RR vs CSK : 15 வருட வரலாற்றை மாற்றி எழுதிய ராஜஸ்தான் – மும்பையின் தம்பியாக சிஎஸ்கே’வை சாய்க்கும் சோகம்

- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 27ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 37வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 32 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த ராஜஸ்தான் ராயல்ஸ் தங்களுடைய 5வது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியது. ஜெய்பூரில் நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 20 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 202/5 ரன்கள் குவித்தது. அந்த அணிக்கு 86 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த ஜோஸ் பட்லர் 27 (21) ரன்களும் யசஸ்வி ஜெய்ஸ்வால் சரவெடியாக 8 பவுண்டரி 4 சிக்சருடன் 77 (43) ரன்களும் எடுத்தனர்.

Yashsvi Jaiswal

- Advertisement -

மிடில் ஆர்டரில் சாம்சன் 17 (17) ஹெட்மையர் 8 (10) என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானாலும் கடைசி நேரத்தில் துருவ் ஜுரேல் அதிரடியாக 3 பவுண்டரி 2 சிக்சருடன் 34 (15) ரன்களும் தேவ்தூத் படிக்கல் 5 பவுண்டரியுடன் 27* (13) ரன்களும் எடுத்து நல்ல பினிஷிங் கொடுக்க சென்னை சார்பில் அதிகபட்சமாக துஷார் தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத் தொடர்ந்து 203 ரன்களை துரத்திய சென்னைக்கு ஆரம்பத்திலேயே தடுமாறிய டேவோன் கான்வே 8 (16) ரன்களில் அவுட்டாகி பெரிய அழுத்தத்தை கொடுத்த நிலையில் மறுபுறம் அதிரடியாக செயல்பட்ட ருதுராஜ் கைக்வாட் 5 பவுண்டரி 1 சிக்சருடன் 47 (29) ரன்களில் ஆட்டமிழந்தார்.

ராஜஸ்தானின் சாட்டையடி:
ஆனால் அப்போது வந்த ரகானே 15 (13) ராயுடு 0 (2) என முக்கிய பேட்ஸ்மேன்கள் ஒரே ஓவரில் சொற்ப ரன்களில் அவுட்டானதால் ஏற்பட்ட அழுத்தத்தை சரி செய்து போராடிய சிவம் துபே 2 பவுண்டரி 4 சிக்சருடன் 52 (33) ரன்களும் மொய்ன் அலி 2 பவுண்டரி 2 சிக்சருடன் 23 (12) ரன்களும் ரவீந்திர ஜடேஜா 23* (15) ரன்கள் எடுத்தும் 20 ஓவர்களில் சென்னை 170/6 ரன்கள் மட்டுமே எடுத்து ஃபினிஷிங் செய்ய முடியாமல் பரிதாபமாக தோற்றது. அந்த அளவுக்கு பந்து வீச்சில் துல்லியமாக செயல்பட்ட ராஜஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஆடம் ஜாம்பா 3 விக்கெட்டுகளும் அஸ்வின் 2 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.

RR vs CSK Shivam Dube Adam Zampa

முன்னாதாக ஜெய்ப்பூரில் நடைபெற்ற இந்த போட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 200வது போட்டியாகும். கடந்த 2008இல் ஷேன் வார்னே தலைமையில் கோப்பையை வென்ற அந்த அணி கடந்த 16 வருடங்களாக பல்வேறு மைதானங்களில் விளையாடிய போதும் தன்னுடைய 200வது போட்டியை தம்முடைய சொந்த ஊரான ஜெய்ப்பூரில் விளையாடும் வாய்ப்பை பெற்றது. அதில் அதிரடியாக செயல்பட்ட அந்த அணி ஐபிஎல் வரலாற்றில் ஜெய்ப்பூர் மைதானத்தில் முதல் முறையாக 200 ரன்களை பதிவு செய்த அணியாகவும் சாதனை படைத்தது.

- Advertisement -

இதற்கு முன் கடந்த 2008இல் பெங்களூரு அணிக்கு எதிராக 197/1 ரன்கள் குவித்த ராஜஸ்தான் தற்போது 15 வருடங்கள் கழித்து ஜெய்ப்பூர் மைதானத்தில் 200 ரன்களை முதல் முறையாக தொட்டு வரலாற்றை மாற்றி எழுதியது வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அத்துடன் தோனி தலைமையிலான சென்னையை இந்த வருடம் சேப்பாக்கத்தில் ஏற்கனவே தோற்கடித்திருந்த அந்த அணி இம்முறை தங்களது சொந்த ஊரிலும் மண்ணை கவ்வ வைத்துள்ளது.

RR vs CSK Sandeep Sharma Holder Jaiswal Aadam Azampa

அதை விட கடைசியாக மோதிய 7 போட்டிகளில் சென்னையை 6 முறை தோற்கடித்துள்ள ராஜஸ்தான் சமீப காலங்களில் அசத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக 2019 வரை இவ்விரு அணிகள் மோதிய போட்டிகளில் சென்னை 14 வெற்றிகளையும் ராஜஸ்தான் 7 வெற்றிகளை மட்டுமே பெற்றிருந்தது. ஆனால் 5 வருடங்கள் கழித்து தற்போது சென்னை 15 வெற்றிகள் மட்டுமே பதிவு செய்துள்ள நிலையில் ராஜஸ்தான் 13 வெற்றிகளை பதிவு செய்துள்ளது.

இதையும் படிங்க:RR vs CSK : 200வது சாதனை போட்டியில் ராஜஸ்தான் மாஸ் வெற்றி – முதலிடத்தை பறி கொடுத்த சிஎஸ்கே, தோல்விக்கான 3 காரணம் இதோ

இது சமீப காலங்களில் சென்னைக்கு பரம எதிரியான மும்பையின் தம்பியை போல ராஜஸ்தானும் தோற்கடிப்பது தெளிவாக காட்டுகிறது. அதற்கு மற்றுமொரு சான்றாக ஐபிஎல் தொடரில் சென்னைக்கு எதிராக அதிக வெற்றிகளை பதிவு செய்த 2வது அணி என்ற சாதனையும் ராஜஸ்தான் படைத்துள்ளது. அந்த பட்டியல்:
1. மும்பை : 20
2. ராஜஸ்தான் : 13*
3. பஞ்சாப் : 12

Advertisement