கிரிஸ் கெயிலின் 14 ஆண்டுகால சாதனையை ஊதி தள்ளிய 15 வயது வைபவ் சூர்யவன்ஷி – விவரம் இதோ

Vaibhav Sooryavanshi
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் எலிமினேட்டர் சுற்று போட்டியானது இன்று சண்டிகர் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதி வருகின்றன. அந்த வகையில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற சன் ரைசர்ஸ் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

கிரிஸ் கெயிலின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி :

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 243 ரன்கள் குவித்தது. பின்னர் 244 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது சன் ரைசஸ் ஹைதராபாத் அணியானது விளையாடி வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் துவக்க வீரராக களமிறங்கிய வைபவ் சூர்யவன்ஷி 29 பந்துகளை சந்தித்து 5 பவுண்டரி மற்றும் 12 சித்தர்கள் என 97 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். இன்றைய போட்டியில் அவர் அடித்த 12 சிக்ஸர்களின் மூலம் ஐ.பி.எல் வரலாற்றில் கிரிஸ் கெயிலின் 14 ஆண்டுகால சாதனையை அவர் முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்.

அதுகுறித்த விவரம் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்த வகையில் வைபவ சூர்யவன்ஷி நிகழ்த்திய சாதனை யாதெனில் : இன்றைய போட்டியில் அவர் அடித்த 12 சிக்ஸர்களை அடித்ததன் மூலம் இந்த நடப்பு 2026 ஐ.பி.எல் தொடரில் மொத்தம் 65 சிக்ஸர்களை விளாசியுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : தோனி செய்த இந்த விடயத்தை நான் கொஞ்சம் கூட ஏத்துக்க மாட்டேன் – டேல் ஸ்டெயின் காட்டம்

இவருக்கு முன்னதாக கிரிஸ் கெயில் கடந்த 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் 59 சிக்ஸர்களை அடித்ததே ஒரு சீசனில் ஒரு வீரர் அடித்த அதிக சிக்ஸர்களாக இருந்த வேளையில் இந்த ஆண்டு 65 சிக்ஸர்களை விளாசி வைபவ் சூரியவன்ஷி அவரது 14 ஆண்டுகால சாதனையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்.

Advertisement