நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் எலிமினேட்டர் சுற்று போட்டியானது நேற்று மே 27-ஆம் தேதி சண்டிகார் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற சன் ரைசர்ஸ் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
சன் ரைசர்ஸ் அணியை வீழ்த்திய ராஜஸ்தான் :
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 243 ரன்களை குவித்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பாக அதிகபட்சமாக வைபவ் சூர்யவன்ஷி 97 ரன்களையும், துருவ் ஜூரேல் 50 ரன்களையும் குவித்தனர். பின்னர் 244 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சன் ரைசர்ஸ் அணி :
ராஜஸ்தான் அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 196 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக 47 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது. அந்த வகையில் அடுத்ததாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் இரண்டாவது குவாலிபயர் போட்டியில் இதே மைதானத்தில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியின் போது முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பாக துவக்க வீரராக களமிறங்கிய வைபவ் சூர்யவன்ஷி 29 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 12 சிக்ஸர் என 97 ரன்கள் குவித்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மிகப் பெரிய இலக்கை சன் ரைசர்ஸ் அணிக்கு நிர்ணயித்தது.
இதையும் படிங்க : கிரிஸ் கெயிலின் 14 ஆண்டுகால சாதனையை ஊதி தள்ளிய 15 வயது வைபவ் சூர்யவன்ஷி – விவரம் இதோ
அதன் காரணமாகவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்த போட்டியில் எளிதான வெற்றியையும் பெற்றது. ஏற்கனவே புள்ளி பட்டியலில் நான்காம் இடத்தை பிடித்து பிளே ஆப் வாய்ப்பை பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் தற்போது சன் ரைசர்ஸ் அணியையும் வீழ்த்தியுள்ளதால் அடுத்ததாக குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் இன்னும் கடுமையான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்பது உறுதி.



