சர்வதேச கிரிக்கெட் அரங்கில் வேறு யாரும் செய்த இமாலய சாதனையை படைத்த ராஸ் டெய்லர் – விவரம் இதோ

Taylor-2
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று வெலிங்டன் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் முதலில் பந்து வீச்சை தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் மழை காரணமாக 55 ஓவர்கள் வீசி 5 விக்கெட்டுகளை இழந்து 122 ரன்களை எடுத்துள்ளது.

Taylor

- Advertisement -

இந்நிலையில் இன்று நியூசிலாந்து அணியின் முன்னணி வீரரான ராஸ் டெய்லர் தனது 100வது டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றார். இதுகுறித்து அவர் பேசியதாவது : இந்த தருணத்தை நான் நினைத்து ஆச்சரியப்படுகிறேன். இப்பொழுது எனக்கு நூறு பாட்டில் ஒயின் தேவை அதை பருக வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஆனால் அதை இப்போது கொஞ்ச நேரம் தள்ளி வைக்கலாம்.

ஏனெனில் இதுவரை நியூசிலாந்து அணிக்காக 100 போட்டிகளுக்கு மேல் விளையாடி பிளம்மிங் மெக்கல்லம், டேனியல் வெட்டோரி ஆகியோர் கடைப்பிடித்த பாரம்பரிய நான் காப்பாற்ற விரும்புகிறேன். மேலும் இந்த 100வது டெஸ்ட் போட்டியை நிச்சயம் வெற்றியுடன் கொண்டாடுவோம் என்று நினைக்கிறேன் என்று டெய்லர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Taylor1

இந்நிலையில் இந்த போட்டியில் களமிறங்கியதன் மூலம் ராஸ் டெய்லர் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் வேறு யாரும் செய்யாத ஒரு சிறப்பான இமாலய சாதனையை நிகழ்த்தியுள்ளார். அதன்படி தற்போதைய கிரிக்கெட்டின் 3 வடிவங்களான டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆகிய மூன்று வடிவத்திலும் 100 போட்டிகளில் பங்கேற்ற முதல் சர்வதேச வீரர் என்ற பெருமையை ராஸ் டெய்லர் இந்த போட்டியின் மூலம் படைத்துள்ளார்.

Advertisement