இதெல்லாம் ஒரு பிரச்சனையே கிடையாது – கடும் விமர்சனத்தை சந்தித்துள்ள கேஎல் ராகுலுக்கு முன்னாள் வீரர் ஆதரவு

Rahul-1
Advertisement

ஐபிஎல் 2022 தொடர் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில் வரும் ஜூன் 9-ஆம் தேதி முதல் சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா விளையாடுகிறது. அதில் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் கேஎல் ராகுல் தலைமையில் ஐபிஎல் தொடரில் அசத்திய தினேஷ் கார்த்திக், உம்ரான் மாலிக், அர்ஷிதீப் சிங் போன்ற வீரர்கள் களமிறங்கவுள்ளனர். மேலும் தற்போது முழுநேர கேப்டன் பொறுப்பேற்றுள்ள ரோகித் சர்மா 34 வயதை கடந்து விட்டதால் அடுத்த தலைமுறை கேப்டனை கண்டு பிடிப்பதற்காக துணை கேப்டனாக இருந்த ராகுலுக்கு இந்த தொடரில் கேப்டன்ஷிப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

Rahul

கடந்த ஜனவரியில் முதல் முறையாக தென்னாப்பிரிக்க மண்ணில் அந்த பொறுப்பேற்ற கேஎல் ராகுல் ஒரு போட்டியில் கூட வெற்றியை பதிவு செய்யவில்லை. குறிப்பாக அவரது தலைமையில் விராட் கோலி போன்ற தரமான வீரர்கள் இருந்தபோதிலும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 3 – 0 என்ற கணக்கில் இந்தியா ஒயிட்வாஷ் தோல்வியை எதிர்கொண்டது.

- Advertisement -

ஸ்ட்ரைக் ரேட் விமர்சனம்:
இருப்பினும் பேட்டிங்கில் அசத்தலாக செயல்பட்ட அவர் கடந்த வருடங்களில் பஞ்சாப் அணியை வழிநடத்திய போதிலும் ப்ளே ஆப் சுற்றுக்கு கூட அழைத்துச் செல்ல முடியவில்லை. ஆனால் இந்த ஐபிஎல் தொடரில் புதிதாக உருவாக்கப்பட்ட லக்னோ அணிக்கு கேப்டனாக அசத்திய அவர் பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டு பேட்டிங்கில் 616 ரன்கள் குவித்து ப்ளே ஆப் சுற்று வரை அழைத்துச் சென்றார். அதன் காரணமாக எதிர்பாராத வகையில் ஹர்திக் பாண்டியா முதல் வருடத்திலேயே குஜராத்துக்காக கோப்பையை வென்றாலும் அவர் மீது மீண்டும் நம்பிக்கை வைத்துள்ள இந்திய அணி நிர்வாகம் கேப்டன்ஷிப் பொறுப்பை கொடுத்துள்ளது.

Rahul

மேலும் என்னதான் சிறப்பாக பேட்டிங் செய்து மலைபோல ரன்களை குவித்தாலும் சமீப காலங்களில் மெதுவாக பேட்டிங் செய்து குறைந்த ஸ்டிரைக் ரேட்டில் ரன்கள் சேர்த்து வருவதால் கேஎல் ராகுல் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறார். குறிப்பாக பெங்களூருக்கு எதிரான எலிமினேட்டர் நாக் அவுட் போட்டியில் 208 ரன்களை துரத்திய போது 19 ஓவர்கள் வரை பேட்டிங் செய்த அவர் 79 (58) ரன்களை எடுத்தாலும் 136.31 என்ற சுமாரான ஸ்டிரைக் ரேட்டில் எடுத்ததே தோல்வியை பரிசளித்ததாக பல ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் கடுமையாக விமர்சித்தனர்.

