மிரட்டிய உம்ரான், தரத்தை காட்டிய நடராஜன் – ஜெய்ஸ்வால், பட்லர் சரவெடியால் பவர் பிளேவில் சாதனை படைத்த ராஜஸ்தான்

RR vs SRH
- Advertisement -

ஐபிஎல் 2023 தொடரில் ஏப்ரல் 2ஆம் தேதியன்று நடைபெற்ற 2 போட்டிகளில் மதியம் 3.30 மணிக்கு நடைபெற்ற 4வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. ஹைதராபாத் நகரில் நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தானுக்கு ஜோஸ் பட்லர் – யசஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் முதல் ஓவரிலிருந்தே சரமாரியாக வெளுத்து வாங்கி அதிரடியாக 2 ரன்களை சேர்த்தனர்.

அதில் குறிப்பாக கடந்த வருடம் ஆரஞ்சு தொப்பி வென்று ராஜஸ்தான் ஃபைனல் வரை செல்வதற்கு முக்கிய பங்காற்றிய ஜோஸ் பட்லர் இப்போதும் அதே ஃபார்மில் தான் இருக்கிறேன் என்பதை நிரூபிக்கும் வகையில் சரவெடியாக பேட்டிங் செய்து 5.5 ஓவரிலேயே 7 பவுண்டரி 3 சிக்சருடன் 54 (22) ரன்கள் குவித்து ரசிகர்களை மகிழ்வித்து ஆட்டமிழந்தார். அவரது அதிரடியால் 6 ஓவரில் 85/1 ரன்கள் குவித்த ராஜஸ்தான் ஐபிஎல் வரலாற்றில் பவர் பிளே ஓவரில் தங்களுடைய அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்து சாதனை படைத்தது. இதற்கு முன் கடந்த 2021 ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு எதிராக பவர் பிளே ஓவர்களில் 81 ரன்கள் குவித்ததே முந்தைய சாதனையாகும்.

- Advertisement -

ராஜஸ்தான் அதிரடி:
அப்படி அதிரடியான தொடக்கத்தை பெற்ற ராஜஸ்தானுக்கு மறுபுறம் தனது பங்கிற்கு அதிரடி காட்டிய இளம் வீரர் ஜெய்ஸ்வால் அடுத்து வந்து கேப்டன் சஞ்சு சாம்சனுடன் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 54 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 9 பவுண்டரியுடன் 54 (37) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஆனால் அடுத்து வந்த தேவ்தூத் படிக்கலை 2 (5) ரன்களில் 147 கி.மீ வேகத்தில் உம்ரான் மாலிக் கிளீன் போல்ட்டாக்கி பெவிலியன் அனுப்பி வைத்தார். அவரைத் தொடர்ந்து வந்த ரியன் பராக்கை தமிழக வீரர் நடராஜன் 7 (6) ரன்கள் காலி செய்தார்.

ஆனாலும் மறுபுறம் ரன் ரேட்டை சரிய விடாத வகையில் அதிரடியை தொடர்ந்து கேப்டன் சஞ்சு சாம்சன் அரை சதமடித்து தொடர்ந்து ஹைதராபாத் பவுலர்களுக்கு அழுத்தத்தை கொடுத்த போது 3 பவுண்டரி 4 சிக்சருடன் 55 (32) ரன்களில் நடராஜன் அவுட் செய்தார். இறுதியில் சிம்ரோன் ஹெட்மயர் அதிரடியாக 1 பவுண்டரி 1 சிக்சருடன் 22* (16) ரன்கள் எடுத்த உதவியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ராஜஸ்தான் 203/5 ரன்கள் குவித்தது. ஹைதராபாத் சார்பில் அதிகபட்சமாக தமிழக வீரர் நடராஜன் மற்றும் பரூக்கி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர்.

- Advertisement -

குறிப்பாக 8க்கும் மேற்பட்ட எக்கனாமியில் சுமாராக பந்து வீசிய ஹைதராபாத் பவுலர்களுக்கு மத்தியில் நடராஜன் 3 ஓவரில் 23 ரன்களை மட்டும் 7.67 என்ற நல்ல எக்கனாமியில் கொடுத்து டெத் ஓவர்களில் 2 விக்கெட்டுகளை சாய்த்து தனது தரத்தை மீண்டும் நிரூபித்தார். அதிலும் குறிப்பாக முதல் ஓவரில் 17 ரன்கள் வாரி வழங்கிய அவர் கடைசி 2 ஓவரில் வெறும் 6 ரன்கள் மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்து தன்னை டெத் ஓவர் ஸ்பெசலிஸ்ட் என்பதை மீண்டும் நிரூபித்தார்.

முன்னதாக இப்போட்டி நடைபெறும் ஹைதராபாத் கிரிக்கெட் மைதானம் பேட்டிங்க்கு சாதகமாக இருப்பதை தெரிந்தும் டாஸ் வென்ற ஹைதராபாத் முதலில் பந்து வீச தீர்மானித்து மோசமாக செயல்பட்டது அந்த அணி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. குறிப்பாக கடந்த பிப்ரவரியில் இதே மைதானத்தில் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா சுப்மன் கில் அதிரடியான இரட்டை சதத்தின் உதவியுடன் வெற்றி பெற்றது. மேலும் மைக்கேல் ப்ரேஸ்வெல் அதிரடி காட்டியதால் வெற்றியின் விளிம்பு வரை சென்ற நியூசிலாந்து தோல்வியை சந்தித்தது.

இதையும் படிங்க: வீடியோ : ஈ சாலா கப் நம்தே சொல்வதில் உண்மையை உளறிய டு பிளேஸிஸ், விழுந்து சிரித்த விராட் கோலி – கலாய்க்கும் ரசிகர்கள்

எனவே பந்து வீச்சில் சற்று சுமாராகவே செயல்பட்ட ஹைதராபாத் மயங் அகர்வால், ஹரி ப்ரூக், கிளன் பிலிப்ஸ் போன்ற முக்கிய வீரர்கள் அதிரடியாக ரன்கள் குவித்தால் தான் வெற்றி பெற முடியும் என்ற நிலைமையில் பேட்டிங் செய்து வருவது குறிப்பிடப்பட்டது.

Advertisement