லக்னோ அணியின் பலவீனத்தை சரியாக அறிந்து அவர்களை வீழ்த்திய ராஜஸ்தான் அணி – நடந்தது என்ன?

LSG vs RR
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரின் லீக் சுற்று இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் மே 15-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 2 போட்டிகளில் இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 63-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெய்ட்ன்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. புள்ளிப் பட்டியலில் தேவையான வெற்றிகளுடன் 2, 3 ஆகிய இடங்களில் உள்ள இவ்விரு அணிகளும் ப்ளே ஆப் சுற்றுக்கு அதிகாரப்பூர்வமாக தகுதி பெற இப்போட்டியில் வெற்றி தேவைப்பட்ட நிலையில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் தைரியமாக பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

Jos Buttler Clean Bowled

- Advertisement -

அதைத் தொடர்ந்து களமிறங்கிய அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ஜோஸ் பட்லர் 2 (6) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். இருப்பினும் அடுத்து களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றொரு தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் உடன் சேர்ந்து அதிரடியாக ரன்களை குவிக்க முயன்றார். 2-வது விக்கெட்டுக்கு 64 ரன்களை சேர்த்த இந்த ஜோடியில் 6 பவுண்டரிகளுடன் 32 (24) ரன்கள் எடுத்து சாம்சன் அவுட்டானார்.

179 இலக்கு:
அடுத்த ஒருசில ஓவர்களில் அதிரடி காட்டிக்கொண்டிருந்த ஜெய்ஸ்வால் 6 பவுண்டரி 1 சிக்சருடன் 41 (29) ரன்கள் எடுத்து அவுட்டாக அவரைவிட அதிரடி காட்டிய மற்றொரு இளம் வீரர் தேவ்தூத் படிக்கல் தனது பங்கிற்கு 5 பவுண்டரி 2 சிக்சருடன் 39 (18) ரன்கள் எடுத்து முக்கிய நேரத்தில் ஆட்டமிழந்தார். அதனால் 122/4 என தடுமாறிய அந்த அணிக்கு ரியன் பராக் 19 (16) ஜிம்மி நீசம் 14 (12) ஆகியோர் முக்கிய ரன்களை எடுத்து அவட்டானார்கள். கடைசி நேரத்தில் அஷ்வின் 10* (7) ட்ரெண்ட் போல்ட் 17* (9) என டைல் எண்டர்கள் பொன்னான ரன்களை விளாசியதால் 20 ஓவர்களில் ராஜஸ்தான் 178/6 ரன்கள் சேர்த்தது. லக்னோ சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ரவி பிஷ்னோய் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

Sanju Samson Yashasvi jaiswal

அதை தொடர்ந்து 179 என்ற இலக்கை துரத்திய லக்னோவுக்கு 2-வது ஓவரை வீசிய ட்ரெண்ட் போல்ட் குயின்டன் டி காக் 7 (8) ஆயுஷ் படோனி 0 (1) என அடுத்தடுத்த பந்துகளில் 2 விக்கெட்டுகளை எடுத்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார். போதாக்குறைக்கு கேப்டன் கேஎல் ராகுல் 10 (19) ரன்களில் அவுட்டாக 29/3 என ஆரம்பத்திலேயே தடுமாறிய அந்த அணியை மீட்டெடுப்பதற்காக அடுத்து களமிறங்கிய தீபக் ஹூடா – க்ருனால் பாண்டியா பொறுப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினர்.

- Advertisement -

ராஜஸ்தான் வெற்றி:
4-வது விக்கெட்டுக்கு 65 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடியில் 25 (23) ரன்களில் க்ருனால் பாண்டியா அவுட்டாக அடுத்த சில ஓவர்களில் மேலும் அதிரடி காட்ட முயன்ற தீபக் ஹூடா 59 (39) ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். அதனால் 116/5 என பின்னடைவை சந்தித்த அந்த அணிக்கு ஜேசன் ஹோல்டர் 1 (2) துஷ்மந்தா சமீரா 0 (2) ஆகியோர் அடுத்தடுத்து அவுட்டாகி மேலும் பின்னடைவை கொடுத்தனர்.

RR

இறுதியில் மார்கஸ் ஸ்டோனிஸ் அதிரடியாக 1 பவுண்டரி 2 சிக்சருடன் 27 (17) ரன்களை எடுத்த போதிலும் இதர வீரர்கள் கைகொடுக்க தவறியதால் 20 ஓவர்களில் 154/8 ரன்கள் மட்டுமே எடுத்த லக்னோ பரிதாபமாக தோற்றது. ராஜஸ்தான் சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக டிரென்ட் போல்ட், பிரஸித் கிருஷ்ணா, ஓபேத் மெக்காய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். இதனால் 24 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற அந்த அணி பங்கேற்ற 13 போட்டிகளில் 8-வது வெற்றியை பதிவு செய்து 2-வது இடத்துக்கு முன்னேறி பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை 99% உறுதி செய்துள்ளது.

லக்னோ பலவீனம்:
179 என்ற இலக்கை துரத்திய லக்னோவின் பலமே பேட்டிங்கில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான குயின்டன் டி காக் மற்றும் கே எல் ராகுல் ஆவார்கள். அதை உணர்ந்த ராஜஸ்தான் ஆரம்பத்திலேயே அவர்களை சொற்ப ரன்களில் காலி செய்தது. அதேபோல் பகையாளிகளாக இருந்து நண்பர்களாக மாறி லக்னோவின் நம்பிக்கை நட்சத்திரங்களாக உருவெடுத்த தீபக் ஹூடா – க்ருனால் பாண்டியா ஆகியோர் மிடில் ஆர்டரில் பலமாக கருதப்படுகின்றனர்.LSG KL Rahul

இப்போட்டியில் ஆரம்பத்தில் சரிந்த லக்னோவை வெற்றி பாதைக்கு அழைத்து சென்று அந்த ஜோடியை ராஜஸ்தானின் இரட்டை குழல் துப்பாக்கிகளான அஷ்வின் – சஹால் ஆகிய சுழல் பந்துவீச்சு ஜோடி பெரிய ரன்களை எடுத்து விடாமல் காலி செய்து வெற்றியை உறுதி செய்தது. மேலும் பந்துவீசிய அனைவருமே குறைந்தது 1 விக்கெட் எடுத்து வெற்றியை எளிதாக்கினர். இதனால் பங்கேற்ற 13 போட்டிகளில் 5-வது தோல்வியை பதிவு செய்த லக்னோ 3-வது இடத்திற்கு பின் தங்கினாலும் பிளே ஆப் சுற்று வாய்ப்பை இன்னும் பிரகாசமாக கையில் வைத்துள்ளது.

Advertisement