ஐ.பி.எல் தொடரில் இது நடந்தால் மீண்டும் ரெய்னா இந்திய அணிக்கு ஆடுவது உறுதி – ஆர்.பி.சிங் பேட்டி

Raina

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி திடீரென தனது ஓய்வை அறிவித்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து வெளியேறினார். அவர் ஓய்வை அறிவித்த அடுத்த ஒரு மணி நேரத்தில் அவரது ஆஸ்தான தளபதி சுரேஷ் ரெய்னாவும் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

Raina-5

தோனிக்கு 39 வயதாகிறது அவர் ஓய்வு பெற்றது சரி. ஆனால் வெறும் 33 வயதே ஆன சுரேஷ் ரெய்னா ஏன் ஓய்வு பெற்றார் என்று தற்போது வரை தெரியாமல் கிரிக்கெட் ரசிகர்கள் விழித்து வருகிறார்கள். மேலும் ரெய்னாவுக்கு இன்னும் வயதிருக்கிறது அவர் மீண்டும் இந்திய அணியில் விளையாட வேண்டும் என்றும் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இருப்பினும் ரெய்னா ஓய்வுபெற முக்கிய காரணம் யாதெனில் தோனியை அவருக்கு மிகவும் பிடிக்கும் என்பதாலும், மீண்டும் இனி அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காது என்ற காரணத்தினாலும் ஓய்வு பெற்றார் என்பது வேறு கதை. ஆனால் ஒரு மாதத்திற்கு முன்னர் தான் மீண்டும் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்து ஆட வேண்டும் என்று கூறியிருந்தார் சுரேஷ் ரெய்னா.

இப்படி இருக்கையில் திடீரென்று எப்படி ஓய்வினை அறிவித்தது அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்தது. இந்நிலையில் ரெய்னா மீண்டும் இந்திய அணியில் ஆட ஒரு வாய்ப்பு இருக்கிறது என்று பேசியிருக்கிறார் முன்னாள் இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஆர் பி சிங். இதுகுறித்து அவர் கூறுகையில்…

Raina 3

- Advertisement -

ரெய்னா வெகு சீக்கிரமாக ஓய்வு பெற்றுவிட்டார். இப்படித்தான் நான் நினைக்கிறேன். மக்களும் இதைத்தான் கூறுகின்றனர். அவரது ஃபிட்னஸ் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு இருக்குமா என்பது குறித்து யோசித்து விட்டு தான் அவர் ஓய்வினை அறிவித்தார் என்று கருதுகிறேன்.

Raina

ஒருவேளை இந்த வருட ஐபிஎல் தொடரில் ஆயிரம் ரன்களை குவித்தால், மீண்டும் ஓய்வினை திரும்பப் பெற்று இந்திய அணிக்காக ஆட வாய்ப்பு இருக்கிறது. யாருக்கு தெரியும் அவர் என்ன நினைக்கிறார் என்று? யுவராஜ்சிங் வெளிநாட்டு டி20 தொடர்களில் ஆடியதை போன்று இவரும் ஆடலாம் என்று கூறியிருக்கிறார் ஆர் பி சிங்.