IND vs ENG : விராட் கோலியை பின்பற்றாதிங்க , 3வது போட்டியில் தோல்வியை தவிர்க்க கேப்டன் ரோஹித்துக்கு முன்னாள் வீரர் கோரிக்கை

Rohith Pant
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் அனலாக பந்து வீசிய இந்தியா அந்த அணியை 110 ரன்களுக்கு சுருட்டிய 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆனால் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 2-வது போட்டியில் இங்கிலாந்து நிர்ணயித்த 247 ரன்கள் இலக்கை துரத்துகையில் பேட்டிங்கில் சொதப்பிய இந்தியா 146 ரன்களுக்கு சுருண்டு 100 ரன்கள் வித்தியாசத்தில் மெகா தோல்வியை சந்தித்தது. அதனால் 1 – 1* (3) என்ற கணக்கில் சமனில் உள்ள இந்த தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 3-வது போட்டி ஜூலை 17இல் நடைபெறுகிறது.

RIshabh Pant Poor Batting

- Advertisement -

முன்னதாக லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 2-வது போட்டியில் பேட்டிங்க்கு சாதகமான பிட்ச்சில் ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் என அனைத்து தரமான இங்கிலாந்து பேட்ஸ்மேன்களையும் பெரிய ரன்களை எடுக்க விடாமல் இந்திய பவுலர்கள் தரமாக பந்துவீசி கட்டுப்படுத்தினார்கள். ஆனால் முதல் போட்டியில் 117 ரன்கள் இலக்கை தொடக்க வீரர்களே சேசிங் செய்த இந்தியாவுக்கு 2-வது போட்டியில் மொத்தமாக சொதப்பிய பேட்ஸ்மேன்கள் பெரிய தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தனர். அதிலும் ரோகித் சர்மா 0, ஷிகர் தவான் 9 என தொடக்க வீரர்கள் அவுட்டான நிலைமையில் களமிறங்கிய விராட் கோலிக்கு பின்பாக ரிஷப் பண்ட் 4-வது இடத்தில் களமிறக்கப்பட்டது அனைவருக்கும் ஆச்சரியமாக அமைந்தது.

தவறான முடிவு:
ஏனெனில் என்னதான் டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் வெளுத்து வாங்கி அற்புதமான பார்மில் இருந்தாலும் கேரியர் துவங்கிய 2018 முதல் இப்போதுவரை ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் எந்த இடத்திலும் எந்த போட்டியிலும் அவர் சிறப்பாக செயல்பட்டதே கிடையாது. மேலும் இதற்கு முன்பாக நடந்த டி20 தொடரில் வித்தியாசமான முயற்சியாக முதல் முறையாக தொடக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்ட நிலையில் அதிலும் அவர் சுமாராகவே செயல்பட்டார்.

Suryakumar yadhav

அப்படிப்பட்ட நிலையில் சமீப காலங்களில் அபாரமாக செயல்பட்டு விராட் கோலிக்கு அடுத்ததாக 4-வது இடத்தில் விளையாடும் அளவுக்கு சூர்யகுமார் யாதவ் தன்னை நிரூபித்துள்ளார். அத்துடன் இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் தடுமாறியபோது தனி ஒருவனாக சதமடித்து 117 ரன்கள் குவித்து போராடிய அவர் இந்தியாவை கிட்டத்தட்ட வெற்றியின் விளிம்பு வரை அழைத்துச் சென்று தற்போது அட்டகாசமான பார்மில் உள்ளார். அப்படிப்பட்ட அவர் அந்த போட்டியில் 5-வது இடத்தில் களமிறங்கி 27 ரன்கள் எடுத்து மீண்டும் போராடி ஆட்டமிழந்தார். ஆனால் 4-வது இடத்தில் களமிறங்கிய ரிஷப் பண்ட் டக் அவுட்டாகி மீண்டும் ஏமாற்றினார்.

- Advertisement -

கோலியை பின்பற்றுங்க:
இந்நிலையில் வெற்றியாளரை தீர்மானிக்கப்போகும் 3-வது போட்டியில் அதே தவறை கேப்டன் ரோகித் சர்மா மீண்டும் செய்யக்கூடாது என்று முன்னாள் இந்திய வீரர் ஆர்பி சிங் கேட்டுக்கொண்டுள்ளார். அத்துடன் கடந்த காலங்களில் இதுபோன்ற தவறுகளை முன்னாள் கேப்டன் விராட் கோலி செய்ததாக தெரிவிக்கும் அவர் எப்போதும் நல்ல பார்மில் இருக்கும் வீரர்களை முன்கூட்டியே அனுப்பி செட்டிலாகி பெரிய ரன்களை எடுக்கும் வாய்ப்பை கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Rohith

இதுபற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “இதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. நீங்கள் சூர்யகுமார் யாதவை 4-வது இடத்தில் விளையாடியிருக்க வேண்டும். ஏனெனில் கடந்த காலங்களில் விராட் கோலி தனது பேட்டிங் இடத்தை அடிக்கடி மாற்றினார். பெரும்பாலான போட்டிகளில் 3-வது இடத்தில் விளையாடிய அவர் நிறைய போட்டிகளில் தன்னுடைய இடத்தில் கேஎல் ராகுலை விளையாட வைத்ததை எடுத்துக்காட்டாகக் கூறலாம்”

“எனவே உங்களது அணியில் நல்ல பார்மில் செட்டாகியிருக்கும் பேட்ஸ்மேன் இருந்தால் நீங்கள் அவரை சுதந்திரமாக விளையாட வேண்டிய இடத்தில் விளையாட வைக்க வேண்டும். ஒரு நல்ல பேட்ஸ்மேன் எந்த இடத்திலும் சிறப்பாக விளையாடுவார் என்று நிறைய பேர் கூறுவார்கள். ஆனால் நான் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனெனில் அவர் அந்த குறிப்பிட்ட இடத்தில் அதிகம் விளையாடி பழகியிருப்பார். அதுபோக அவர் களமிறங்கும் போது பந்தின் நிலைமை எப்படி உள்ளது போன்ற நிறைய சூழ்நிலை காரணிகள் உள்ளதை பார்க்க வேண்டும்” என்று கூறினார்.

RP-Singh

முந்தைய காலங்களில் விராட் கோலி கேப்டன்ஷிப் செய்தபோது இதேபோல் சூழ்நிலைக்கு ஏற்றவாறு பேட்ஸ்மேன்களை மாற்றி மாற்றி களமிறக்கும் யுக்தியை அதுவும் ரிஷப் பண்ட் போன்ற வீரரை நம்பி ரோகித் சர்மா பின்பற்ற வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளும் ஆர்பி சிங் அடுத்த போட்டியில் சூர்யகுமார் யாதவை அவருக்கு பிடித்த 4-வது இடத்தில் களமிறக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

Advertisement