்க: ரோஹித் க்ளாஸ் காமிச்சுட்டாரு.. இதே மற்ற கேப்டனா இருந்துருந்தா இந்த தப்பை பண்ணிருப்பாஙக.. உத்தப்பா வியப்பு

மேலும் இதன் வாயிலாக டி20 உலகக் கோப்பை வரலாற்றில் குறைந்தபட்ச இலக்கை (113) கட்டுப்படுத்திய அணி என்ற இந்தியாவின் உலக சாதனையை தென்னாப்பிரிக்கா உடைத்து புதிய சாதனை படைத்தது. இதற்கு முன் நேற்றைய போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா 119 ரன்கள் கட்டுப்படுத்தியதே முந்தைய சாதனையாகும்.

Advertisement