டி20 வேர்ல்டுகப் : இந்தியாவுக்கு சேன்ஸ் இருக்கு. ஆனா ஜெயிக்கபோறது அந்த டீம் தான் – ராஸ் டெய்லர் கணிப்பு

Taylor
- Advertisement -

நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரரான ராஸ் டைலர் சமீபத்தில் நியூசிலாந்து கிரிக்கெட் அணியில் இருந்து ஓய்வினை அறிவித்தார். அதனை தொடர்ந்து தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் லெஜென்ட்ஸ் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வரும் அவர் எதிர்வரும் டி20 உலக கோப்பை குறித்தும், விராட் கோலி குறித்தும் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். இது குறித்து அவர் கூறுகையில் :

Virat Kohli

ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாடும்போது விராட் கோலியுடன் நிறைய நேரத்தை செலவிட்டுள்ளேன். அவருடன் இருந்த அனுபவங்களை மிகவும் ரசித்தேன். டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக சரியான நேரத்தில் விராட் கோலி பார்மிற்கு திரும்பி உள்ளார். அவரது இந்த ஆட்டம் இந்திய அணிக்கு நிச்சயம் பலத்தை சேர்க்கும்.

- Advertisement -

இனிவரும் ஆண்டுகளிலும் அவர் நிறைய சதங்களை அடிப்பார் என்று உறுதியாக நம்புகிறேன். எதிர்வரும் இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இன்னும் பல திறமையான வீரர்களின் பெயர்கள் வெளிப்படும் என்று நான் நினைக்கிறேன். கோலி மீண்டும் பார்முக்கு திரும்பி இருப்பதும், அணியில் நிறைய நட்சத்திர வீரர்கள் இருப்பதும் இந்திய அணிக்கு சாதகமான ஒன்று.

INDvsAUS

எனவே இந்திய அணி கோப்பையை வெல்லவும் வாய்ப்பு உள்ளது. மேலும் சொந்த மண்ணில் சமீபகாலமாகவே இந்திய அணி விளையாடிய விதம் உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக அவர்களுக்கு நிறைய நம்பிக்கையை கொடுத்திருக்கும்.

- Advertisement -

ஆனால் அதே வேளையில் நடப்பு சாம்பியனாக இந்த டி20 உலககோப்பை தொடரில் களமிறங்கும் ஆஸ்திரேலியா அணியானது சொந்த நாட்டிலேயே இந்த தொடரை அணுக உள்ளதால் அவர்களே சாம்பியன் பட்டம் வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது. அதோடு ஆஸ்திரேலிய அணியில் நிறைய மேட்ச் வின்னர்கள் இருப்பதாலும், பேட்டிங் மற்றும் பவுலிங் என சரியான கலவையில் பலமான வீரர்கள் இருப்பதனாலும் அவர்களுக்கு சாம்பியன் பட்டம் வெல்ல அதிகவாய்ப்புள்ளது என்று ராஸ் டெய்லர் கூறினார்.

இதையும் படிங்க : அந்த வியப்பான முடிவே ஐபிஎல் 2021 வெற்றிக்கு காரணம் – தோனியின் கேப்டன்ஷிப் பற்றி இந்திய வீரர் வியப்பு

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : அவர்களை தவிர்த்து நியூசிலாந்து அணி அரையிறுதி வரை முன்னேறுவார்கள் என்று நினைக்கிறேன். ஏனெனில் கடந்த சில ஐசிசி தொடர்களாகவே அவர்கள் முதல் நான்கு இடத்திற்குள் வந்துள்ளனர். எனவே இம்முறையும் அவர்கள் நிச்சயம் முதல் நான்கு இடத்திற்குள் வருவார்கள் என்று ராஸ் டெய்லர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement