இவர் இந்திய அணிக்கு திரும்பினால் வேறலெவல் தான். அப்புறம் அவங்களுக்கு தான் வெற்றி – ராஸ் டெய்லர் பேட்டி

Taylor
- Advertisement -

கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடந்த ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணியும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் நியூசிலாந்து அணியும் வெற்றி பெற்றன.

INDvsNZ

- Advertisement -

இதனை அடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை வெலிங்டனில் துவங்குகிறது. இதற்கு முன்பாக நியூசிலாந்து அணியின் முன்னணி வீரர் ராஸ் டெய்லர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அதில் அவர் பேசியதாவது : நாங்கள் பும்ராவை மட்டுமே குறிவைத்து ஆடினால் எங்களது பேட்ஸ்மேன்கள் சிக்கலுக்கு உள்ளாவார்கள்.

ஏனென்றால் இந்தியாவின் அனைத்து பந்து வீச்சாளர்களும் சிறப்பாக பந்துவீச கூடியவர்கள் அவர்களும் இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கிறார்கள். மேலும் ரோகித் சர்மா மீண்டும் அணிக்கு திரும்பினால் இந்திய அணி வேறு மாதிரி இருக்கும். ஏனென்றால் இந்திய அணியில் உலகத்தரமான பேட்ஸ்மேன்கள் பேட்டிங் வரிசையை பலப்படுத்துகின்றனர். மேலும் பேட்டிங் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் அவர்களுக்கு மட்டுமே வெற்றி கிட்டும் என்று ராஸ் டைலர் கூறினார்.

taylor 1

டெய்லருக்கு நாளை நடைபெற உள்ள இந்திய அணியுடனான டெஸ்ட் போட்டி 100வது டெஸ்ட் போட்டியாகும் இது குறித்து பேசிய அவர் : நூறாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. முன்னாள் வீரர்கள் பலர் எனக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். ரன் எடுக்கும் தாகம் எனக்கு இன்னும் அடங்கவில்லை தொடர்ந்து சிறப்பாக விளையாடும் என்று நினைக்கிறேன் என்று டெய்லர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement