பெஞ்சில் உட்கார வேண்டிய உங்களுக்கு இந்த வாய்ப்பே அதிகம்.. இந்திய வீரர் மீது ஆர்பி சிங் அதிருப்தி

RP Singh
- Advertisement -

தங்களுடைய சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட பெரிய டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டிகள் தோற்ற இந்தியா இரண்டாவது போட்டியில் வென்று தொடரை சமன் செய்துள்ளது. இருப்பினும் இந்த தொடரில் விக்கெட் கீப்பராக விளையாடும் கேஎஸ் பரத் இதுவரை பேட்டிங்கில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாதது இந்திய அணிக்கு பின்னடைவாகவும் ரசிகர்களுக்கு ஏமாற்றமாகவும் அமைந்துள்ளது.

ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனியை மிஞ்சி சாதனைகளை படைத்த ரிசப் பண்ட் காயமடைந்ததால் விக்கெட் கீப்பராக விளையாடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அந்த வாய்ப்பில் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த 2023 பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் முழுமையாக 4 போட்டிகளில் வாய்ப்பு பெற்ற அவர் ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை.

- Advertisement -

பெஞ்சில் இருப்பிங்க:
அந்த வகையில் இதுவரை 7 போட்டிகளில் வாய்ப்பு பெற்றுள்ள அவர் 221 ரன்களை 20.09 என்ற சுமாரான சராசரியில் எடுத்து எதிர்பார்ப்பு நிகராக செயல்படவில்லை. இந்நிலையில் ரிஷப் பண்ட் இல்லாத சூழ்நிலையில் வேறு நல்ல விக்கெட் கீப்பர் இருந்திருந்தால் இந்நேரம் கே.எஸ். பரத் பெஞ்சில் இருந்திருப்பார் என முன்னாள் வீரர் ஆர்பி சிங் கூறியுள்ளார்.

ஏனெனில் இதுவரை தமக்கு கிடைத்த வாய்ப்புகளில் பரத் சிறப்பாக செயல்படவில்லை என்று அதிருப்தியை வெளிப்படுத்தும் அவர் இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் பேசியது பின்வருமாறு. “இந்திய அணியை நீங்கள் பார்க்கும் போது அதில் 3 – 4 வீரர்களின் தலைக்கு மேல் கத்தி தொங்கிக் கொண்டிருக்கும் நிலை இல்லை. அந்த வரிசையில் கே.எஸ். பரத் இருக்கிறார். ஏனெனில் ரிஷப் பண்ட் முதலில் ஃபிட்னஸ் சோதனைக்கு சென்று உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும்”

- Advertisement -

“ரிஷப் பண்ட்க்கு நிகரான திறமையை கொண்ட ஒரு வீரரை அணி நிர்வாகம் அல்லது தேர்வுக் குழுவினர் பார்த்திருந்தால் இந்நேரம் கேஎஸ் பரத் பெஞ்சில் அமர்வதற்கு நீண்ட நேரமாகாது. கேஸ் பரத் பெறும் ஒவ்வொரு வாய்ப்பும் முக்கியமானதாகும். அவர் கீப்பிங் செய்வதிலும் இதுவரை சில கேட்ச்களை தவற விட்டு தடுமாற்றமாகவே செயல்பட்டுள்ளார். அதற்காக அவர் நன்றாக செயல்படவில்லை என்று சொல்லவில்லை”

இதையும் படிங்க: முதலில் தோனியின் அந்த வாசகத்தை ஃபாலோ பண்ணுங்க.. ரோஹித்துக்கு சஞ்சய் மஞ்ரேக்கர் அட்வைஸ்

“ஆனால் ரிஷப் பண்ட் போன்றவர் வெளிப்படுத்திய செயல்பாடுக்கு நிகராக விளையாடுவதற்கு அவர் பயிற்சியாளர்களின் உதவியை நாட வேண்டும். மற்றவர் வரும் போது நாம் அணியை விட்டு சென்று விடுவோம் என்று அவர் நினைக்கக் கூடாது. உங்களுடைய வேலை அணியின் வெற்றியில் பெரியதாக இருக்க வேண்டும். தற்போதைய நிலைமையில் கேஎஸ் பரத்தின் செயல்பாடுகள் ஏமாற்றத்தை கொடுப்பதாகவே இருக்கிறது” என்று கூறினார்.

Advertisement