- Advertisement -
ஐ.பி.எல்

கேப்டனாக செயல்பட்ட கடைசி போட்டியில் தண்டனை பெற்ற ரியான் பராக்.. 12 லட்சம் காலி – என்ன நடந்தது?

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சன் கடைசியாக நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரின் போது விரலில் காயமடைந்தார். அதன் பின்னர் கடந்த பல வாரங்களாகவே ஓய்வில் இருந்து வந்த அவர் மீண்டும் ஐபிஎல் 2025 ஆண்டிற்கான ஐபிஎல் தொடரின் போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையிலே அவர் ஐபிஎல் தொடரின் ஆரம்பத்திலேயே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் இணைந்தார்.

தண்டனை பெற்ற ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக் :

ஆனால் தனக்கு கையில் ஏற்பட்ட காயம் இன்னும் முழுவதுமாக குணமடையதால் முதல் மூன்று போட்டிகளுக்கு ரியான் பராக் கேப்டனாக செயல்படுவார் என்றும் அதன்காரணமாக இந்த முதல் மூன்று போட்டியிலும் தான் இன்பேக்ட் வீரராக விளையாடுவேன் என்றும் அறிவித்திருந்தார்.

- Advertisement -

அந்த வகையில் இதுவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடிய முதல் மூன்று போட்டிகளில் ரியான் பராக் கேப்டனாக செயல்பட்ட வேளையில் முதல் இரண்டு போட்டிகளில் அந்த அணி தோல்வியை சந்தித்தது. ஆனால் நேற்று நடைபெற்ற சிஎஸ்கே அணி எதிரான மூன்றாவது போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.

இந்த போட்டியுடன் ரியான் பராக் தனது கேப்டன் பதிவிலிருந்து வெளியேறி மீண்டும் சஞ்சு சாம்சன் அடுத்த போட்டியில் இருந்து கேப்டனாக அணிக்கு திரும்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று கவுகாத்தி மைதானத்தில் நடைபெற்ற 11-வது லீக் ஆட்டத்தில் சென்னை அணியை எதிர்த்து விளையாடி ராஜஸ்தான் அணி முதலில் விளையாடி 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்களை குவிக்க அடுத்ததாக விளையாடிய சிஎஸ்கே அணி 176 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்ததால் அந்த அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது சிறப்பாக பேட்டிங் செய்த ரியான் பராக் 28 பந்துகளை சந்தித்து 2 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் என 37 ரன்கள் குவித்திருந்து அந்த அணியின் வெற்றிக்கு உதவியிருந்த வேளையில் நேற்றைய போட்டியின் போது அவருக்கு 12 லட்சம் ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டது. இதற்கு காரணம் யாதெனில் :

இதையும் படிங்க : என்னுடைய இந்த விக்கெட் செலிப்ரேஷன் ஸ்டைலுக்கு காரணம் இதுதான் – வனிந்து ஹசரங்கா பதில்

சிஎஸ்கே அணிக்கு எதிரான நேற்றைய போட்டியின் போது ராஜஸ்தான் அணி பந்துவீச குறிப்பிட்ட நேரத்திற்கும் அதிகமான நேரத்தினை எடுத்துக்கொண்டதால் ஸ்லோ ஓவர்ரேட் காரணமாக கேப்டன் என்ற முறையில் அபராதத்தினை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -