RR vs CSK : 200வது சாதனை போட்டியில் ராஜஸ்தான் மாஸ் வெற்றி – முதலிடத்தை பறி கொடுத்த சிஎஸ்கே, தோல்விக்கான 3 காரணம் இதோ

RR vs CSK Shivam Dube Adam Zampa
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 27ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு ஜெய்ப்பூரில் நடைபெற்ற 37வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின. அப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு வழக்கம் போல பவர் பிளே ஓவர்களில் ஜெய்ஸ்வால் வெளுத்து வாங்கிய நிலையில் மறுபுறம் சற்று நிதானமாக பேட்டிங் செய்த ஜோஸ் பட்லர் 86 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்து 4 பவுண்டரியுடன் 27 (21) ரன்களில் ஆட்டமிழந்தார்.

அந்த நிலைமையில் களமிறங்கி நிதானமாக விளையாட முயற்சித்த சஞ்சு சாம்சன் 17 (17) ரன்களில் அவுட்டானாலும் மறுபுறம் தெறிக்க விடும் பேட்டிங்கை வெளிப்படுத்திய யசஎஸ்வி ஜெய்ஸ்வால் 8 பவுண்டரி 4 சிக்ஸருடன் 77 (43) ரன்களை 179.07 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்து வாங்கி அவுட்டானார். அந்த சமயத்தில் வந்த சிம்ரோன் ஹெட்மயர் 8 ரன்களில் ஆட்டமிழந்தாலும் கடைசி நேரத்தில் டெத் ஓவர்களில் சுமாராக பந்து வீசிய சென்னை பவுலர்களை பிரித்து மேய்ந்த துருவ் ஜுரேல் 3 பவுண்டர் 2 சிக்சருடன் 34 (15) ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் ரன் அவுட்டானார்.

- Advertisement -

ஆனால் அவருடன் மறுபுறம் கடைசி வரை அவுட்டாகாமல் அசத்திய தேவதூத் படிக்கல் 5 பவுண்டரியுடன் 27* (13) ரன்கள் எடுத்து நல்ல பினிஷிங் கொடுத்ததால் 20 ஓவர்களில் ராஜஸ்தான் 202/5 ரன்கள் எடுக்க சென்னை சார்பில் அதிகபட்சமாக துஷார் தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகள் எடுத்தார். அதை தொடர்ந்து 203 என்ற கடினமான இலக்கை துரத்திய சென்னைக்கு பெயருக்கு 42 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்தாலும் தடுமாற்றமாக செயல்பட்ட டேவோன் கான்வே 8 (16) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் அடுத்த சில ஓவர்களில் மறுபுறம் அதிரடி காட்டிய ருதுராஜ் கைக்வாட் 5 பவுண்டரி 1 சிக்சருடன் 47 (29) ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஆனால் அப்போது களமிறங்கிய அஜிங்க்ய ரகானேவை 15 (13) ரன்களில் காலி செய்த அஸ்வின் அதே ஓவரில் இம்பேக்ட் வீரராக வந்த ராயுடுவை டக் அவுட்டாக்கி மிரட்டினார். அதனால் 73/4 என தடுமாறிய சென்னையை அடுத்ததாக ஜோடி சேர்ந்து சிவம் துபேவுடன் அதிரடியாக விளையாடி காப்பாற்ற போராடிய மொயின் அலி 5வது விக்கெட்டுக்கு 51 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சரிவை சரி செய்த போதிலும் 2 பவுண்டர் 2 சிக்சருடன் 23 (12) ரன்களில் ஆடம் ஜாம்பா சுழலில் சிக்கினார்.

- Advertisement -

அதனால் தடுமாறிய சென்னையில் வெற்றிக்கு கடைசி 5 ஓவரில் 78 தேவைப்பட்ட போது சிவம் துபே அதிரடியாக செயல்பட்டு அரைசதம் கடந்தாலும் எதிர்ப்புறம் வந்த ஜடேஜா சற்று தடுமாற்றமாக செயல்பட்டதால் ரன் ரேட்டை கட்டுக்குள் வைக்க முடியாமல் தடுமாறினார்.

அதனால் 20 ஓவர்களில் 2 பவுண்டரி 4 சிக்சருடன் சிவம் துபே 52 (33) ரன்களும் ஜடேஜா 3 பவுண்டரியுடன் 23* (15) ரன்கள் எடுத்தும் 170/6 ரன்கள் மட்டுமே எடுத்த சென்னை பினிஷிங் செய்ய முடியாமல் பரிதாபமாக தோற்றது. மறுபுறம் பந்து வீச்சில் அபாரமாக செயல்பட்ட ராஜஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஆடம் ஜாம்பா 3 விக்கெட்டுகளையும் அஸ்வின் 2 விக்கெட்டுகளையும் எடுத்து 32 ரன்கள் வித்தியாசத்தில் முதலிடத்தில் இருந்த சென்னையை தோற்கடிக்க முக்கிய பங்காற்றினர்.

- Advertisement -

முன்னதாக இந்த போட்டியில் பந்து வீச்சில் ஆரம்பத்தில் ஜெய்ஸ்வால் ஆட்டத்தை தாண்டி ஓரளவு சிறப்பாகவே செயல்பட்ட சென்னை பவுலர்கள் டெத் ஓவர்களில் குறிப்பாக கடைசி 5 ஓவர்களில் சுமாராக செயல்பட்டு 56 ரன்களை வாரி வழங்கியது ராஜஸ்தான் 200க்கும் மேற்பட்ட ரன்களை குவிக்க உதவியது.

அதே போல பேட்டிங்கில் ஆரம்பத்திலேயே டேவோன் கான்வே ரொம்பவே தடுமாறி 8 (16) ரன்களில் அவுட்டானதும் ரகானே, ராயுடு ஆகியோர் ஒரே ஓவரில் அவுட்டானதும் ரன் ரேட்டை எகிற வைத்தது. அதனால் கடைசியில் சிவம் துபே போராடியும் ஃபினிஷிங் செய்ய முடியாத அளவுக்கு டெத் ஓவர்களில் அசத்திய ராஜஸ்தான் தங்களுடைய 200வது ஐபிஎல் போட்டியில் சென்னையை தோற்கடித்து அசத்தியுள்ளது.

இதையும் படிங்க: WTC Final : ரகானே தேர்வாக தேர்வுக்குழுவுக்கு சிக்னல் கொடுத்த தோனி, ஃபைனலில் விளையாடும் 5 ரிசர்வ் வீரர்கள் – வெளியான ரிப்போர்ட்

அத்துடன் இந்த வருடத்தில் ஏற்கனவே சென்னையை சேப்பாக்கத்தில் தோற்கடித்த ராஜஸ்தான் தற்போது தங்களது சொந்த ஊரிலும் 2வது முறையாக தோற்கடித்துள்ளது. அதை விட புள்ளி பட்டியலில் பரிதாபமாக தோற்ற சென்னையை 3வது இடத்திற்கு தள்ளிய ராஜஸ்தான் முதலிடத்தை பிடித்துள்ளது.

Advertisement