பெயர்லயே பயம் இருக்கு.. அந்த இந்திய வீரரை பாத்தாலே எதிரணி பயப்படுறாங்க.. வாக்கார் யூனிஸ் பாராட்டு

Waqar Younis 2
- Advertisement -

ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய முதல் போட்டியில் அயர்லாந்தை தோற்கடித்து 2வது போட்டியில் பரம எதிரி பாகிஸ்தானை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. குறிப்பாக அமெரிக்காவில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 119 ரன்கள் மட்டுமே எடுத்ததால் தோல்வியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஏனெனில் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற தரமான பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டானார்கள். அந்தளவுக்கு சவாலாக இருந்த பிட்ச்சில் அதிகபட்சமாக ரிசப் பண்ட் 43, அக்சர் பட்டேல் 20 ரன்கள் எடுத்தனர். ஆனால் 120 ரன்களை துரத்திய பாகிஸ்தான் ஆரம்பம் முதலே இந்திய பவுலர்களின் நேர்த்தியான பந்து வீச்சில் அதிரடியாக விளையாட தடுமாறினார்கள்.

- Advertisement -

பெயரில் பயம்:
அதனால் 20 ஓவரில் 113/7 ரன்களுக்கு பாகிஸ்தானை கட்டுப்படுத்தி வென்ற இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 3, ஹர்டிக் பாண்டியா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். இந்த வெற்றிக்கு முக்கிய நேரத்தில் 3 விக்கெட்டுகளை எடுத்து கருப்பு குதிரையாக செயல்பட்ட ஜஸ்ப்ரித் பும்ரா ஆட்டநாயகன் விருது வென்றார். இந்நிலையில் ஜஸ்ப்ரித் பும்ரா வித்தியாசமான பவுலிங் ஆக்சனுடன் துல்லியமாக வீசுவதாக பாகிஸ்தான் ஜாம்பவான் முன்னாள் வீரர் வக்கார் யூனிஸ் பாராட்டியுள்ளார்.

அதனால் ஃபுல் டாஸ் பந்தை வீசினால் கூட அவருடைய பெயரில் இருக்கும் பயத்தால் பேட்ஸ்மேன்கள் பவுண்டரி அடிப்பதற்கு பயப்படுவதாக வக்கார் யூனிஸ் தெரிவித்துள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “நான் இந்த விளையாட்டின் பல மகத்தான வீரர்களுக்கு எதிராக விளையாடியுள்ளேன். ஆனால் பும்ராவை பார்க்கும் போது அவரிடம் வித்தியாசமான ஆக்சன் இருக்கிறது”

- Advertisement -

“பும்ரா வீசும் ஃபுல் டாஸ் பந்துகளை ஏன் எதிரணி பேட்ஸ்மேன்கள் அடிப்பதில்லை? ஏனெனில் அவருடைய பெயரில் உள்ள பயத்தால் அடிப்பதில்லை. அவர் பேட்ஸ்மேன்களின் மனதில் பயத்தை போட்டுள்ளார். அதனால் அவர் ஃபுல் டாஸ் பந்தை வீசினாலும் கூட அதை அடிப்பது கடினமாகும். ஏனெனில் பேட்ஸ்மேன்கள் அதை எதிர்பார்க்க மாட்டார்கள்”

இதையும் படிங்க: அவர் திட்டம் போட்டு பாகிஸ்தானை முடிச்சுட்டாரு.. ஐபிஎல் தான் இந்தியாவின் வெற்றிக்கு காரணம்.. பாண்டிங் பாராட்டு

“மேலிருந்து வரும் அவரின் வித்தியாசமான ஆக்சன் பந்துகளை தேர்ந்தெடுத்து அடிப்பது மிகவும் கடினம். அந்த வகையில் மிகவும் கடினமான பவுலரான அவர் ஒரு ஜீனியஸ். எந்த சூழ்நிலையிலும் சிறப்பாக பந்து வீசுவார். அனைத்தையும் கவர் செய்யும் அவர் உலகத்தரம் வாய்ந்தவர்” என்று கூறினார். முன்னதாக பும்ரா ஒரு ஜீனியஸ் என்று கேப்டன் ரோகித் சர்மாவும் வியப்புடன் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement