இந்திய அணி தோல்வி அடைந்தால் தோனியே முன்சென்று செய்தியாளரை சந்திக்க காரணம் இதுதான் – ஆர்.பி.சிங் பகிர்ந்த தகவல்

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனி குறித்து தினமும் ஒரு செய்திகள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆனார் ஆர்பி சிங் தோனி குறித்து வெளியிட்ட ஒரு தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Rp Singh 1

இந்திய அணியின் முன்னணி வீரரான தோனி கடந்த ஆண்டில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடருக்குப் பின்னர் இந்திய அணியில் மீண்டும் விளையாடவில்லை. மேலும் அவர் விளையாட தயாராக இருந்தாலும் அவரை இந்திய அணி நிர்வாகம் ஒதிக்கி வருகிறது. மேலும் இந்த வருடம் ஐபிஎல் தொடரில் தனது திறமையை நிரூபித்து டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெறலாம் என்று நினைத்திருந்த தோனியின் கனவில் கொரோனா வைரஸ் மண்ணை அள்ளிப் போட்டு விட்டது என்றே கூறலாம்.

இந்த வருட ஐபிஎல் நடைபெறாமல் போகும் பட்சத்தில் அவர் இந்திய அணிக்கு மீண்டும் திரும்புவது மிகவும் கடினம் என்று பல முன்னாள் வீரர்களும் கூறி வருகின்றனர். ஆனால் தோனி இதுவரை தனது நிலை குறித்தும், ஓய்வு குறித்து எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடாமல் உள்ளார். இந்நிலையில் தினசரி நாள்தோறும் தோனி குறித்த ஒரு செய்தியாவது இணையத்தில் வைரலாகி வருகிறது.

RP singh

அந்த வகையில் ஆர்.பி சிங் வெளியிட்ட தகவல் வைரலாகி வருகிறது. இந்திய அணிக்கு தோனி பல ஆண்டுகள் கேப்டனாக செயல்பட்டுள்ளார். அவரது தலைமையில் பல வெற்றிகளை இந்திய அணி பெற்றுள்ளது. அதில் ஒவ்வொரு வெற்றியின் போதும் அந்த வெற்றிக்கு காரணமான குறிப்பிட்ட வீரரை செய்தியாளர் சந்திப்புக்கு அனுப்பிவைக்கும் தோனி எப்போதெல்லாம் இந்திய அணி தோல்வி அடைகிறதோ அப்போது தானாக முன்வந்து செய்தியாளர்களை சந்திப்பார்.

- Advertisement -

அதற்கு காரணம் என்ன என்று அவர் விவரித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்திய அணி வெற்றி அடையும் போதெல்லாம் வெற்றிக்கு காரணமான வீரரை செய்தியாளர் முன் தோனி அனுப்புவதற்கு காரணம் அவர்களை அவரின் திறமையை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் மேலும் அந்த வெற்றி அவர்களால் இந்திய அணிக்கு கிடைத்ததால் அவர்களைப் பெருமைப்படுத்தும் விதமாக அவரை முன்னே செல்ல அனுமதிப்பார்.

Dhoni

அதேபோன்று தோல்வியுறும் பட்சத்தில் ஒரு கேப்டனாக வீரர்களின் மனநிலை பாதிக்கக் கூடாது என்ற காரணத்தினால் தானே முன்வந்து அந்த குறையை ஏற்று அடுத்த போட்டிகளில் தவறுகளை திருத்திக் கொள்ளும் விதமாக வீரர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் கேப்டனாக அந்த தோல்விக்கு பொறுப்பேற்று கொண்டு செய்தியாளர்கள் சந்திப்பில் தோனி செல்வார் என்று தோனி குறித்து ஆர்.பி சிங் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.