- Advertisement -
உலக கிரிக்கெட்

தாய்நாட்டுக்காக ஓய்வை வாபஸ் பெற்ற ராஸ் டெய்லர்.. புதிய நாட்டுக்காக படைக்கப்போகும் தனித்துவ சாதனை

நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் ராஸ் டெய்லர் 2022லயே முன்பாகவே அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் ஓய்வு பெற்று விட்டார். 112 டெஸ்ட், 236 ஒருநாள், 102 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 18,000 மேற்பட்ட ரன்கள் குவித்து நியூசிலாந்தின் நிறைய வெற்றிகளில் பங்காற்றியுள்ளார். இந்நிலையில் தம்முடைய 2வது தாய் நாட்டுக்காக விளையாடும் நோக்கத்தில் ஓய்வு முடிவை திரும்ப பெறுவதாக டெய்லர் அறிவித்துள்ளார்.

அதாவது இந்தியா மற்றும் இலங்கையில் அடுத்த வருடம் 2026 டி20 உலகக் கோப்பை நடைபெற உள்ளது. அதற்கான தகுதி சுற்று தற்போது உலகம் முழுவதிலும் நடைபெற்று வருகின்றது. அதில் ஆசியா-கிழக்கு ஆசியா-பசிபிக் மண்டல நாடுகளுக்கான தகுதி சுற்று ஓமன் நாட்டில் வரும் அக்டோபர் மாதம் 8ஆம் தேதி துவங்குகிறது.

- Advertisement -

தாய்நாட்டுக்காக வரும் டெய்லர்:

அந்தத் தொடரில் விளையாடி வெற்றி கண்டால் மட்டுமே 2026 டி20 உலகக்கோப்பையில் விளையாடுவதற்கான வாய்ப்பை சமோவோ பெற முடியும். எனவே அத்தொடரில் சமோவா அணிக்காக விளையாட உள்ளதாக ராஸ் டெய்லர் அறிவித்துள்ளார். தெற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள சமாவோ எனும் தீவு நாடு நியூசிலாந்தின் அருகே இருக்கிறது.

சொல்லப்போனால் ஒரு காலத்தில் நியூசிலாந்து அந்த சிறிய நாட்டை ஆட்சி செய்தது. நாளடைவில் நியூசிலாந்திடம் அந்நாடு போராடி சுதந்திரம் பெற்றது. மறுபுறம் ராஸ் டெய்லர் தாயார் சமோவோ நாட்டைச் சேர்ந்தவர். எனவே தம்முடைய அம்மா பிறந்த நாட்டுக்காக 2026 டி20 உலகக் கோப்பை தகுதி சுற்றில் விளையாட முடிவெடுத்துள்ளதாக டெய்லர் அறிவித்துள்ளார்.

- Advertisement -

தனித்துவ சாதனை:

இதற்காக சமோவோ அரசிடம் பெற்றுள்ள பாஸ்போர்ட் மற்றும் சான்றிதழ்களை அவர் ஐசிசியிடம் சமர்ப்பித்துள்ளார். அதனால் தம்முடைய 2வது தாய் நாட்டுக்காக டெய்லர் விளையாடுவதற்கு ஐசிசி அனுமதித்துள்ளது. இதை அடுத்து அக்டோபர் 8ஆம் தேதி அத்த தொடரில் களமிறங்கும் போது 2 வெவ்வேறு நாடுகளுக்காக விளையாடிய வீரர்களில் ஒருவர் என்ற தனித்துவமான சாதனையை டெய்லர் படைப்பார்.

இதையும் படிங்க: மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைகிறாரா சஞ்சு சாம்சன்? மினி ஏலத்திற்கு முன்னர் ஏற்பட்டுள்ள டிவிஸ்ட் – விவரம் இதோ

இது பற்றி புகைப்படத்துடன் இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “ஓய்விலிருந்து அதிகாரப்பூர்வமாக திரும்புகிறேன். நீல நிற ஜெர்சியை அணிந்து சமோவோவை பிரதிநிதித்துவப்படுத்துகிறேன் என்பதை அறிவிப்பதில் பெருமைப்படுகிறேன். இது நான் விரும்பும் கிரிக்கெட் விளையாட்டிற்கு திரும்பும் அன்பான வாய்ப்பைக் கொடுத்துள்ளது. அத்துடன் எனது பாரம்பரியம், கலாச்சாரம், கிராமங்கள் மற்றும் குடும்பத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மிகப்பெரிய மரியாதையாகும்” என்று கூறியுள்ளார். அவருடைய இந்த முயற்சிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -