எடுத்த எடுப்பில் அவருக்கு வாய்ப்பு கொடுக்க முடியாது. கொஞ்சம் வெயிட் பண்ணட்டும் – கோச் டிராவிட் அதிரடி

Umran Malik Rahul Dravid
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடர் நிறைவு பெற்றதை அடுத்து தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி பங்கேற்கும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வரும் ஜூன் 9-ஆம் தேதி துவங்குகிறது. அந்த தொடரில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற ஒருசில மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் கேஎல் ராகுல் தலைமையில் சமீபத்திய ஐபிஎல் தொடரில் அசத்திய வீரர்களுடன் இந்திய அணி களமிறங்குகிறது. குறிப்பாக முதல் வருடத்திலேயே கேப்டன்ஷிப் அனுபவம் இல்லாத போதிலும் கோப்பையை வென்று ஆல்-ரவுண்டராக அசத்திய ஹர்திக் பாண்டியா, பினிஷராக மிரட்டிய தமிழகத்தின் தினேஷ் கார்த்திக் போன்றவர்கள் கம் பேக் கொடுத்துள்ளார்.

Umran Malik Pace

உம்ரான் மாலிக்:
அத்துடன் இந்த ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய 22 வயது இளம் வீரர் உம்ரான் மாலிக் தனது அசுர வேக பந்துகளால் எதிரணியினரை திணறடித்து உலக அளவில் பல ஜாம்பவான்களின் பாராட்டுகளைப் பெற்று இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். 150 கி.மீ வேகப்பந்துகளை அசால்டாக வீசக் கூடிய திறமை பெற்றுள்ள அவர் டெல்லிக்கு எதிரான போட்டியில் 157.0 கி.மீ வேகத்தில் வீசி ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமான பந்தை வீசிய இந்திய பவுலராக சாதனை படைத்தார். மேலும் ஹைதராபாத் பங்கேற்ற 14 போட்டிகளிலும் அதிவேகமான பந்தை வீசி அதற்காக 14 லட்சங்கள் பரிசாக வென்ற அவர் எதிரணி பேட்ஸ்மேன்களின் ஸ்டம்ப்களை தெறிக்கவிட்டார்.

- Advertisement -

அப்படி வேகத்தில் மிரட்டிய அவரை நேரடியாக அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தேர்வு செய்யுமாறு சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்திரி போன்ற முன்னாள் வீரர்கள் கேட்டுக்கொண்டனர். அதற்கிணங்க இந்த டி20 தொடரில் முதல் முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ள அவர் இதில் சிறப்பாக செயல்பட்டால் மேற்கொண்டு இந்திய அணியில் உறுதியாக இடத்தை பெற உள்ளார் என்று தெரிகிறது. மேலும் ஜஸ்பிரித் பும்ரா போன்ற முக்கிய பவுலர் ஓய்வில் உள்ளதால் இவருக்கு இந்த தென் ஆப்ரிக்க தொடரில் 5 போட்டியிலும் நேரடியாக வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Dravid

அர்ஷிதீப் சிங் மறக்காதீங்க:
இந்நிலையில் தென் ஆப்ரிக்க தொடரில் எடுத்த எடுப்பில் நேரடியாக உம்ரான் மாலிக்க்கு வாய்ப்பு கொடுத்து விட்டால் இதே ஐபிஎல் அவரை விட வேகத்துடன் விவேகத்தையும் பயன்படுத்தி அற்புதமாக பந்து வீசிய அர்ஷிதீப் சிங் மற்றும் சீனியர்கள் எங்கே போவார்கள் என பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கேள்வி எழுப்பியுள்ளார். எனவே நிதானமாகத்தான் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ள அவர் இது பற்றி இன்று நிகழ்ந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அவர் (உம்ரான்) வேகமாக பந்துவீசினார். இந்த ஐபிஎல் தொடரை வெளியிலிருந்து பார்த்த எனக்கு நிறைய இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டதாக தோன்றியது. மேலும் 3 வகையான இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருக்கும் எனக்கு அவர்களை டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் பார்த்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் உம்ரானை வலைப்பயிற்சியில் பார்த்தபோது அபாரமாக செயல்பட்டார். அவரிடம் வேகம் இருப்பது நன்றாக பார்க்க முடிக்கிறது”

“மிகவும் இளம் பயனாக இருக்கும் அவர் கற்றுக்கொண்டு முன்னேற்றமடைந்து வருகிறார். அவர் நிறைய விளையாடினால் நிறைய முன்னேறுவார். அவரைப் போன்ற ஒருவர் நமது அணியில் இருப்பது மகிழ்ச்சியானது. அவருக்கு எந்த அளவுக்கு வாய்ப்பு கொடுக்க முடியும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். அதே சமயம் மிகப்பெரிய அணியை கொண்டுள்ள நம்மால் எதார்த்த அடிப்படையில் அனைவருக்கும் வாய்ப்பளிக்க முடியாது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

“மேலும் நான் எப்போதும் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்படுவர்களை விரும்புபவன். எனவே அர்ஷிதீப் சிங் இருக்கும்போது உம்ரானுக்கு எந்த அளவுக்கு வாய்ப்பளிக்கும் முடியும் என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். அதேபோல் புவனேஸ்வர் குமார், ஹர்ஷல் படேல், அவேஷ் கான் போன்ற அனுபவம் மிக்கவர்களும் நம்முடன் உள்ளனர். எனவே அனுபவம் மற்றும் இளமை கலந்த கலவை நமக்கு தேவைப்படுகிறது” என்று கூறினார்.

dravid

அவர் கூறுவது போல இந்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடிய அர்ஷிதீப் சிங் வேகத்துடன் விவேகமாக கடைசி கட்ட ஓவர்களில் கூட குறைவான ரன்களைக் கொடுத்து துல்லியமாக பந்து வீசினார். அதிலும் ரபாடா போன்ற உலகத்தரம் வாய்ந்த பவுலரை காட்டிலும் அட்டகாசமாக தொடர்ச்சியாக சிறப்பாக பந்து வீசினார்.

இதையும் படிங்க : வரலாற்றில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதிக டி20 ரன்கள் குவித்த டாப் 5 இந்திய பேட்ஸ்மேன்களின் பட்டியல்

மறுபுறம் வேகத்தில் மிரட்டினாலும் பெரும்பாலும் ரன்களை வாரி வழங்கிய உம்ரான் மாலிக் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்படவில்லை என்பதும் நிதர்சனம். அத்துடன் புவனேஸ்வர், ஹர்ஷல் படேல் போன்ற சீனியர்களும் இருப்பதால் அவருக்கு யோசித்து தான் வாய்ப்பு வழங்கப்படும் என்று டிராவிட் தெரிவித்துள்ளார்.

Advertisement