- Advertisement -

ஆர்பி சிங் ஆதரவு:
அதன் காரணமாக “செல்பிஷ் பேட்டிங் செய்கிறார்” என்று நிறைய ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சித்தனர். அத்துடன் 20 ஓவர்கள் முழுமையாக பேட்டிங் செய்து கடைசி வரை அவுட்டாகாமல் 60 ரன்களுடன் வந்தாலும் குறைவான ஸ்டிரைக் ரேட்டில் எடுப்பது எந்த பயனுமில்லை என்று முன்னாள் ஜாம்பவான் கேப்டன் கபில் தேவ் நேற்று முன்தினம் கடுமையாக விமர்சித்தார். இந்த நிலைமையில் வெற்றிக்காக போட்டியின் சூழலுக்கேற்ப கேஎல் ராகுல் பேட்டிங் செய்கிறார் என்பதால் ஸ்ட்ரைக் ரேட் என்பது ஒரு பொருட்டல்ல என்று முன்னாள் இந்திய வீரர் ஆர்பி சிங் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

RP-Singh

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “கேஎல் ராகுல் நுணுக்கத்தில் சிறப்பானவர். அந்தக் குறிப்பிட்ட நாளில் எந்த பவுலரை அடிக்கலாம் என்பது போன்ற போட்டியை பற்றிய விழிப்புணர்வை தெரிந்தவர். ஒருவேளை அவர் 25 பந்துகளில் 25 ரன்களில் அவுட்டாகிவிட்டால் உடனே மணிஷ் பாண்டே போல் விளையாடுகிறார் என்று நாம் விமர்சிப்போம். ஆனால் அவர் அனைத்து இடங்களையும் நிரப்புகிறார். அவர் தனது விக்கெட்டையும் இழக்காமல் எப்போது அதிரடியாக அடிக்க வேண்டும் என்று தெரிந்து வைத்துள்ளார்”

- Advertisement -

“சொல்லப்போனால் கேஎல் ராகுல் பேட்டிங்கில் மெதுவாக துவங்கினாலும் 20 ஓவர்கள் முழுமையாக நின்றால் சதம் அடிக்க கூடிய ஒரு பேட்ஸ்மேன் ஆவார். நீங்கள் 60 பந்துகளில் 100 ரன்கள் எடுக்கிறீர்கள் என்றால் போட்டியை சரியாக படித்து உங்கள் இன்னிங்சை சரியான வேகத்தில் விளையாடுகிறீர்கள் என்று அர்த்தம்” என கூறினார். அதாவது அதிரடியாக விளையாட போய் திடீரென்று அவுட்டாகிவிட்டால் தோல்வி அடைவதற்கு அதிக வாய்ப்புள்ளது என்பதாலேயே கேஎல் ராகுல் மெதுவாக பேட்டிங் செய்கிறார் என்று ஆர்பி சிங் ஆதரவு அளித்துள்ளார்.

இதையும் படிங்க : சச்சின், ஜேக் காலிஸ் பிடிக்கும் ஆனால் என்னுடைய ரோல் மாடல் அவர்தான் – வித்யாசமானவரை பின்பற்றும் ஹர்டிக் பாண்டியா

ஆனால் மெதுவாக தொடங்கினாலும் அதற்கேற்றார் போல் நேரம் செல்ல செல்ல அதிரடியாக விளையாடி சதமடிக்கும் திறமையை கேஎல் ராகுல் பெற்றுள்ளதால் ஸ்ட்ரைக் ரேட் என்பது ஒரு பொருட்டல்ல என்று ராகுல் மீதான விமர்சனங்களுக்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார். மேலும் வெற்றிக்காக பதுங்கி பாயும் யுக்தியைப் போல் எந்த பவுலரை எப்போது அடிக்கலாம் என்பது போன்ற நுணுக்கங்களை தெரிந்து வைத்து சரியாக பயன்படுத்தும் கேஎல் ராகுல் சிறப்பான பேட்ஸ்மேன் என்று அவர் மனதார பாராட்டியுள்ளார்.

Advertisement