ஐ.சி.சி யின் இந்த ரூல்ஸ் அபத்தமானது. கொஞ்சம் யோசிச்சி பாருங்க – ஐ.சி.சி க்கு புதிய ஐடியா கொடுத்த ராஸ் டெய்லர்

Taylor
- Advertisement -

இங்கிலாந்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை இங்கிலாந்து அணி சூப்பர் ஓவர் வரை துரத்திச் சென்று இறுதியில் பவுண்டரிகளின் அடிப்படையில் வெற்றி பெற்றது. போட்டி டை ஆனதும் வெற்றியை தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது.

England

- Advertisement -

அந்த சூப்பர் ஓவரும் டை ஆனதால் அதிகமுறை பவுண்டரி அடித்த அணியான இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த முடிவு குறித்து அப்போதே சர்ச்சை ஏற்பட்டது. கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் இடையே அதிர்ச்சியை இந்த விதிமுறை உருவாக்கியது. கடுமையான எதிர் விமர்சனங்களை எதிர்கொண்ட ஐசிசி இந்த விதியை தற்போது நீக்கி புதிய விதிமுறையையும் வெளியிட்டது.

அதன்படி சூப்பர் ஓவரில் போட்டி டையில் முடிந்தால் எத்தனை முறை வேண்டுமானாலும் சூப்பர் ஓவர் மீண்டும் மீண்டும் நடக்கும் என்ற புதிய விதிமுறையை அறிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது ஒருநாள் போட்டிகளில் சூப்பர் ஓவர் முறையை கைவிட வேண்டும். ஒருநாள் போட்டி நீண்ட நேரம் விளையாடக்கூடிய வகையில் உள்ளது. அதனால் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்று நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் தெரிவித்துள்ளார்.

taylor 1

மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில் : டி20 போட்டிகளில் சூப்பர் ஓவர் முறையை கடைபிடிப்பது சரியான முடிவுதான். ஏனெனில் அது போன்ற குழப்பமான வேளைகளில் இந்த சில விதிமுறைகள் தேவையானதாக உள்ளன. ஆனால் ஒருநாள் போட்டிகளில் அவ்வாறு கிடையாது. ஒருநாள் போட்டிகளில் போட்டி டிரா ஆனால் இரு அணிகளுக்கும் புள்ளிகளை சரியாக பகிர்ந்து கொடுக்க வேண்டும்.

- Advertisement -

மேலும் தொடரின் இறுதி போட்டியில் டையானால் கோப்பையை பகிர்ந்து கொடுப்பதிலும் ஒரு பிரச்சினையும் வரப்போவதில்லை என்று ராஸ் டெய்லர் தெரிவித்துள்ளார். மேலும் ஒருநாள் போட்டிகளில் இறுதிப்போட்டியில் டை ஆவது அரிதிலும் அரிதான நிகழ்வு எனவே அவ்வாறு நடக்கும் போது கோப்பையை பகிர்ந்து கொடுத்தால் எந்த ஒரு சிக்கலையும் அந்த முடிவு ஏற்படுத்தாது என்று கூறியுள்ளார்.

Taylor-3

ஏற்கனவே நியூசிலாந்து அணி இதுவரை 8 சூப்பர் ஓவர்களில் பங்கேற்று விளையாடி உள்ளது. அதில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே அவர்கள் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. நியூசிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் ராஸ் டெய்லரின் இந்த கோரிக்கையை ஐ.சி.சி யிடம் கொண்டு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement