7 விக்கெட்ஸ்.. வங்கதேசத்தை அசால்ட்டாக முடித்த தெ.ஆ.. ஆசியாவில் 10 வருட சோகத்தை உடைத்து சாதனை வெற்றி

RSA vs BAN
- Advertisement -

வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா அங்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அத்தொடரின் முதல் போட்டி அக்டோபர் 21ஆம் தேதி தாக்காவில் துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய அந்த அணி சுமாராக விளையாடி வெறும் 106 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஹசன் ஜாய் 30 ரன்கள் எடுத்த நிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு அதிகபட்சமாக ககிசோ ரபாடா, வியான் முல்தர், கேசவ் மகாராஜ் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர். பின்னர் விளையாடிய தென்னாபிரிக்கா மிகவும் போராடி 308 ரன்கள் குவித்து அசத்தியது.

- Advertisement -

தென் ஆப்பிரிக்கா அசத்தல்:

அந்த அணிக்கு கேப்டன் ஐடன் மார்க்கம் 6, டீ ஜோர்சி 30, ஸ்டப்ஸ் 23, பேட்டிங்கம் 11, ரிக்கல்டன் 27 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 108-6 என பெரிய சரிவை சந்தித்த தென்னாப்பிரிக்காவுக்கு மிடில் ஆர்டரில் அபாரமாக விளையாடிய விக்கெட் கீப்பர் கெய்ல் வேர்ரின் சதமடித்து 114 ரன்கள் குவித்து காப்பாற்றினார். அவருடன் வியன் முல்தர் 54, டேன் பியட் 32 ரன்கள் எடுத்து கைகொடுத்தனர்.

வங்கதேசத்திற்கு அதிகபட்சமாக டைஜூல் இஸ்லாம் 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினர். பின்னர் 202 ரன்கள் பின்தங்கிய நிலைமையில் களமிறங்கிய வங்கதேசம் முழுமூச்சுடன் போராடி இரண்டாவது இன்னிங்ஸில் 307 ரன்கள் குவித்தது. அந்த அணிக்கு ஹசன் ஜாய் 40, ரஹீம் 33, மெஹதி ஹசன் 97, ஜாகிர் அலி 58 ரன்கள் குவித்தார்கள்.

- Advertisement -

10 வருடங்கள் கழித்து

தென்னாபிரிக்கா அணிக்கு அதிகபட்சமாக ககிஸோ ரபாடா 6 கேட்டுகளை எடுத்து அசத்தினார். இறுதியில் 106 என்ற இலக்கை துரத்திய தென்னாப்பிரிக்காவுக்கு டானி டீ ஜோர்சி 41, கேப்டன் மார்க்ரம் 20, ட்ரிஷ்டன் ஸ்டப்ஸ் 30* ரன்கள் எடுத்தனர். அதனால் 106-3 ரன்கள் எடுத்த தென்னாபிரிக்கா 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது. அதன் காரணமாக வங்கதேசத்தை அதனுடைய சொந்த மண்ணில் தோற்கடித்த தென் ஆப்பிரிக்கா 1 – 0* (2) என்ற கணக்கில் இத்தொடரில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது.

இதையும் படிங்க: காமன் சென்ஸ் இருக்கவங்க புரிஞ்சுக்கலாம்.. தமிழக வீரர் சுந்தர் தேர்வை விமர்சித்த கவாஸ்கருக்கு மஞ்ரேக்கர் பதிலடி

அத்துடன் 14 வருடங்கள் கழித்து ஆசிய கண்டத்தில் தென்னாப்பிரிக்கா முதல் முறையாக ஒரு வெற்றியை பதிவு செய்து சாதனையும் படைத்துள்ளது. கடைசியாக 2014ஆம் ஆண்டு இலங்கையின் கால்லேவில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றது. அதன் பின் கடந்த 10 வருடங்களில் இந்தியா, இலங்கை போன்ற ஆசிய நாடுகளில் விளையாடிய 14 போட்டிகளில் தொடர்ந்து தோல்வி மற்றும் டிராவை மட்டுமே சந்தித்த சோகத்தை தென்னாப்பிரிக்கா இன்று உடைத்துள்ளது. மறுபுறம் சமீபத்தில் இந்தியாவிடம் வாங்கிய அடியிலிருந்து மீளாத வங்கதேசத்திற்கு டைஜுல் இஸ்லாம் 3 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.

Advertisement