சச்சின், ஜேக் காலிஸ் பிடிக்கும் ஆனால் என்னுடைய ரோல் மாடல் அவர்தான் – வித்யாசமானவரை பின்பற்றும் ஹர்டிக் பாண்டியா

- Advertisement -

நவீன கிரிக்கெட்டில் இந்தியாவின் நட்சத்திர ஆல்-ரவுண்டராக கருதப்படும் ஹர்திக் பாண்டியா 2017 – 2019 வாக்கில் 3 வகையான இந்திய அணியிலும் முதன்மை வேகப்பந்து வீச்சாளராக வலம் வந்தார். மிடில் ஆர்டரில் கடைசி நேரத்தில் களமிறங்கி அதிரடியாக ரன்களைக் குவித்து பினிஷிங் செய்த இவர் தோனிக்கு பின் பினிஷராக பார்க்கப்பட்டார். அதேபோல் பந்துவீச்சில் மிரட்டிய இவர் ஜாம்பவான் கபில் தேவுக்கு பின் ஒரு நல்ல ஆல்-ரவுண்டர் கிடைத்து விட்டார் என்ற மகிழ்ச்சியை இந்திய ரசிகர்களிடம் ஏற்படுத்தினார். ஆனால் அதன்பின் காயமடைந்து திரும்பிய அவர் பந்து வீச தடுமாறியதுடன் பேட்டிங்கிலும் சுமாராக செயல்பட்டதால் இந்திய அணியிலிருந்து கழற்றி விடப்பட்டார்.

- Advertisement -

இருப்பினும் மனம் தளராமல் தொடர்ந்து பயிற்சி எடுத்து வந்த அவர் சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் 2022 தொடரில் அனுபவம் இல்லாத போதிலும் கேப்டனாக பொறுப்பேற்ற முதல் வருடத்திலேயே குஜராத்தை மிகச் சிறப்பாக வழிநடத்தி கோப்பையை வென்று காட்டியுள்ளார். மேலும் பைனலில் 34 ரன்கள் மற்றும் 3 விக்கெட்டுகள் உட்பட மொத்தம் 487 ரன்களையும் 8 விக்கெட்களையும் எடுத்து ஒரு மிகச்சிறந்த ஆல்-ரவுண்டராக மீண்டும் பார்முக்கு திரும்பிய அவர் தன் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

மீண்டும் பாண்டியா:
அதனால் எந்தவித கேள்வியுமின்றி மீண்டும் இந்திய அணிக்கு தேர்வாகியுள்ள அவர் விரைவில் நடைபெறும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் நீண்ட நாட்கள் கழித்து விளையாட உள்ளார். பொதுவாகவே இவரைப் போன்ற தரமான இளம் வீரர்கள் தங்களது இளம் வயதில் அந்த சமயங்களில் விளையாடிய ஜாம்பவான் வீரர்களைப் பார்த்து உத்வேகமடைந்து கிரிக்கெட் விளையாட துவங்கியிருப்பார்கள். அதிலும் தற்போது கிரிக்கெட்டில் விளையாடும் நிறைய பேட்ஸ்மேன்கள் உங்களது ரோல் மாடல் யார் என்று கேட்டால் உடனடியாக ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், பிரைன் லாரா போன்றவர்களை கை காட்டுவார்கள்.

pandya

அதேபோல் பந்துவீச்சாளர்கள் என்றால் முத்தையா முரளிதரன், ஷேன் வார்னே ஆகியோரையும் ஆல்-ரவுண்டர்கள் என்றால் ஜாக் காலிஸ், கபில் தேவ் ஆகியோரையும் தங்களது ரோல் மாடல்களாக வைத்திருப்பார்கள். ஆனால் ஹர்திக் பாண்டியா தனது பேட்டிங் ரோல் மாடலாக சர்வதேச கிரிக்கெட்டில் பெரிய அளவில் சோபிக்காத முன்னாள் இந்திய வீரர் வாசிம் ஜாபரை வைத்திருப்பதாக கூறியுள்ளது ஆச்சரியமாகவும் வித்தியாசமாகவும் உள்ளது.

- Advertisement -

ரோல் மாடல் வாசிம் ஜாபர்:
இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “எனக்கு ஜேக் காலிஸ், விராட் கோலி, சச்சின் சார் ஆகியோரை மிகவும் பிடிக்கும். அதேபோல் நீங்கள் தேர்வு செய்வதற்கு நிறைய ஜாம்பவான்கள் உள்ளனர். ஆனால் உண்மையை சொல்ல வேண்டுமெனில் எனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாபர் ஆவார். அவரை இதர ஜாம்பவான்களை விட சற்று உயர்வாகவே மதிக்கிறேன். அவரின் பேட்டிங்கை காப்பி அடிப்பதற்கு நிறைய முறை முயற்சித்துள்ளேன். ஆனால் எப்போதும் அவரின் கிளாஸ் எனக்கு கிடைத்ததில்லை” என்று வெளிப்படையாக பேசினார்.

jaffer6

கடந்த 2000 – 2008 வாக்கில் இந்தியாவுக்காக 31 டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக 1944 ரன்களைக் குவித்த வாசிம் ஜாபர் தென்னாப்பிரிக்கா, வங்கதேசம் போன்ற நாடுகளில் சதங்களை அடித்த நல்ல பேட்ஸ்மேன் என்று கூறலாம். இருப்பினும் சர்வதேச அளவில் தொடர்ச்சியாகவும் பெரிய அளவிலும் வாய்ப்பு பெறாத அவர் உலக அளவில் ஜொலிக்க முடியாத நட்சத்திரமாக கருதப்படுகிறார். இருப்பினும் உள்ளூர் கிரிக்கெட்டில் குறிப்பாக ரஞ்சி கோப்பையில் 10000 ரன்களை எடுத்த முதல் பேட்ஸ்மேன் என்ற மகத்தான சாதனை படைத்துள்ள அவர் மொத்தம் 260 முதல் தர போட்டிகளில் 19410 ரன்களை குவித்து தன்னிடம் திறமை உள்ளது என்று நிரூபித்தவர்.

- Advertisement -

அதிலும் ஓய்வு பெற்றதற்கு பின்பு ஐபிஎல் தொடரிலும் ரஞ்சி கோப்பையிலும் பயிற்சியாளராக செயல்பட்டு வரும் அவர் சமூக வலைதளங்களில் மைக்கேல் வாகன் உட்பட வெளிநாட்டவர்கள் இந்தியா மீது கை வைத்தால் அவர்களை கலாய்க்கும் வகையில் தக்க பதிலடி கொடுப்பவராக ரசிகர்களிடையே புகழ் பெற்றுள்ளார்.

இதையும் படிங்க : எடுத்த எடுப்பில் அவருக்கு வாய்ப்பு கொடுக்க முடியாது. கொஞ்சம் வெயிட் பண்ணட்டும் – கோச் டிராவிட் அதிரடி

அதேபோல் தனது சகோதரர் க்ருனால் பாண்டியாவை பற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு. “க்ருனால் மற்றும் நான் இருவரும் ஒருவருக்கொருவரின் முதுகெலும்பு போன்றவர்கள். நாங்கள் கிரிக்கெட் மற்றும் வாழ்க்கையை பற்றி நிறைய பேசுவோம். இருப்பினும் நாங்கள் இருவரும் எப்போதுமே எதிரியாக நினைத்து கொள்வது கிடையாது. ஏனெனில் கிரிக்கெட்டில் எங்களது வேலைகள் வெவ்வேறானது” என்று கூறினார்.

Advertisement