ராஜஸ்தான் அணியில் விளையாடியபோது அவர் என்னை 3-4 முறை கன்னத்தில் அறைந்தார் – ராஸ் டெய்லர் குற்றச்சாட்டு

Taylor-2
- Advertisement -

நியூசிலாந்து அணியை சேர்ந்த நட்சத்திர அதிரடி ஆட்டக்காரரான ராஸ் டைலர் நியூசிலாந்து அணிக்காக கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை 112 டெஸ்ட் போட்டிகள், 236 ஒருநாள் போட்டிகள் மற்றும் 102 டி20 போட்டிகளில் பங்கேற்று விளையாடியுள்ளார். அது தவிர்த்து ஐபிஎல் தொடரிலும் 2008-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரை 55 போட்டிகளில் விளையாடியுள்ளார். சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அவர் கிரிக்கெட் கரியரில் தான் சந்தித்த தருணங்கள் குறித்து சில கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்.

taylor 1

- Advertisement -

அந்த வகையில் தற்போது ஐபிஎல் தொடரின் போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய வேளையில் ராஜஸ்தான் அணியை சேர்ந்த உரிமையாளர்களில் ஒருவர் தன்னை கன்னத்தில் அறைந்ததாக சில மோசமான சம்பவங்களை அவர் தற்போது பகிர்ந்துள்ளார். அந்த வகையில் ராஜஸ்தான் அணிக்காக அவர் விளையாடிய போது அந்த சம்பவம் நிகழ்ந்ததாக குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : புதிதாக ஒரு வீரர் ஒரு அணிக்கு செல்லும் போது அங்குள்ள சூழலையும், சாதகங்களையும் புரிந்து கொள்வதற்கு நேரம் எடுக்கும்.

அப்படி ஒரு வேளையில் நான் ராஜஸ்தான் அணியில் விளையாடிய போது ஒரு மோசமான சம்பவத்தை எதிர்கொண்டேன். அந்த வகையில் பஞ்சாப் அணிக்கு எதிராக 195 ரன்கள் என்கிற பெரிய இலக்கினை துரத்தும் போது நான் டக்அவுட் ஆகிவிட்டேன். அந்த ஆட்டத்தில் நாங்கள் தோற்றதன் பிறகு அணி நிர்வாகிகள், வீரர்கள் என அனைவரும் ஒரு ஹோட்டலில் உள்ள பாருக்கு சென்றிருந்தோம்.

Ross Taylor

அப்போது எங்களுடன் அணியின் கேப்டன் ஷேன் வார்னேவும் வந்திருந்தார். அந்த நேரத்தில் ராஜஸ்தான் அணியின் உரிமையாளர்களின் ஒருவர் என்னிடம் வந்து ராஸ் டெய்லர் நீ டக் அவுட் ஆவதற்கா உனக்கு நாங்கள் கோடிகளில் சம்பளம் கொடுக்கிறோம் என்று கூறி கன்னத்தில் மூன்று நான்கு முறை அடித்தார். அது கடினமான அறை இல்லை என்றாலும் முழுவதுமாக அது ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு இல்லை.

- Advertisement -

இப்போதும் நான் அந்த விஷயத்தை பெரிது படுத்த விரும்பவில்லை என்றாலும் தொழில் முறை விளையாட்டுகளில் இது போன்று நடப்பதை என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை என்று தனது வேதனையை அவர் பகிர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ஆசியக்கோப்பை : என்னை தூக்குனதும் நல்லது தான். வாய்ப்பு பறிக்கப்பட்டது குறித்து வாய்திறந்த – இஷான் கிஷன்

ஐபிஎல் தொடரில் 2008 ஆம் ஆண்டு முதல் 2010 ஆண்டு வரை பெங்களூரு அணிக்காக விளையாடிய ராஸ் டெய்லர் 2011 ஆம் ஆண்டு ராஜஸ்தான் அணிக்காகவும், அதன் பிறகு டெல்லி அணிக்காகவும், பின்னர் புனே அணிக்காகவும் விளையாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement