ரோஹித் க்ளாஸ் காமிச்சுட்டாரு.. இதே மற்ற கேப்டனா இருந்துருந்தா இந்த தப்பை பண்ணிருப்பாஙக.. உத்தப்பா வியப்பு

Robin Uthappa
- Advertisement -

பாகிஸ்தானுக்கு எதிரான ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா வெறும் 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூயார்க் நகரில் ஜூன் ஒன்பதாம் தேதி நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய கிரிக்கெட் அணி வெறும் 119 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ரிசப் பண்ட் 43, அக்சர் பட்டேல் 20 ரன்கள் எடுத்தனர்.

அதைத்தொடர்ந்து சேசிங் செய்த பாகிஸ்தானுக்கு ஆரம்ப முதலே இந்திய பவுலர்கள் துல்லியமாக பந்து வீசி சவாலை கொடுத்தனர். அதில் அதிரடி காட்ட முடியாமல் திணறிய பாகிஸ்தான் 20 ஓவரில் 113/7 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அந்த வகையில் த்ரில் பெற்ற இந்தியா டி20 உலகக் கோப்பையில் குறைந்தபட்ச இலக்கை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய அணி என்ற உலக சாதனையை சமன் செய்தது.

- Advertisement -

உத்தப்பா வியப்பு:
இந்த வெற்றிக்கு அனைத்து பவுலர்களும் சரியாக பயன்படுத்திய ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப் முக்கிய காரணமாக இருந்ததாக ஜாம்பவான் யுவராஜ் சிங் பாராட்டினார். இந்நிலையில் வெறும் 120 ரன்களை கட்டுப்படுத்த வேண்டிய சூழ்நிலையில் வேறு கேப்டனாக இருந்தால் முதல் ஓவரையே சிறந்த பவுலரான பும்ராவிடம் கொடுத்திருப்பார் என்று ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்.

ஆனால் அழுத்தமான நிலையிலும் அந்த தவறை செய்யாத ரோகித் சர்மா 11 வீரர்களின் திறமைக்கு சமமான முன்னுரிமை கொடுத்ததாக உத்தப்பா வியப்பான பாராட்டை தெரிவித்துள்ளார். இது பற்றி அஸ்வின் யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “2வது இன்னிங்ஸில் ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப்பை நான் விரும்பினேன். அது கிளாஸ் நிறைந்த கேப்டன்ஷிப். ரோஹித் சர்மாவின் இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால் 119 ரன்களை கட்டுப்படுத்த வேண்டிய நிலையில் முதல் ஓவரிலேயே துருப்புச்சீட்டு பவுலரை கொண்டு வந்திருப்பார்கள்”

- Advertisement -

“ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த ரோகித் அணியில் உள்ள ஒவ்வொருவரின் மீதும் நம்பிக்கை வைத்து “நீங்கள் உங்களுடைய வேலையை செய்யுங்கள்” என்ற அனுமதியை கொடுத்தார். இந்த செய்கையால் அந்தப் போட்டிக்கு மட்டுமின்றி அவர் மொத்த தொடருக்கும் இந்திய வீரர்களுக்கு தன்னம்பிக்கையை கொடுத்துள்ளார். குறிப்பாக முதல் ஓவரில் அர்ஷ்தீப்பை கொண்டு வந்த அவர் சிராஜை 2வது ஓவரில் பயன்படுத்தினார்”

இதையும் படிங்க: பெயர்லயே பயம் இருக்கு.. அந்த இந்திய வீரரை பாத்தாலே எதிரணி பயப்படுறாங்க.. வாக்கார் யூனிஸ் பாராட்டு

“அதன் பின்பே பும்ராவிடம் 2 முக்கியமான பவர் பிளே ஓவர்களை கொடுத்தார். முதல் ஓவரில் கிட்டத்தட்ட விக்கெட்டை எடுத்த பும்ரா 5வது ஓவரில் பாபர் அசாமை சாய்த்தார். அதே போல சிராஜுக்கு 7வது ஓவரை மீண்டும் ரோஹித் கொடுத்தார். அந்த வகையில் அவர் இந்திய அணியை அற்புதமான க்ளாஸ் வழியில் நடத்தினார். பவுலர்களும் அதற்கு நல்ல ஒத்துழைப்பை கொடுத்தனர்” என்று கூறினார்.

Advertisement